Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

Sunday, February 6, 2011

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இறால்கள்...



உலகில் மிகப்பிரபலமான உணவுகளில் இறால் உணவுகளும் உள்ளடங்குகின்றன. இறால்களினை எமது உணவுகளில் சேர்த்துக்கொள்வதனால் எம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். அவையாவன,

இறால்களில் சிலீனீயும் எனப்படும் ஒட்சிசனெதிரி, மற்றும் புரதச்சத்துக்கள், விற்றமின்களான B12 மற்றும் D ஆகியவையும் இரும்பு, மக்னீசியம், பொஸ்பரஸ், நாகம், செம்பு ஆகிய மூலகங்களும், ஒமேகா~3 கொழுப்பு எண்ணெய் போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.

இறால்களில் கொலஸ்ரோல் மட்டங்கள் குறிப்பிடத்தக்களவில் குறைவாகவே காணப்படுகின்றது. இறால்களில் உள்ள கொழுப்பு எண்ணெய்கள் சிறந்த கொலஸ்ரோலின் உருவாக்கத்திற்கு உந்துசக்தி அளிக்கின்றது.

இறால்களில் மிகக்குறைந்த அளவில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கியுள்ளதனால் உடல் நிறையினை கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது.

இறால்களில் ஒமேகா~3 அதிகளவில் காணப்படுகின்றது. ஒமேகா~3 ஆனது உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்படுதற்கும் உதவுகின்ற அதேவேளை இரத்தச் சுற்றோட்ட பிரச்சினைகளுக்கான ஆபத்தினை குறைப்பதற்கும் உதவிபுரிகின்றது.

இறால்களில் உள்ள விற்றமின் D ஆனது கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் ஆகியவற்றின் உட்கிரகித்தலினை ஒழுங்குபடுத்துகின்றது. இவை வலிமையான எலும்புகளுக்கும், பற்களுக்கும் முக்கியமானவையாகும்.

விற்றமின் B12 ஆனது மூளையின் தொழிற்பாடு ஒழுங்காக நடைபெறுவதற்கும், இரத்த கலங்கள் உருவாகுவதற்கும் அத்தியாவசியமானவையாகும்.

இறால்களில் உள்ள சிலீனீயும் ஒட்சிசனெதிரி, புற்று நோய்கள் மற்றும் ஏனைய கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.

இறால்களில் அதிகளவில் உள்ளடங்கியுள்ள Tryptophan அமினோ அமிலங்கள் ஓய்வு, நித்திரைக்கு உதவிபுரிகின்றது. Tryptophan குறைவடைவதலானது மனிதர்களில் நித்திரை, ஞாபகம், உற்சாகம் ஆகியவற்றில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.(serotonin மட்டங்கள் குறைவடைவதனாலாகும்)

***

Monday, December 20, 2010

தமக்கென சொந்தமான தேசியகீதம் இல்லாத நாடு......

சுவாரஷ்சியமான பல்சுவைத்தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக......



தமக்கென சொந்தமான தேசியகீதம் இல்லாத ஒரே நாடாக சைப்பிரஸ் விளங்குகின்றது. சைப்பிரஸ் நாடானது கிரேக்க நாட்டின் தேசியகீதத்தினையே பயன்படுத்துகின்றது.

உலகில் அதிக வரிகளினைக்(158வரிகள்) கொண்ட தேசியகீதம் கிரேக்க நாட்டினுடையதே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.


கிரேக்கம்

------------------------------------------------------

விடை பெற்றது "அட்லாண்டிஸ்" விண்கலம்


ஐக்கிய அமெரிக்காவின் "அட்லாண்டிஸ்" விண்கலம் தனது இறுதி விண்வெளிப் பயணத்தினை கடந்த மே 26ம் திகதியுடன் நிறைவுசெய்து கொண்டது. 1985ம் ஆண்டு ஒக்டோபர் 03ம் திகதி தனது முதல் விண்வெளிப் பயணத்தினை மேற்கொண்ட அட்லாண்டிஸ் விண்கலம் 32 விண்வெளிப் பயணங்களையும், 195 மில்லியன் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

------------------------------------------------------

அண்மைய மருத்துவ ஆய்வுத் தகவல்கள்.........
 கேம்பிரிட்ஜ் வெல்கம் நிதிய சன்கேர் நிறுவக ஆராய்ச்சியாளர் பீற்றர் கேம்பெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், நுரையீரல் புற்று நோயினை அதிகரிப்பதற்கு 15 சிகரெட்டுக்கள் போதுமானதாம் என கண்டறிந்துள்ளனர்.

 ஐக்கிய ராச்சியத்தின் அவேட்ரேய் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த உளவியலாளர் மைக் டவ்மேன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் ஒருவரின் தட்டச்சு பரிமாணத்தினைக் கொண்டு அவரின் அழுத்தங்களினை அறிந்துகொள்ளலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.

--------------------------------------------------------------

சச்சின் 50.....!!!


இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 50வது சதத்தினை தென்னாபிரிக்க அணிக்கெதிராக நேற்று பதிவுசெய்து உலக சாதனை படைத்தார். தனது 175வது டெஸ்ட் போட்டியில் சச்சின், இந்த மைற்கல்லினை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Thursday, December 16, 2010

மனித உடலுக்கு இதயம் ஆற்றுகின்ற உன்னத தொழிற்பாடுகள்




நாம் ஒரு நாளைக்கு 23000 தடவைகள் சுவாசிக்கின்றோம். அதன் மூலமாகவும் 450 கன அடி வளியினை உள்ளே எடுத்து வெளியே விடுகின்றோம். அந்த வளியிலிருந்து ஒட்சிசனை எடுத்து, உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பும் வேலையை இதயம் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றது.

