சுற்றுலா அவுஸ்திரலிய அணிக்கும், இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 1வது போட்டி(ஜூலை 10 - 14) ரெண்ட் ப்ரிட்ஜ், நொட்டிங்காமில் நடைபெற்றுவருகின்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி தமது 1வது இன்னிங்ஸ்சில் 215 ஓட்டங்களையும், பதிலுக்கு துடுப்பாடிய ஆஸி அணி தமது 1வது இன்னிங்ஸ்சில் 280 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
1வது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்ற ஆஸி அணியின் 19 வயதான ஆஷ்டன் அகர் பல்வேறு சாதனைகளைப் படைத்தார். அவையாவன:
þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களைப்(98) பெற்ற வீரர். இதற்கு முன்னர், ஆஸி அணியினைச் சேர்ந்த வார்விக் ஆம்ஸ்ட்ரோங், இங்கிலாந்து அணிக்கெதிராக 1902ம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 45* ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக பதிவாகியிருந்தது.
þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களைப்(98) பெற்ற வீரர். இதற்கு முன்னர், மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த ரினோ வெஸ்ட், இங்கிலாந்து அணிக்கெதிராக 2012ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 95 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக பதிவாகியிருந்தது.
எனது முன்னைய பதிவு - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக அதிக ஓட்டம் பெற்றவர்….
þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களைப்(98) பெற்ற ஆஸி வீரர். இதற்கு முன்னர், நியூசிலாந்து அணிக்கெதிராக 2004ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கிளேன் மெக்ராத் 61 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக பதிவாகியிருந்தது.
þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இன்னிங்ஸ் ஒன்றில் அணியின் ஏனைய வீரர்களை விடவும் அதிக ஓட்டங்களைப்(98) பெற்ற 9வது வீரர். இலங்கை அணியினைச் சேர்ந்த ஜயந்த அமரசிங்க, நியூசிலாந்து அணிக்கெதிராக 1984ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 34 ஓட்டங்களைப் (இலங்கை அணியின் 1வது இன்னிங்ஸ் ஓட்டங்கள் 215) பெற்றதே சாதனையாகும்.
þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைச்சதம்(50 பந்துகள்) ஆஸி அணியின் 2வது வீரர். அறிமுக டெஸ்ட்டில் அதிவேக அரைச்சதம்(46 பந்துகள்) பெற்ற ஆஸி வீரர் அடம் கிஸ்கிறிஸ்ட் ஆவார்.
þ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 10வது விக்கட் இணைப்பாட்டமாக அதிக ஓட்டங்களைப்(117/9 – 280/10 = 163) பெற்ற துடுப்பாட்ட ஜோடி ஆஸி அணியின் அஷ்டன் அகர், பில் கியூஸ். இதற்கு முன்னர், நியூசிலாந்து அணியினைச் சேர்ந்த ரிச்சர்ட் கொலிங், பிரைன் ஹஸ்ரிங்ஸ் ஆகியோர் 1972/73ம் ஆண்டு ஒக்லண்ட்டில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், பாகிஸ்தான் அணியினைச் சேர்ந்த முஸ்டாக் அஹ்மெட், அஸார் மஹ்மூட் ஆகியோர் 1997/98ம் ஆண்டு ராவல்பிண்டியில் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொசுறுத் தகவல் Ø ஆஷ்டன் அகர், இலங்கை தாய்க்கும், அவுஸ்திரேலிய தந்தைக்கும் பிறந்தவர் ஆவார்.
***
No comments:
Post a Comment