Showing posts with label டெஸ்ட். Show all posts
Showing posts with label டெஸ்ட். Show all posts

Tuesday, December 24, 2013

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த டெஸ்ட் போட்டிகள்…!


சுற்றுலா இந்திய அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 1வது டெஸ்ட் போட்டியில் (டிசம்பர் 18-22) 458 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியினால் 7 விக்கட் இழப்பிற்கு 450 ஓட்டங்களையே பெறமுடிந்ததனால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

4வது இன்னிங்ஸ்சில் சதமடித்த டி வில்லியர்ஸ் & டு பெலிசிஸ்

இந்த டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸ்சில் தென்னாபிரிக்க அணி பெற்றுக்கொண்ட 450 ஓட்டங்கள், அணியொன்று  4வது இன்னிங்ஸ்சில் பெற்றுக்கொண்ட 3வது மிகச்சிறந்த ஓட்டப்பெறுதியாகும்.



ஸ்கோர் சுருக்கம்…!
இந்தியா 280 & 421
தென்னாபிரிக்கா 244 & 450

அந்தவகையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த டெஸ்ட் போட்டிகள்…!

è 01 ஓட்டம் இங்கிலாந்து (204/6) எதிர் சிம்பாப்வே, புலவாயோ, 1996

è 01 ஓட்டம் இந்தியா (242/9) எதிர் மே.தீவுகள், மும்பை, 2011

è 06 ஓட்டங்கள் இந்தியா (355/8) எதிர் மே.தீவுகள், மும்பை, 1948

è 06 ஓட்டங்கள் இங்கிலாந்து (228/9) எதிர் மே.தீவுகள், லோர்ட்ஸ், 1963

è 08 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா (238/8) எதிர் இங்கிலாந்து, மெல்பேர்ன், 1974

è 08 ஓட்டங்கள் தென்னாபிரிக்கா (450/7) எதிர் இந்தியா, ஜொகனஸ்பேர்க், 2013

è 09 ஓட்டங்கள் இந்தியா (429/8) எதிர் இங்கிலாந்து, ஓவல், 1979

è 10 ஓட்டங்கள் நியூசிலாந்து (274/6) எதிர் அவுஸ்திரேலியா, பிறிஸ்பேர்ன், 2001

è 11 ஓட்டங்கள் மே.தீவுகள் (242/5) எதிர் அவுஸ்திரேலியா, பிறிட்ஸ்டவுன், 1965

è 11 ஓட்டங்கள் நியூசிலாந்து (275/8) எதிர் சிம்பாப்வே, புலவாயோ, 1997



டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸ்சில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணிகள்…!

è இங்கிலாந்து (654/8) எதிர் மே.தீவுகள், லோர்ட்ஸ், 1963
è நியூசிலாந்து (451) எதிர் இங்கிலாந்து,  கிறிஸ்பேர்ச், 2002
è தென்னாபிரிக்கா (450/7) எதிர் இந்தியா, ஜொகனஸ்பேர்க், 2013
è இந்தியா (445) எதிர் அவுஸ்திரேலியா, அடிலைய்ட், 1978
è நியூசிலாந்து (440) எதிர் இங்கிலாந்து,  நொட்டிங்ஹாம், 1973

***

Friday, July 12, 2013

அறிமுக டெஸ்ட் போட்டியில் அசத்திய ஆஸியின் ஆஷ்டன் அகர்

சுற்றுலா அவுஸ்திரலிய அணிக்கும், இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 1வது போட்டி(ஜூலை 10 - 14) ரெண்ட் ப்ரிட்ஜ், நொட்டிங்காமில் நடைபெற்றுவருகின்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது 1வது இன்னிங்ஸ்சில் 215 ஓட்டங்களையும், பதிலுக்கு துடுப்பாடிய ஆஸி அணி தமது 1வது இன்னிங்ஸ்சில் 280 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


1வது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்ற ஆஸி அணியின் 19 வயதான ஆஷ்டன் அகர் பல்வேறு சாதனைகளைப் படைத்தார்.  அவையாவன:

þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களைப்(98) பெற்ற வீரர்.                இதற்கு முன்னர், ஆஸி அணியினைச் சேர்ந்த வார்விக் ஆம்ஸ்ட்ரோங், இங்கிலாந்து அணிக்கெதிராக 1902ம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 45* ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக பதிவாகியிருந்தது.

þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களைப்(98) பெற்ற வீரர்.                                                                         இதற்கு முன்னர், மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த ரினோ வெஸ்ட், இங்கிலாந்து அணிக்கெதிராக 2012ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 95 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக பதிவாகியிருந்தது.


þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களைப்(98) பெற்ற ஆஸி வீரர்.                                                                 இதற்கு முன்னர், நியூசிலாந்து அணிக்கெதிராக 2004ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கிளேன் மெக்ராத் 61 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக பதிவாகியிருந்தது.

þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இன்னிங்ஸ் ஒன்றில் அணியின் ஏனைய வீரர்களை விடவும் அதிக ஓட்டங்களைப்(98) பெற்ற 9வது வீரர்.                                                                                          இலங்கை அணியினைச் சேர்ந்த ஜயந்த அமரசிங்க, நியூசிலாந்து அணிக்கெதிராக 1984ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 34 ஓட்டங்களைப் (இலங்கை அணியின் 1வது இன்னிங்ஸ் ஓட்டங்கள் 215) பெற்றதே சாதனையாகும்.

þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைச்சதம்(50 பந்துகள்) ஆஸி அணியின் 2வது வீரர்.                                         அறிமுக டெஸ்ட்டில் அதிவேக அரைச்சதம்(46 பந்துகள்) பெற்ற ஆஸி வீரர் அடம் கிஸ்கிறிஸ்ட் ஆவார்.

þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 10வது விக்கட் இணைப்பாட்டமாக அதிக ஓட்டங்களைப்(117/9 – 280/10 = 163) பெற்ற துடுப்பாட்ட ஜோடி ஆஸி அணியின் அஷ்டன் அகர், பில் கியூஸ்.                                                                                                    இதற்கு முன்னர், நியூசிலாந்து அணியினைச் சேர்ந்த ரிச்சர்ட் கொலிங், பிரைன் ஹஸ்ரிங்ஸ் ஆகியோர் 1972/73ம் ஆண்டு ஒக்லண்ட்டில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.                                                                              அத்துடன், பாகிஸ்தான் அணியினைச் சேர்ந்த முஸ்டாக் அஹ்மெட், அஸார் மஹ்மூட் ஆகியோர் 1997/98ம் ஆண்டு ராவல்பிண்டியில் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




கொசுறுத் தகவல் Ø ஆஷ்டன் அகர், இலங்கை தாய்க்கும், அவுஸ்திரேலிய தந்தைக்கும் பிறந்தவர் ஆவார்.

***


Tuesday, March 12, 2013

இலங்கை, பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் பொழிந்த "சத மழை"


சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 08 சதங்கள் பெறப்பட்டன. இலங்கை அணி தமது 1வது இன்னிங்ஸ்சில் 4 விக்கட் இழப்பிற்கு 570 ஓட்டங்களைப் பெற்ற வேளை தமது இன்னிஸ்சினை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார 142, லகிரு திரிமான்னே 155*, தினேஷ் சந்திமால் 116* ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.



பதிலுக்கு தமது 1வது இன்னிங்ஸ்சில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 638 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணியின் சார்பில் முஹம்மட் அஷ்ரப்புல் 190, முஷ்ஃபிகுர் ரஹீம் 200, நசிர் ஹொஸ்சைன் 100 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.

தமது 2வது இன்னிங்ஸ்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கட் இழப்பிற்கு 335 ஓட்டங்களைப் பெற்ற வேளை தமது இன்னிஸ்சினை இடைநிறுத்திக் கொண்டது. இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார 105,திலகரத்ன டில்ஷான் 126 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.

சத மழை பொழிந்த இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 8 சதங்கள் பெறப்பட்டன. இதன் மூலம் 8 வருட கால சாதனை புதுப்பிக்கப்பட்டது. இதற்கு முன்னர், 2005ம் ஆண்டு சென்.ஜோன்ஸ் அன்ரிகுவாவில் நடைபெற்ற மே.தீவுகள், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் 8 சதங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தென்னாபிரிக்க சார்பில் டி வில்லியர்ஸ் 114, கிரேம் ஸ்மித் 126, ஜக்ஸ் கலிஸ் 147, அஷ்வெல் பிரின்ஸ் 131 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை மே.தீவுகள் சார்பில் கிறிஸ் கெய்ல் 317, ராம் நரேஷ் சர்வான் 127, சிவ்நரேய்ன் சந்திரபோல் 127, நர்சிங் டியோநரேய்ன் 107 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.

வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக சதங்கள் பெறப்பட்ட நிகழ்வுகள் வ்ருமாறு;

08 சதங்கள் இலங்கை எதிர் பங்களாதேஷ், காலி, 2012/13, வெற்றிதோல்வியற்ற முடிவு

08 சதங்கள் மே.தீவுகள் எதிர் தென்னாபிரிக்கா, சென்.ஜோன்ஸ் அன்ரிகுவா, 2005, வெற்றிதோல்வியற்ற முடிவு

07 சதங்கள் இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா, நொட்டிங்ஹாம், 1938, வெற்றிதோல்வியற்ற முடிவு

07 சதங்கள் மே.தீவுகள் எதிர் அவுஸ்திரேலியா, கிங்ஸ்ரன், 1955, ஆஸி வெற்றி

07 சதங்கள் தென்னாபிரிக்கா எதிர் மே.தீவுகள், கேப் டவுன், 2003/04, வெற்றிதோல்வியற்ற முடிவு

07 சதங்கள் மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து, போர்ட் ஒப் ஸ்பெய்ன், 2008/09, வெற்றிதோல்வியற்ற முடிவு

07 சதங்கள் இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, கொல்கத்தா, 2009/10, இந்தியா இன்னிங்ஸ் & 57 ஓட்டங்களால் வெற்றி

07 சதங்கள் இந்தியா எதிர் இலங்கை, அஹ்மதாபாத், 2009/10, வெற்றிதோல்வியற்ற முடிவு

***
Blog Widget by LinkWithin