நாளொன்றுக்கு ஒரு இலட்சம் தடவைகள் துடிக்கின்ற நமது இதயம் சராசரியாக 70 ஆண்டுகள் உயிர்வாழும் ஒரு மனிதனுக்கு, கிட்டத்தட்ட 250 கோடி தடவைகள் இதயம் துடிக்கின்றது. 24 மணி நேரத்தில், 20000 லீற்றர் இரத்தத்தை இதயம் பாய்ச்சுகின்றது. இதயம் ஒரு முறை இரத்ததை பாய்ச்சுகின்றபோது, 500 மில்லிலீற்றர் இரத்தம் உடலின் பாகங்களில் பாய்ச்சப்படுகின்றது.


***

Thursday, September 9, 2010

உடற் பருமனைக் குறைக்க உதவும் "தண்ணீர்"




ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், உடற் பருமனாவது உலகில் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுவதாக வகைப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் உடற்பருமனை குறைப்பதற்கான மிக இலகுவாக அருமருந்தாக "தண்ணீர்" விளங்குகின்றது என அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமது ஆய்வின் பிரகாரம், சாப்பாட்டுக்கு முன்னர் 2 குவளை நீரினை குடிப்பதன் மூலம் தமது உடற்பருமனைக் குறைக்கமுடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


அவர்கள் தமது ஆய்வுக்காக, 55-75 வயதிற்கிடைப்பட்ட 48 பேரினை இரண்டு குழுக்களாக வகைப்படுத்தி குறைந்த கலோரிகளினை உள்ளடக்கிய உணவுகளினையே சாப்பிடச் செய்து; ஒரு குழுவினரை சாப்பாட்டு வேளைக்கு முன்னர் 2 குவளை நீரினை அருந்தச் செய்தும், மறு குழுவினரை அவ்வாறு நீரினை அருந்தச் செய்யாமலும் தமது ஆய்வினை மேற்கொண்டனர். 12 வாரங்களின் பின் மீண்டும் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், சாப்பாட்டுக்கு முன் 2 குவளை நீரினை அருந்தியவர்கள் 15.5 பவுண்ட்கள்(7கிலோ) நிறை குறைவாக இருந்தனர். அதேவேளை, சாப்பாட்டுக்கு முன் 2 குவளை நீரினை அருந்தாதவர்கள் 11பவுண்ட்கள்(5கிலோ) மாத்திரமே நிறை குறைவாக இருந்தனர்.


சாப்பாட்டு வேளைக்கு முன்னர் குளிர்பானங்களை அருந்துபவர்கள் உடற்பருமனைக் குறைக்கமுடியும் என்று நினைத்தால் அது தப்பு. ஏனெனில் குளிர்பானங்களில் கலோரியினை அதிகப்படுத்தக்கூடிய சக்கரை, கொழுப்பு போன்றவை குளிர்பானங்களில் உள்ளடங்கியுள்ளதனலாகும். ஆனால் நீரில் இவைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்னர் நீரினை அருந்தியவர்கள் 5 பவுண்ட்கள்(2.25கிலோ) நிறை குறைவாக இருந்தனர், இவர்கள் தாம் உள்ளெடுக்கும் நீரினை அதிகரிக்காதவர்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்பாட்டுக்கு முன்னர் எவ்வளவு நீரினை உள்ளெடுக்கின்றீர்களோ அதற்கேற்றளவில் உங்கள் உடற்பருமனைக் குறைக்கமுடியுமென்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியே செலவில்லாத இந்த மருத்துவ முறையினை பின்பற்ற தயாராகிவிட்டீர்கள்தானே? .......

உடற்பருமன் குறைப்பு தொடர்பான எனது முன்னைய பதிவு; உடற் பருமனிலிருந்து போராட உதவும் "செத்தல் மிளகாய்"

***

08.09.2010 ~ என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள் ...

****

Sunday, July 25, 2010

ஸ்ட்ரோபெர்ரியின் அவசியம்...!!!



ஏராளமான விற்றமின்களினையும், மூலகங்களையும், குறைந்தளவான கலோரியினையும் உள்ளடக்கியதுதான் ஸ்ட்ரோபெர்ரி பழங்களாகும். .

முழுமையான நோயெதிர்ப்பு சக்திகளை உள்ளடக்கிய ஸ்ட்ரோபெர்ரியானது இருதய, இரத்த குழாய் அடைப்புக்களினை சரி செய்வதுடன், புற்று நோய் செல்களின் வளர்ச்சி பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பளிப்பதுடன், இது முதுமையடைவதனை தாமதப்படுத்துவதிலும் உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியானது, எமது நீர்ப்பீடண தொகுதிக்கு உந்துசக்தி அளிப்பதுடன் குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறவும் உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியானது பொட்டாசியத்தினை அதிகம் உள்ளடக்கியுள்ளது. பொட்டாசிய மூலகமானது இது இரத்த ஓட்டத்தினை சீராக்குவதுடன், மாரடைப்பினையும், ஸ்ரோக் அபாயத்தினையும் குறைக்க உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியிலுள்ள போலிக் அமிலமானது எமது உடம்பில் இரத்த சிவப்பணு உற்பத்திக்களுக்கான பிரதான காரணியாகவும் விளங்குகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியானது ஏனைய பழங்களினைவிடவும் விற்றமின் C இனை அதிகம் கொண்டுள்ளது. இதன் மூலம் சிலவகை புற்று நோய்களிலினை எதிர்த்துப் போராடவும், கொலஸ்ரோலினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியானது, விற்றமின்களான B2, B5, B6, K ஆகியவற்றினையும் மூலகங்களான செம்பினையும், மக்னீசியத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் ஓமேகா அமிலத்தினையும் ஸ்ரோபெரியானது உள்ளடக்கியுள்ளது.

