Showing posts with label உயிரினங்கள். Show all posts
Showing posts with label உயிரினங்கள். Show all posts

Monday, August 26, 2013

ஆகஸ்ட் 26 ⇨ உலக நாய் தினம்


உலகில் மனிதர்களால் அதிகளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்ற விலங்கினங்களில் பூனையினை அடுத்து நாய்களே இடம்பெறுகின்றன.  அந்தவகையில் நாய்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக…!

Yமனிதனுடன் பன்னெடுங்காலம் காலம் முதல் பல்வேறு யுகங்களைக் கடந்து வாழ்கின்ற ஒரே உயிரினம் நாய் ஆகும். இவை மனிதர்களுடன் 14,000  ஆண்டுகளாக வசித்துவருகின்றனவாம்.


Yஉலகில் எல்லா வகையான சீதோஷ்ண நிலைகளிலும் வசிக்ககூடிய ஒரே உயிரினம் நாய் மட்டுமேயாகும்.

Yஉலகம்முழுவதும் 700 இற்கும் மேற்பட்ட தூய நாய் இனங்கள் காணப்படுகின்றன.

Yநாய்க்குட்டிகள் பிறக்கின்றபோது கண்பார்வையற்றவையாகவும், காது 
கேளாதவையாகவும், பற்களற்றவையாகவும் இருக்கின்றன.


Yநாய்களின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு அண்ணளவாக 70 – 120 தடவைகளாகும்.

Yநாய்களின் சாதாரண உடல் வெப்பநிலை 100.5 ºF – 102.5 ºF (38.06ºC – 39.17ºC)

Yவளர்ந்த நாய்கள் பொதுவாக 42 பற்களைக் கொண்டுள்ளன,  அத்துடன் குட்டிகளுக்கு 28 பற்கள் மட்டுமே உண்டு.

 Yநாய்கள் அண்ணளவாக 1700 சுவை அரும்புகளை மட்டுமே கொண்டுள்ளன, ஆனால் மனிதன் 9000 இற்கும் மேற்பட்ட சுவை அரும்புகளைக் கொண்டுள்ளான்.


Yமனிதனை விடவும் நாய்களின் கேட்கும் சக்தி 10 மடங்கு அதிகமாகும்.

Y மனிதனை விடவும் நாய்களின் வாசனை உணர்வு 1000 மடங்கு சிறப்பானதாகும். மனிதர்கள்  5 மில்லியன் வாசனையை உணர்கின்ற கலங்களைக் கொண்டுள்ள, அதேவேளை நாய்கள் 220 மில்லியன் வாசனையை உணர்கின்ற கலங்களைக் கொண்டுள்ளான். அதேபோல் வாசனை உணர்கின்ற மனித மூளையின் பாகத்தினை விடவும் நாயின் மூளையின் பங்கு 4 மடங்கு பெரியதாகும்.


Y உலகில் அதிக எண்ணிக்கையான நாய்கள் அமெரிக்காவிலேயே வாழ்கின்றனவாம்.

Y விண்வெளிக்கு முதல்முதலில் சென்ற உயிரினம் "லைக்கா" என்கின்ற பெண் நாய் ஆகும். 1957ம் ஆண்டு நவம்பர் 2ம் நாள் ஸ்புட்னிக் II விண்கலத்தில் ரஷ்யாவினால் விண்ணுக்கு அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Y மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.



நண்பர்களே, உங்களில் யார்யாரெல்லாம் நாயினை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கின்றீர்கள்?...

 ***

Monday, July 29, 2013

ஜுலை 29 ⇨ சர்வதேச புலி தினம்

வருடாந்தம் ஜூலை மாதம் 29ம் திகதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. கடந்த நூறாண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையானது 97% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக வனவிலங்குகள் நிதியத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் உலகிலுள்ள புலிகள் எண்ணிக்கை 3200 மட்டுமே ஆகும்.  புலிகளுக்கு மனிதர்களைத் தவிர வேறு எதிரிகள் கிடையாது. உலகில் தற்சமயம் 6 வகையான புலி இனங்களே எஞ்சியுள்ளதாம். மேலும் 3 இனங்கள் அழிவடைந்துவிட்டதாம்.  மனிதச் செயற்பாடுகளின் காரணமாக குறிப்பாக வேட்டையாடுதல், வாழிடங்களினை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அருகிவருகின்ற விலங்கினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புலிகளைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு சர்வதேச புலி தினமானது கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், புலிகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…..!

