Tuesday, June 21, 2011

இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவவாழ்த்துக்கள்.........


இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவவாழ்த்துக்கள்.........

இன்று 21ம்திகதி தனது 3வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் "ஜயபிரதா" செல்லத்துக்குவாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் 21ம் திகதி உலக இசை தினமாகும். இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்களை அன்பு மாமா தெரிவித்துக்கொள்கின்றேன்.........


Happy Birthday Wishes………….


பத்திரிகையில் வெளியான எங்கள் மருமகளின் பிறந்தநாள் வாழ்த்து......

( நன்றிவிஜய் 22.06.2010)

***

Saturday, June 4, 2011

வலையுலகில் இரண்டாண்டு பூர்த்தி........




ஆம்.... நாளைய தினத்துடன், நான் வலையுலகில் தடம்பதித்து வெற்றிகரமாக ஈராண்டுகள் பூர்த்தியடைகின்றது. இந்த ஈராண்டு காலத்தில் வலையுலகில் என்னுடைய வலைப்பூவுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்த/அளித்துவருகின்ற பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், பத்திரிகைகள், இணையங்கள், சஞ்சிகைகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.


21.03.2010 ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் இணையத்தில் எம்மவர்கள் பக்கத்தில்(யாழ்தேவி நட்சத்திரப் பதிவர்) லோகநாதனின் பகிர்வுகள் வலைப்பதிவு அறிமுகம்...

என் பொழுதுபோக்குப்பணிகளில் ஒன்றாக வலைப்பதிவினை இட்டுவந்த நான் வலையுலகில் ஈராண்டுகள் பூர்த்திசெய்கின்ற இந்தத் தருணத்தில் 300வது பதிவினை அண்மிக்கின்றேன். வலைப்பதிவில் ஆக்கங்களினை இடுகின்றபோது ஒவ்வொரு பதிவாக்கத்திற்காகவும் மிகவும் அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டினை மேற்கொள்கின்றேன் என்பது எனது வலைப்பக்கத்தினை அவதானிப்பவர்களுக்கு தென்படும் என எண்ணுகின்றேன்.

சில இணையத்தளங்கள், சஞ்சிகைகளில் என் வலைப்பதிவு ஆக்கங்கள் அப்படியே மீள்பிரசுரமாகியுள்ளன/ மீள்பிரசுரமாகின்றன. எனது வலைப்பதிவு ஆக்கங்களினைப் மீள்பிரசுரிப்பதை வரவேற்கின்றேன். ஆனால் ஆக்கத்துக்கு பொறுப்பான என் வலைப்பதிவின் பெயரினை/ எனது பெயரினைக் குறிப்பிடாத இணையத்தளங்கள், சஞ்சிகைகளின் செயற்பாட்டினை ஆட்சேபிக்கின்றேன்/ எதிர்க்கின்றேன்.

என் பதிவுலகப் பயணத்தில் ஏதேனும் குறைகளிலிருப்பின்/ விமர்சனங்களிலிருப்பின் (கருத்துரையிடவும்) அவற்றினை நிறைவாகக்கொண்டு உங்கள் வாக்குகளினையும், பின்னூட்டங்களினையும் வழங்கி ஆதரவினையும், ஊக்கத்தினையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன். உங்கள் ஆதரவே என் வலைப்பதிவில் புதுப்புது தகவல்களினை பதிவிடுவதற்கு உந்துசக்தியளிக்கும்.

வலையுலகில் இரண்டு வெற்றிகரமான ஆண்டுகளைப் பூர்த்திசெய்து மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் இந்தத் தருணத்தில் என் வலைப்பதிவு ஆக்கங்களினை தொகுத்து புத்தகமொன்று வெளியிட வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது, வாய்ப்புக்கள் வருகின்றபோது என் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என நம்புகின்றேன்.


(குறிப்பு – நாளை 5ம் திகதி பயணமொன்றின் காரணமாக இந்தப் பதிவினைப் பதிவதற்கு வாய்ப்பில்லை, இதன் காரணத்தினாலேயே முற்கூட்டியே இப்பதிவினை இடுகின்றேன், நேரம் கிடைக்கின்றபோது அடுத்த பதிவில் சந்திப்போம்... நன்றிகள்... வாழ்த்துக்கள்...)

அன்புடன்...
கே.கே.லோகநாதன்

***

Thursday, June 2, 2011

உலகில் மிக நீளமான கடற் பாலம்....



உலகில் மிக நீளமான கடற் பாலமாகிய சிங் டொவ் (Qingdao) வளைகுடாப் பாலமானது சீனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலமானது கிழக்கு சீனாவின் ஷண்டொங் மாகாண துறைமுக நகரமாகிய சிங் டொவ் விலிருந்து ஹுவாங்டோ மாவட்டத்தினை இணைக்கின்றது. 41.58 கிலோமீற்றர் நீளமான இந்தப் பாலத்தினை நிர்மாணிக்க 1.39 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது.



இந்த பாலம் நிர்மாணிக்கப்பட முன்னர்; உலகில் மிக நீளமான கடற் பாலமாக ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ்சில் அமைந்துள்ள 38.4 கிலோமீற்றர் நீளமான பொன்சர்ட்ரைன் ஏரிக் கரைப்பாலமானது விளங்கியதுடன்; சீனாவின் மிக நீளமான கடற் பாலமாக 36 கிலோமீற்றர் நீளமான ஹங்ஷூ வளைகுடாப் பாலமானது விளங்கியது.

எதிர்வருகின்ற ஜூன் இறுதியில் இந்த வளைகுடாப் பாலமானது திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலகிலுள்ள மிக நீளமான 10 பாலங்களில் 7 பாலங்கள் சீனாவிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


*****-----------**************************


வாசித்துவிட்டீர்களா......

***
Blog Widget by LinkWithin