ஸ்ட்ரோபெர்ரியானது உடற் பருமன் குறைப்புக்கு காரணமான ஓமோன்களை ஒழுங்காக தொழிற்பட வைக்க உதவுகின்றது.

ஸ்ட்ரோபெர்ரியிலுள்ள அமிலமானது பற்களினை வெண்மையாக்கவும் உதவுகின்றதாம். இதற்காக ஸ்ட்ரோபெர்ரி பழத்தினை இரண்டு துண்டுகளாக வெட்டி பற்களிலும், முரசிலும் தேய்க்க வேண்டுமாம். இதன்மூலம் கறைகள் நீங்கி பற்கள் பளிச்சிடுமாம்.


இவ்வளவு சிறப்புக்களினைக் கொண்ட ஸ்ட்ரோபெர்ரியினை, உணவுவகைகளுடன் சேர்த்து உண்ணும்போது அதிகளவான நன்மைகளினைப் பெற்றுக்கொள்ள முடியுமாம். இதனை காலை ஆகாரத்துடன் சேர்த்துக்கொண்டால் அந்த நாளில் மிகுந்த உத்வேகமான சக்தியினை இது உங்களுக்கு அளிக்குமாம்.



***

Tuesday, June 29, 2010

உடற் பருமனிலிருந்து போராட உதவும் "செத்தல் மிளகாய்"




ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், செத்தல் மிளகாயிலுள்ள "கெப்சசெய்ன்" என்கின்ற இரசாயமானது உடம்பில் ஏராளமான நன்மைபயக்கும் புரத மாற்றங்களினை ஏற்படுத்தி உடற்பருமனைக் குறைக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.


ஜொங் வொன் யுன் மற்றும் அவரது குழுவினர் உடற் பருமனாவது உலகில் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுவதாக வகைப்படுத்தியுள்ளனர். ஆய்வுகூட முடிவுகளின் பிரகாரம், "கெப்சசெய்ன்" இரசாயனமானது, கலோரியினை உள்ளெடுப்பதனை குறைக்கின்றது, கொழுப்பு திசுக்களினை சுருக்குகின்றது, இரத்தத்தில் கொழுப்பின் மட்டத்தினை குறைந்தளவில் பேண உதவுகின்றது. இதன்காரணமாக உடற்பருமனைக் குறைக்க உதவுகின்றது.


இந்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் ஆய்வுகூட எலிகள் மீது "கெப்சசெய்ன்" இரசாயனத்தினை செலுத்தியும், "கெப்சசெய்ன்" இரசாயனத்தினை செலுத்தாமலும் ஆய்வினை மேற்கொண்டனர். "கெப்சசெய்ன்" இரசாயனம் செலுத்தப்பட்ட எலிகள், அதன் உடல் நிறையில் 8 சதவீதத்தினை இழந்துள்ளதுடன், கொழுப்பில் காணப்படுகின்ற ஆகக் குறைந்தது முக்கியமான 20 புரதங்களின் அளவுகளில் மாற்றங்களை காட்டியது. இந்த புரதங்கள் கொழுப்பினை கரைப்பதற்காக பணிபுரிகின்றது.


இந்த மாற்றங்கள் மூலம் உடற்பருமனிலிருந்து போராட "கெப்சசெய்ன்" உதவுவதன் காரணத்தினால் புதிய செயற்பாடுகளுக்கு இது உந்துசக்தியாக விளங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நீங்கள் உடற்பருமனா என்ன முடிவெடுத்துள்ளீர்கள்???...........


***

Friday, May 14, 2010

பற்களின் உறுதியினைப் பாதுகாக்கும் பச்சை தேயிலை




தினமும் ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்திவருவதன் மூலம் பல்மருத்துவர்களிடமிருந்து தூரவிலகி நிற்கலாம் என்கின்றது புதிய ஆராய்ச்சியொன்றின் பெறுபேறுகள்.


பச்சை தேயிலையானது[Green Tea], நுண்ணியிர்களின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் கெரிரென் என்கின்ற இரசாயனப் பொருளினை உள்ளடக்கியுள்ளதாம், இதன் மூலம் பற்சுகாதாரத்தினை மேம்படுத்த பச்சை தேயிலையானது உதவுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


சீனி சுவை சேர்க்கப்பட்ட பச்சை தேயிலையினை மாத்திரம் அருந்துவது பக்றீரியா பாதிப்புக்களினை ஏற்படுத்தலாம், இதன் காரணமாக பற்கள் பாதிக்கப்படலாம் என்கின்றார் நியூயோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த அல்பிரிடோ மொராவியா.


அவர்களின் அறிக்கையின் பிரகாரம் இனிப்பு சுவை சேர்க்கப்பட்ட கோப்பியினை அருந்துவதும் தீமை பயக்கக்கூடியதாகும். கோப்பி தனியே பிரச்சினையினை கொண்டிருக்கவில்லையாயினும், இனிப்பு சுவை சேர்க்கப்பட்ட கோப்பியானது உங்கள் பற்களினை இழக்கச் செய்யலாம்.



