Tuesday, July 16, 2013

ஜுலை 16 ⇨ உலக பாம்பு தினம்

வருடாந்தம் ஜூலை மாதம் 16ம் திகதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. 
அந்தவகையில் பாம்புகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…..

# உலகில் 3000 இற்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 350 பாம்பு இனங்களே விஷம் கொண்டவையாகும். பாம்புகளின் தாக்குதல் காரணமாக வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் மரணிக்கின்றனராம்.

# குளிர் இரத்த வகையினைச் சேர்ந்த  நகருயிரியான பாம்புகள், உலகில் அந்தாட்டிக்கா கண்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து கண்டங்களிலும் உயிர்வாழ்கின்றன.



# அயர்லாந்து, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, கிறீன்லாந்து ஆகிய நாடுகளில் பாம்புகளே கிடையாது.

# உலகில் மிக வேகமாக ஓடுகின்ற பாம்பு ப்ளக் மம்வா(Black Mamba)ஆகும். இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 12 மைல்கள் ஆகும். இந்தவகை பாம்புகளின் கடிக்கு உள்ளாகுபவர்களில் 95-100% ஆனோர் மரணத்தினையே அடைகின்றனர்.



# பாம்புகள் தமது நாக்கின் மூலமே வாசனையினை உணர்ந்துகொள்கின்றன.



# பாம்புகளுக்கு கண் இமைகள் கிடையாது. மேலும் அவை குறைவான கண்பார்வையினையே கொண்டவையாகும்.

# பாம்புகளுக்கு காதுகள் கிடையாது, இதனால் அவைகளுக்கு கேட்கும் சக்தி இல்லை.  நிலத்திலிருந்து உணர்கின்ற அதிர்வுகளின் மூலமே பாம்புகள் ஏனைய உயிரிகளின் நடமாட்டத்தினை உணர்ந்துகொள்கின்றன.



# கூடு கட்டி முட்டையிடுகின்ற ஒரே பாம்பினம் இராஜ நாகம்.

# உலகில் பல்வேறு அளவுகளிலான பாம்பினங்கள் உள்ளன. தென் அமெரிக்காவின் பச்சை அனக்கொண்டா பாம்புகளே(Green Anaconda) மிகப்பெரிய பாம்பினமாகும், மேலும் தென்கிழக்காசியாவின் மலைப்பாம்புகளே(The Reticulated Python) மிக நீளமான(28’) பாம்பினமாகும். அத்துடன், 02 அங்குல நீளமேயான ப்ராஹ்மினி பிளைன்ட்(Brahminy Blind) பாம்பினங்களே உலகில் மிகச்சிறிய பாம்பினமாகும்.

# பெரும்பாலான பாம்பினங்களுக்கு அதிக பற்கள் உண்டு. குறிப்பாக, சில வகைப் பாம்புகளுக்கு 200 இற்கும் மேற்பட்ட பற்கள் உள்ளன.  ஆனால் பாம்புகள் தமது இரையினை அசைபோட்டு உண்பதற்கு பற்களை பயன்படுத்துவதில்லை. மாறாக அவை தமது இரையினை முழுமையாக விழுங்குகின்றன. பாம்புகள் தமது தலையினை விடவும் 4 மடங்கு பெரிய உயிரினங்களையும் இரையாக உட்கொள்ளக்கூடியவையாகும்.

# புவியில் ஏனைய பகுதிகளினை விடவும், ஒவ்வொரு சதுரமீற்றருக்கு அதிக எண்ணிக்கையில் விஷப் பாம்புகள் இந்தோனேசியாவின் கோமோடோ தீவிலேயே உள்ளன.

# பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதுண்டு. பாம்புகள் தொடர்பான பயம் "ஒப்கிடோபோபியா" எனப்படும்.

ஓகே… உங்களில் யார்யாருக்கெல்லாம் "ஒப்கிடோபோபியா" உண்டு…! 

***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்களுக்கு நன்றி...

ஒப்கிடோபோபியா பத்து முறை சரியாக உச்சரித்தால் பரிசு உண்டு... ஹிஹி...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ…

Blog Widget by LinkWithin