Wednesday, February 3, 2010

வருமானம் உழைக்கும் வழிமுறையாக சிசேரியன் பிறப்புகள் மாற்றமடைகின்றதா? ...........


இந்தியாவில் சிசேரியன் மூலமான குழந்தை பிரசவங்கள் வருமானம் உழைப்பதனை நோக்காக கொண்டுள்ளதாக அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சிசேரியன் பிரிவுக்கு குழந்தைப் பிறப்புக்காக அனுமதிக்கப்படுகின்ற ஐந்தில் ஒன்று நடைமுறைகளினைப் பின்பற்றாது அனாவசியமாக அனுமதிக்கப்படுகின்றனராம். இதனால் தாய், சேய்க்கான அபாயம் அதிகரிப்பதாக ஐ. நா. சுகாதார ஸ்தாபன அறிக்கை தெரிவிக்கின்றது.
உலகளாவியரீதியில் ஐ. நா. சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், 2007-08 பருவகாலத்தில் இந்தியா, சீனா, ஜப்பான், நேபாளம், இலங்கை உட்பட்ட 9 ஆசிய நாடுகளில் சிசேரியன் மூலமான குழந்தைப் பிறப்புகள் 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக சான்று பகிர்கின்றது.

சீனாவில் சிசேரியன் மூலமான குழந்தைப் பிறப்புகள் 46 சதவீதமாக பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. ஆனால் இந்தியாவில் சிசேரியன் மூலமான குழந்தைப் பிறப்புகள் 18 சதவீதமே ஆகும். இங்கே கவலை தருகின்ற விடயம் யாதெனில் டில்லி, மும்பாய் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளில் சிசேரியன் மூலமான குழந்தைப் பிறப்புகள், 5 சதவீதத்திலிருந்து 65 சதவீதத்துக்குமதிகமாக அதிகரித்துள்ளதாக அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றது.



107,950 பிறப்புகளினை ஆய்வு செய்த பின், இவற்றில் 24,000 பிறப்புகள், இந்திய மாநிலங்களான குஜராத் , மத்திய பிரதேசம் மற்றும் டில்லி ஆகியவற்றில் சிசேரியன் பிரிவு பிறப்புகள் பிறப்புகள் சிபார்சு செய்யப்பட்டதிலும் பார்க்க 15 சதவீதத்துக்குமதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவசர மருத்துவ தேவைகளுக்காக இல்லையாம், மாறாக பணம் பெறுவதினை நோக்கமாகக் கொண்டுதானாம்.

ஐ. நா. சுகாதார ஸ்தாபனம் சுகாதார வல்லுனர்களின் கருத்தின் பிரகாரம், சிசேரியன் பிரிவுக்கு மாற்றப்படும் போது, தாய் , சேய் இறப்புக்கான அபாயம் அதிகரிக்கின்றது, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது, இரத்த மாற்றம் தேவைப்படுகின்றது, இதனை இயற்கை/சாதாரண பிரசவத்துடன் ஒப்பிட்டு நோக்கும் போதாகும்.

இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2/3 வைத்தியசாலைகள், இந்த அபாயங்களினை அத்தியாவசியமான சுகாதார கலாச்சாரங்களாக உள்வாங்கவில்லையாம். சாதாரண பிரசவங்களிலும் பார்க்க , சிசேரியன் பிரசவங்களில் செலவுகளிலும் பார்க்க, அதிகமான வருமானம் ஈட்டப்படுகின்றதாம். உதாரணமாக இந்தியாவில் இதற்காக 20,000 ரூபாய் அளவில் செலவாகின்றதாம்.



***

No comments:

Blog Widget by LinkWithin