இந்த ஆய்வில், 40-64 வயதிற்கிடைப்பட்ட 25000 ஜப்பானிய ஆண்,பெண் இருபாலாரிடையேயும் ரொஹொகு பல்கலைக்கழக மருத்துவ பட்டப்படிப்பு பள்ளியின் யசூசி கொயமா மற்றும் அவரது குழாமினர் ஆய்வுக்குட்படுத்தினர்.

இந்த ஆய்வின் பிரகாரம், ஒரு நாளில் குறைந்தது 1 கோப்பை பச்சை தேனீர் அருந்திவருகின்ற ஆண்களில் 19 சதவீதமானவர்களே 20பற்களிலும் குறைவாக கொண்டுள்ளனர், பெண்களில் இது 13 சதவீதமாகும். பச்சை தேனீர் அருந்தாதவர்களில் இது அதிக சதவீதமாகும்.

தினமும் ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்திவருவதன் மூலம் பல்மருத்துவர்களிலிருந்து தூரவிலகி நிற்கலாமே!!!


***

Wednesday, May 12, 2010

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை....



ஆய்வொன்றின் பிரகாரம், குறைந்தளவான கலோரியினை உள்ளெடுப்பதன் மூலம் நீண்டகாலம் வாழ்வது மேம்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கத்தையவர்களில் மூன்றில் ஒரு பங்கானவர்கள் அதிக நிறையானவர்களாக [பருமன்] இருக்கின்ற அதேவேளை ஆண்களின் சராசரி வாழ்க்கை வயதானது 72ஆகவும், பெண்களின் சராசரி வாழ்க்கை வயதானது 79ஆகவும் உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்படுகின்றது.



அதேதருணம், ஹாவார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின் பிரகாரம் விலங்குகள் கூட்டாக வாழ்கின்றபோது அவைகள் நீண்டகாலம் வாழ்கின்றனவாம் என அந்தஆராய்ச்சி பெறுபேறுகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த ஆய்வின் பிரகாரம் சங்கங்கள், கழகங்கள், மத அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றவர்கள், குழுக்களாக அதாவது கூட்டுக்குடும்பங்கள் போன்றதாக சேர்ந்து வாழ்கின்றபோது மனிதர்களின் வாழ்காலமானது அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

***

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 15ம் திகதி குடும்பங்களுக்கான சர்வதேச தினமாகும். அந்தவகையில் சர்வதேச குடும்ப தினத்தினையொட்டி நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.




***
கூடிக்குலாவி ஒற்றுமையாக வாழ்வதற்கு
வேற்றுமைகளை புறம் தள்ளுவோம்
உதவிகள் செய்வோம்
விட்டுக்கொடுப்போம்
தினமும் நாம் மனநிம்மதியுடன் வாழலாம்..........

***

Thursday, March 11, 2010

நலமாக வாழ உப்பினைக் குறைப்போம்



உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது நம்மிடையே பொதுவாக பாவனையிலுள்ள ஒரு பழமொழி ஆகும். உப்பிலுள்ள போதுமானளவு சோடியமானது நம்முடைய என்புகளின் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றது. எம்முடைய உணவில் அதிகளவு உப்புச் சேர்வதன் காரணமாக உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் [Type 2] ஆகியன ஏற்படுவதற்கு உப்பு காரணமாகின்றதாம்.

உலக சுகாதார அமையம் மற்றும் உணவு விவசாய அமையம் ஆகியவற்றின் அறிக்கையின் பிரகாரம் ஒருவர் நாளொன்றுக்கு 5கிராமுக்கும் [2கிராம் சோடியம்] குறைவான சோடியம் குளோரைட்டினையே நுகரவேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம் இரத்தத்தில் உப்பானது உணவின் மூலமாகவே பிரவேசித்து, இதன் காரணமாக இரத்தத்தின் அழுத்த நிலையானது பாதிக்கப்படுகின்றதாம்.

ஒருவர் குறைந்தளவு உப்பினை நுகர்வதன் காரணமாக இருதய நோய்கள், மூளை கட்டிகள் போன்ற நோய்களின் பாதிப்புக்களுக்கு ஆட்படுவது குறைந்தளவே ஆகும். 1 கிராம் சோடியம் குளோரைட் என்னும் போது இது 393.4 மில்லிகிராம் சோடியமாகும். அமெரிக்க சுகாதார திணைக்கள தகவலின் பிரகாரம், அமெரிக்கா முழுவதும் ஸ்ரோக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் காரணமாக 8லட்சம் பேர் மரணிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிகளவு உப்பினை நுகர்வதன் காரணமாக சிறுநீரக கற்கள் தொடர்பிலான நோய்கள், ஒஸ்ரியோபொரொசிஸ், வாயுத் தொல்லை, புற்று நோய் ஆகியன ஏற்படுவதற்கு இது வழிவகுப்பதாக கண்டறிந்துள்ளனர்.

எம்முடைய சாதாரண உடம்புக்கு அத்தியாவசியமாக அயடின் தேவைப்படுகின்றது என்பது முக்கியமானதாகும். அதேவேளை எம்முடைய உணவில் உப்பின் அளவினைக் குறைந்தளவு பேணுவோம், நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.

குறிப்பு - நாம் நாளொன்றுக்கு 3கிராம் உப்பினை நுகர்வது போதுமானதாம்.......

