************************************************
காதல் வந்துவிட்டால்................
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 14ம் “சர்வதேச காதலர் தினம்” என்பது அனைவரும் அறிந்த தகவலாகும்.
அதேபோல் உலகளாவிய ரீ தியில் ஏராளமான மொழிகள் பாவனையில் உள்ளது.
அந்தவகையில் பின்வரும் மொழிகளினை பேசுபவர்களுக்கு காதல் வந்துவிட்டால் தமது காதலினை தத்தமது மொழிகளில் எவ்வாறு வெளிப்படுத்துவார்கள்...........
சீன மண்டேரியன் மொழியில் - Wo ai ni
டனிஷ் மொழியில் – Jeg elsker dig
டச்சு மொழியில் – Ik hou van jou
யப்பானிய மொழியில் – Aishite imasu
ரஷ்யன் மொழியில்- Ya vas liubliu
ஸ்பானிஷ் மொழியில்- Te amo
சுவீடிஷ் மொழியில்- Jag alskar dig
துருக்கிய மொழியில் – Seni seviyorum
ஜேர்மனிய மொழியில் - Ich liebe Dich
ரோமானியன் மொழியில்- Te iu besc
இத்தாலி மொழியில்- Ti amo
லத்தீன் மொழியில்- Te amo
பிரெஞ்சு மொழியில் – Je t'aime
இந்தோனேசியன் மொழியில் - Saya cinta kamu
அடடா இனி உங்கள் காதலினை சொல்வதற்கு மொழி தெரியாது என விழிவிதுங்கி நிற்காமல் சும்மா அள்ளிவிடுங்கோவன்...........
குறிப்பு - இல்லை!!! என் காதலினை “போ” மொழியில் தான் சொல்வேன் என்று நீங்கள் யாராவது அடம்பிடித்தால் அதற்கு நான் சொல்லும் பதில் யாதெனில் “போ” மொழி கடந்த வாரம் உலகிலிருந்து முற்றாக அழிந்துவிட்டதாம். ஆம், இந்தியாவின் அந்தமான் தீவுகளி ல் வசித்த “போ” பழங்குடியினைச் “போ” மொழி பேசி உயிர் வாழ்ந்த இறுதிப் பெண்மணி கடந்த வாரம் தனது 85 வயதில் காலமாகிவிட்டாராம். அந்தப் பெண்மணிக்கு வாரிசுகள் யாரும் இல்லையாம்...... அந்தப் பெண்மணியின் மரணத்துடன் “போ” மொழியும் உலகிலிருந்து மறைந்துவிட்டது கவலை தரும் செய்தியாகும்.
*********************************************
2 comments:
"போ" மொழி அழிந்தாலென்ன ஸ்டுப்பிட், சீபோ, சனியன், செருப்பு, இன்னும் வார்த்தையே இல்லாத யறால் லுக்குமொழி இப்பிடி எல்லாம் கண்டுபிடிப்பாங்களில்ல
அதனால காதலை, காதல் எண்டே சொல்லீடுங்க காதல் தேவ தேவிகளே ஹா ஹா
வாழ்த்துக்கள் லோகநாதன்
அருமையான கருத்து ........ நன்றிகள்
Post a Comment