# ஆசியாவினைப் பூர்வீகமாகக் கொண்ட புலிகளின் விஞ்ஞானப் பெயர் பாந்தெரா டைகிரிஸ்(Panthera Tigris)

# தரைவாழ் மாமிசப் பட்சிகளில் துருவக் கரடிகள், பிறவுண் கரடிகளை அடுத்து மிகப் பெரிய விலங்கினம் புலிகள் ஆகும்.


# புலிகள் நன்றாக நீந்தக்கூடியவையாகும். இவைகளால் 6 கிலோமீற்றர் தூரம்வரை நீந்த முடியுமாம்.


# புலிகளின் கர்ஜனை பலமானதாகும், இவற்றின் கர்ஜனை ஒலி 2 கிலோமீற்றருக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும். இவை பொதுவாக தனது சொந்த வாழிடப் பிரதேசத்தின் பாதுகாப்புக்காகவும், தனது துணையினை இனப்பெருக்கத்திற்காக அழைக்கவுமே கர்ஜிக்கின்றனவாம்.


# ஒவ்வொரு புலியினதும் உடம்பிலுள்ள வரிகள், ஏனைய புலிகளின் வரிகளை ஒத்ததன்றாகும். அவை ஒவ்வொன்றும் வித்தியாசமானவையாகும்.

# புலிகளின் பற்கள் மனிதர்களின் பற்களினை விடவும் 10 மடங்கு பெரியவையாகும்.


# புலிகள் ஏனைய விலங்குகளைப் போன்றல்லாமல் தனியாகவே வேட்டையாடச் செல்கின்றன. புலிகள் பொதுவாக இரவு நேரத்திலேயே வேட்டையாடுகின்றன. புலிகளின் வேட்டை முயற்சிகளில் 90% ஆனவை தோல்வியிலேயே முடிகின்றதாம். சில வேளைகளில் புலிகள் வேட்டைக்காக ஓரிரவில் 10 – 20 கிலோமீற்றர் தூரம்வரையும் பயணம் செய்கின்றனவாம்.  புலிகள் தனது இரையினை பின்புறமாகவோ அல்லது பக்கவாட்டாகவோ மாத்திரமே வேட்டையாடுகின்றனவாம், அவை ஒருபோதும் முன்புறமாகச் சென்று வேட்டையாடுவதில்லையாம். புலிகள் ஓரிரவில் 20 – 35 கிலோகிராம்  இறைச்சியினை உட்கொண்டாலும், அவை பொதுவாக ஓர் நாளில் 15 – 18 கிலோகிராம்  இறைச்சியினையே  உட்கொள்கின்றனவாம். சிலவேளைகளில் புலிகள் தனது இரையினை முழுமையாக தின்றுமுடிப்பதற்கு  2 – 3 நாட்களினை எடுத்துக்கொள்கின்றதாம்.


#  புலிகள் மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவையாகும், அத்துடன் ஒரே பாய்ச்சலில் 16 அடிக்கு அப்பால் காற்றில் பயணிக்கக்கூடியவையாகும்.


# புலி இனங்களில் சைபீரியன் புலிகளே மிகப்பெரிய புலியினமாகும், அத்துடன் சுமாத்ரா புலிகளே உலகில் மிகச்சிறிய புலியினமாகும். உலகில் அதிக எண்ணிக்கையில் வங்காளப் புலிகளும் (2500), குறைந்த எண்ணிக்கை தென் சீனப் புலிகளும் காணப்படுகின்றனவாம் (60 - 80).

# இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், தென் கொரியா, வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலி ஆகும்.

# உலகில் அதிகம் பேருக்கு பிடித்தமான விலங்கினம் புலியாகும் என்கின்ற ஓர் கருத்துக்கணிப்பு .


ஓகே… என்னைப்போல யார்யாருக்கெல்லாம் புலி பிடிக்கும்.


***
Blog Widget by LinkWithin