***

Monday, February 8, 2010

புற்று நோயிலிருந்து பாதுகாக்கும் பசு நெய்



புரதான காலத்திலிருந்து இந்துக்களுடைய வாழ்வில் பசு நெய்யானது ஒரு இன்றியமையாத வகிபாகத்தினை வகிக்கின்றது எனலாம்.

அந்த வகையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் பசு நெய்யானது பல்வேறு நோய்களின் பாதிப்புக்களிருந்து பாதுகாப்பினை அளிக்கின்றதென கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய பால்பொருள் சங்கத்தினால் இந்த ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வின் பிரகாரம் பசு நெய்யானது புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளினை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளினை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது மருத்துவர் B.K. கன்சல் மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களினால் 6 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அவர்களின் ஆய்வின் பிரகாரம் பசு நெய்யானது, துரித கதியில் புற்று நோயானது கலங்களிலிருந்து மேலதிகமாக விருத்தியடைவதனை குறைப்பதாக கண்டறிந்துள்ளனர்.

மருத்துவர் B.K. கன்சல் மற்றும் அவரது குழுவினர் இரண்டு வித்தியாசமான குழாமாக எலிகளினை பிரித்து அவற்றுக்கு DMH மருந்தினையும் (இது புற்று நோயினை விருத்தி செய்யும்) கொடுத்தனர். பின்னர் ஒரு குழாமிலுள்ள எலிகளுக்கு சோயா அவரை எண்ணெய்யும், மற்றைய குழாமிலுள்ள எலிகளுக்கு பசு நெய்யும் நாளாந்தம் சமனான அளவிலும் வழங்கப்பட்டது. பின்னர் ஆய்வு செய்த போது இரண்டு குழாமிலுள்ள எலிகளிலும், துரித கதியில் புற்று நோயானது கலங்களுக்கு விருத்தியடைவதானது வேறுபட்ட வகையில் காணப்பட்டது.

சோயா அவரை எண்ணெய் வழங்கப்பட்ட எலிகளுக்கு துரித கதியில் புற்று நோயானது விருத்தியடைவது 65.4% ஆக பதிவாகியிருந்தது. அதேசமயம் பசு நெய் வழங்கப்பட்ட எலிகளுக்கு துரித கதியில் புற்று நோயானது விருத்தியடைவது 26.6% ஆக பதிவாகியிருந்தது. அதேவேளை இந்தக் குழாமில் காணப்பட்ட எலிகளுக்கு கட்டிகளானது சிறிய அளவில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

***

Wednesday, February 3, 2010

வருமானம் உழைக்கும் வழிமுறையாக சிசேரியன் பிறப்புகள் மாற்றமடைகின்றதா? ...........


இந்தியாவில் சிசேரியன் மூலமான குழந்தை பிரசவங்கள் வருமானம் உழைப்பதனை நோக்காக கொண்டுள்ளதாக அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சிசேரியன் பிரிவுக்கு குழந்தைப் பிறப்புக்காக அனுமதிக்கப்படுகின்ற ஐந்தில் ஒன்று நடைமுறைகளினைப் பின்பற்றாது அனாவசியமாக அனுமதிக்கப்படுகின்றனராம். இதனால் தாய், சேய்க்கான அபாயம் அதிகரிப்பதாக ஐ. நா. சுகாதார ஸ்தாபன அறிக்கை தெரிவிக்கின்றது.
உலகளாவியரீதியில் ஐ. நா. சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், 2007-08 பருவகாலத்தில் இந்தியா, சீனா, ஜப்பான், நேபாளம், இலங்கை உட்பட்ட 9 ஆசிய நாடுகளில் சிசேரியன் மூலமான குழந்தைப் பிறப்புகள் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக சான்று பகிர்கின்றது.

சீனாவில் சிசேரியன் மூலமான குழந்தைப் பிறப்புகள் 46 சதவீதமாக பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. ஆனால் இந்தியாவில் சிசேரியன் மூலமான குழந்தைப் பிறப்புகள் 18 சதவீதமே ஆகும். இங்கே கவலை தருகின்ற விடயம் யாதெனில் டில்லி, மும்பாய் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளில் சிசேரியன் மூலமான குழந்தைப் பிறப்புகள், 5 சதவீதத்திலிருந்து 65 சதவீதத்துக்குமதிகமாக அதிகரித்துள்ளதாக அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றது.



107,950 பிறப்புகளினை ஆய்வு செய்த பின், இவற்றில் 24,000 பிறப்புகள், இந்திய மாநிலங்களான குஜராத் , மத்திய பிரதேசம் மற்றும் டில்லி ஆகியவற்றில் சிசேரியன் பிரிவு பிறப்புகள் பிறப்புகள் சிபார்சு செய்யப்பட்டதிலும் பார்க்க 15 சதவீதத்துக்குமதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவசர மருத்துவ தேவைகளுக்காக இல்லையாம், மாறாக பணம் பெறுவதினை நோக்கமாகக் கொண்டுதானாம்.

ஐ. நா. சுகாதார ஸ்தாபனம் சுகாதார வல்லுனர்களின் கருத்தின் பிரகாரம், சிசேரியன் பிரிவுக்கு மாற்றப்படும் போது, தாய் , சேய் இறப்புக்கான அபாயம் அதிகரிக்கின்றது, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது, இரத்த மாற்றம் தேவைப்படுகின்றது, இதனை இயற்கை/சாதாரண பிரசவத்துடன் ஒப்பிட்டு நோக்கும் போதாகும்.

இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2/3 வைத்தியசாலைகள், இந்த அபாயங்களினை அத்தியாவசியமான சுகாதார கலாச்சாரங்களாக உள்வாங்கவில்லையாம். சாதாரண பிரசவங்களிலும் பார்க்க , சிசேரியன் பிரசவங்களில் செலவுகளிலும் பார்க்க, அதிகமான வருமானம் ஈட்டப்படுகின்றதாம். உதாரணமாக இந்தியாவில் இதற்காக 20,000 ரூபாய் அளவில் செலவாகின்றதாம்.



***

Sunday, January 17, 2010

சுவாசப்பை புற்று நோயின் அபாயத்தினை குறைக்கும் பச்சைத் தேயிலை




பச்சைத் தேயிலையினை(Green Tea) அருந்திவருவதன் மூலம் புகைத்தலினால் ஏற்படுகின் சுவாசப்பை புற்று நோயின் அபாயத்தினைக் குறைந்துக் கொள்ளலாம் என புதியதொரு ஆய்வு தெரிவிக்கின்றது.

தாய்வான் நாட்டில் எல்லா புற்று நோய் மரணங்களிலும், சுவாசப்பை புற்று நோயின் காரணமாகவே அதிகமானவர்கள் மரணிக்கின்றனர் என்கின்றார் தாய்வான் சுங் ஷன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதுமாணி மாணவன் I-Hsin Lin. இந்த ஆய்வுக் குழுவிற்கு தலைமை தாங்கியது I-Hsin Lin ஆவார்.

தேயிலை, குறிப்பாக பச்சைத் தேயிலையானது உறுதியான நோய் எதிர்ப்பு பொருளான பொலிப்பெனொல்ஸ்சினைக் கொண்டுள்ளது. மேலும் தேயிலையானது கட்டிகளினை தோற்றுவிப்பதற்கெதிராக செயற்படுகின்றதாம்.


Lin
மற்றும் அவரது குழுவினர், சுவாசப்பை புற்று நோயினை கொண்ட 170 நோயாளிகளையும், கட்டுப்பாடுகளைக் கொண்ட 340 ஆரோக்கியமானவர்களையும் தமது ஆய்வில் உள்ளடக்கியிருந்தனர்.


இந்த ஆய்வுக்காக அவர்கள் வினாக்கொத்துக்களினை வழங்கி அதில் அவர்களின் தனிப்பட்ட விபரங்கள், சிகரெட் புகைக்கும் பழக்கங்கள், பச்சை தேயிலை அருந்துவது தொடர்பான விபரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளினை உட்ளெடுத்தல் தொடர்பான விபரங்கள், சமைத்தல் முறைகள் மற்றும் குடும்பத்தில் சுவாசப்பை புற்று நோயினது பாதிப்பு விபரம் தொடர்பான தகவல்களினைத் திரட்டினர்.

பச்சைத் தேயிலையினை ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அருந்துபவர்களினை விடவும், புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களிடையே, அவர்கள் பச்சைத் தேயிலையினை அருந்தாதவர்களாக இருந்தவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயினது அபாயம் 5.61-போல்ட் அதிகரித்துக் காணப்பட்டது.

பச்சைத் தேயிலையினை ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அருந்துபவர்களினை விடவும், புகை பிடிப்பவர்களிடையே, அவர்கள் பச்சைத் தேயிலையினை அருந்தாதவர்களாக இருந்தவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயினது அபாயம் 12.71-போல்ட் அதிகரித்துக் காணப்பட்டது.

இந்த அபாய வேறுபாடுகள் தொடர்பில் ஜீன்கள் பிரதான வகிபாகத்தினை வகிக்கலாம் என Lin மற்றும் அவரது குழுவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர் என புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தின் வெளியீடு தெரிவிக்கின்றது.


புகைத்தல் உடல் நலத்துக்கு கேடானதாகும்




Wednesday, January 13, 2010

கையடக்கத் தொலைபேசியும், நித்திரையும்



படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றீர்களா? ஆம் எனில், இது உங்களது சுகாதாரத்தைப் பாதிப்பதாக ஒரு பிரதான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக நித்திரையின்மை, தலையிடிகள் ஏற்படும் அதேவேளை ஆழ்ந்த நித்திரையில் நேரத்தினைச் செலவிடுவதனை குறைவடையச் செய்கின்றது.

போதுமான நித்திரையினைப் பெறத் தவறுவதன் காரணமாக மனவழுத்தங்கள் ஏற்படுகின்றது,கவனங்கள் குறைவடைகின்றது மற்றும் ஆளுமை/நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.

போதுமான நித்திரையின்மை காரணமாக இளவயது வயதினர் oஒழுங்கீனங்களில் தமது கவனத்தினைச் செலுத்துவதுடன், கல்விசார் செயற்பாடுகளில் முன்னேற்றங்களை அடையத் தவறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சியானது கையடக்கத் தொலைபேசி உற்பத்தியாளர்களால் விஞ்ஞானிகளுக்கு நிதிவசதிகளினை அளித்து மேற்கொள்ளப்பட்டது.மேலும் சாதனங்களிலிருந்து வெளியாகின்ற கதிரியக்க மாசுகள் தொடர்பாக சுகாதார பயமுறுத்தல்களையும் கவனத்தில் கொண்டனர்.
படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரை கட்டத்தினை அடைவதற்கு நீண்ட நேரம் எடுத்ததுடன் அவற்றில் குறைவான நேரத்தினையே செலவிட்டனர் என்பதும் ஆய்வின் முடிவாக இருந்தது.
உடம்பிலுள்ள கலங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும் அன்றைய நாளில் பாதிக்கப்பட்டு சேதமடைந்தவை சீரடைவதற்கும் ஆழ்ந்த நித்திரை பொழுதானது அவசியமானதாகும்.



எடின்பேர்க் நித்திரை மையத்தினுடைய இயக்குனர் மருத்துவர் Chris Idzikowski கருத்து தெரிவிக்கையில் : “படுக்கைக்குப் போகும் நேரத்துக்கு முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரையின்றி எதிர்மறையாகப் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு தற்சமயம் போதுமான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளது.” என்கின்றார்.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் 18 தொடக்கம் 45 வயதிற்குட்பட்ட 36 பெண்களையும், 35 ஆண்களையும் ஆய்வுக்குட்படுத்தினர்.
சிலர் கையடக்கத் தொலைபேசியினைப் பாவித்த போது கதிரியக்க அதிர்வுகளினைப் பெறுகின்றனர். ஏனையவர்கள் ஒன்றினையும் பெறவில்லை.

இதன் பிரகாரம், இதன் முதல் குழுவினர் ஆழ்ந்த நித்திரையின் முதல் கட்டத்துக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்ததுடன் மேலும் ஆழ்ந்த நித்திரையினை குறைந்த நேரமே மேற்கொண்டனர்.

இந்தப் பெற்பேறுகளானது பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சி அளிக்கலாம், ஏனெனில் நித்திரைக்கு முன்னர் அவர்களுடைய குழந்தைகள் தமது நண்பர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் வழமையாக அளவளாவுவதனலாகும்.

இந்த ஆய்வானது கரோலின்ஸ்கா நிறுவகம் மற்றும் சுவீடனின் அப்சலா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் வய்ன் அரச பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

ஆனாலும் இந்த முடிவுகள் ஒரு முடிந்தமுடிவல்ல என்கின்றார்கள். கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துவதால் நித்திரைக் குழப்பங்கள் ஏற்படுகின்றது என்கின்ற முடிவுக்கு தாம் வரவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனால் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் Bengt Arnetz கருத்து தெரிவிக்கையில், கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக மூளையில் ஏற்படுகின்ற பாதிப்புகளினை அளவிடக் கூடியதாகவுள்ளது. கதிரியக்கங்களின் காரணமாக மூளையின் அழுத்த செயற்பாடானது பாதிப்படைந்து, ஆழ்ந்த நித்திரையில் மாறுதல்களினை ஏற்படுத்துகின்றதாம்.

***

#########################

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

உழவர் திருநாளாம் தைத் திருநாளில்

தமிழர் மனங்களில் அமைதியும்,சந்தோசமும் பெருகி

தமிழர் வாழ்வில் நிம்மதியும், செளபாக்கியமும் கரைபுரண்டோடி

நித்தமும் மகிழ்ச்சியில் திளைக்கவும்................

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற மரபுக்கிணங்க

வாழ்வில் சகலமும் பெற்று வளமுடன் வாழ்கவென

இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.........

கே.கே.லோகநாதன்

#######################


Thursday, January 7, 2010

தீராத நோயாளிகளுக்கு SMS சிகிச்சை



இந்த தொடர்பாடல் தொழில்நுட்பமானது தீராத நோய்களின் கொடுமைகளினால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவதனை குறிப்பிடலாம். நோயாளர்களின் கையடக்கத் தொலைபேசிக்கு அவர்களுக்கு அடுத்து நிர்ணயிக்கப்பட்ட மருத்துவருடனான சந்திப்பு அல்லது சோதனை அல்லது அவர்கள் எடுக்க வேண்டிய மருந்துகள் தொடர்பாக நினைவுபடுத்த ஒரு SMS தகவலினை அனுப்புவதானது சிறந்ததொரு நடவடிக்கை என்கின்றார் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் சிறுவர் மையத்தின் Delphine Robotham.


Robotham மேலும் தெரிவிக்கையில் ஆய்வுகளின் பிரகாரம் அரைப்பங்கான நோயாளர்கள் அவர்கள் நாளந்தம் எடுக்க வேண்டிய ஒழுங்குமுறையான மருந்துகளினை எடுக்கத் தவறுகின்றனர் என்கின்றார். மருந்தினை உள்ளெடுக்க சில பங்கினர் மறப்பதற்கான பிரதான காரணமாக கவனமின்மை ஆகும். ஆகவே அவர்களுக்கு நினைவுறுத்த ஒரு தகவலானது தேவைப்படுகின்றது.


இன்று பல்வேறு வகையான ஆய்வுகளில் SMS பயன்பாட்டினை பயன்படுத்துவதனை Robotham அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

உதாரணமாக , நீரிழிவு நோயின் பாதிப்பினைக் கொண்ட குழந்தைகளுக்கு அவர்களின் குருதியில் வெல்லத்தின் அளவினைக் சோதிக்கும் சோதனையானது மேம்பட்டுக் காணப்படுகின்றதாம். இந்தக் குழந்தைகள் அவர்களின் குருதியில் வெல்லத்தின் அளவினைக் சோதிக்கும் சோதனை முடிவுகள் தொடர்பில் அவர்களின் மருத்துவர்களின் நிலையத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.


பிறிதொரு ஆய்வில், ஈரல் மாற்றீடு செய்யப்பட்டவர்கள் அதன் பின்னரான மருத்துவ முறைகளில் கவனம் செலுத்துவதானது மேம்பட்டுள்ளது.


தீராத நோயின் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளவர்கள் நாளாந்தம் மருத்துவமானது தேவைப்படுகின்றது. அதாவது எச்.ஐ.வி, அஸ்த்மா, காச நோய், அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் தொடர்பிலான நாளாந்த சோதனைகள் செய்வர்களுக்கு SMS சிகிச்சையானது சிறந்ததாகும் என்கின்றார் Robotham.



இன்று கையடக்கத் தொலைபேசிகளின் பாவனையானது பெருமளவில் காணப்படுகின்றது. அவற்றினை இது போன்ற பயனுள்ள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதானது ஒரு சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும் எனலாம்...........

***

Tuesday, January 5, 2010

மாற்று எரிபொருளுக்கு உலகம் தயாராகிவிட்டதா ?




உலகில் அண்மைக்கால ஏற்பட்டுவருகின்ற உணவுத் தட்டுப்பாட்டுக்கு வளர்முக நாடுகள் விவசாய விளைபொருட்களினைப் பயன்படுத்தி தாவர எண்ணெய் உற்பத்தியினை மேற்கொண்டதும் ஒரு காரணமென பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆம், இந்தப் புதிய தாவர எண்ணெய் கண்டுபிடிப்பானது உலகினை புதியதொரு மாற்றத்துக்கு இட்டுச் செல்ல உதவுமா ?...................

அமெரிக்காவின் தோமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்தின் , ஜெபர்சன் மருத்துவக் கல்லூரியின் உயிரியல் தொழில்நுட்ப பிரிவின் உதவி பேராசிரியர் Vyacheslav Andrianov மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், ஏனைய விவசாய பயிர்களினை விடவும் புகையிலையின் மூலம் அதிக வினைத்திறனான தாவர எண்ணெய்யினை உருவாக்க முடியுமென கண்டறிந்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகப்படியான எண்ணெய்யானது விதைகளிலேயே காணப்படுகின்றது. புகையிலை விதைகளானது, ஒவ்வொரு உலர் நிறையில் 40 சதவீதமான எண்ணெய்யினை சேர்த்துள்ளன.

ஆனாலும் விதைகள் மூலம் பெறப்பட்ட எண்ணெய்யானது , டீசல் இயந்திரங்களுக்கான எண்ணெய்யாக பயன்படுத்தி சோதிக்கப்பட்டது. புகையிலை தாவரங்களானது சாதாரணமான அளவிலேயே விதைகளினை விளைச்சலாகப் தரக்கூடியது. அதாவது ஏக்கருக்கு 600 கிலோகிராம் அளவிலான விதைகளினை மட்டுமேயாகும்.

Dr. Andrianov மற்றும் அவரது குழுவினர் புகையிலை தாவரங்களிலிருந்து, அதாவது அவற்றின் இலைகள் எண்ணெய் வெளியிடுவதனை கண்டறிவதற்கான வழிகள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளனர்.


தாவர எண்ணெய் பெறுவதற்கு புகையிலையானது பொருத்தமானதாகும், ஏனெனில் இவை உணவுற்பத்திக்கு பயன்படுத்தப்படாதலாகும்.என்கின்றார் Dr. Andrianov.

புகையிலை தாவர இலைகள் அதிகமான எண்ணெய்யினைப் பெறுவதற்கான வழிவகைகளினை கண்டறிந்துள்ளோம். மேலும் சிறு எடுத்துக்காட்டாக, மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களிலிருந்து 20-போல்ட்க்கும் (20-fold )அதிகமான எண்ணெய்யினை இலைகளிருந்து பெறலாம். என்கின்றார் Dr. Andrianov.

வழமையில் புகையிலை தாவர இலைகளானது உலர் நிறையில் 1.7 % தொடக்கம் 4% வரை எண்ணெய்யினைக் கொண்டுள்ளது.

தாவரங்களானது Diacyglycerol Acytransferase (DGAT) ஜீன் அல்லது LEAFY COTYLEDON 2 (LEC2) ஜீனினை இயக்கத்துக்காக கொண்டுள்ளன.

DGAT ஜீன் மாற்றத்தினால், இலைகளின் உலர் நிறையில் 5.8 சதவீதமான எண்ணெயினைப் பெறலாம். இது சாதாரணமாக உற்பத்தி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 2 போல்ட் (two-fold) ஆகும்.

LEC2 ஜீன் மாற்றத்தினால், இலைகளின் உலர் நிறையில் 6.8 சதவீதமான எண்ணெயினைப் பெறலாம்.

இந்த தரவுகளின் பிரகாரம் , புகையிலையானது பொருத்தமான , உறுதியானதொரு சக்தி தாவரம் ஆக பிரதி நிதித்துவப்படுத்தவதற்கான ஒரு அடித்தளமாக விளங்குகின்றது. மேலும் தாவர எண்ணெய் உற்பத்திக்கு ஒரு பிரதானமானதாகவும் புகையிலை விளங்கலாம் என்கின்றார் Dr. Andrianov.


மாற்று எரிபொருளுக்கு உலகம் தயாராகிவிட்டதா ? அப்படியாயின் உலகம் உங்கள் கரங்களில் மாற்றத்துக்காக ...............


***

Blog Widget by LinkWithin