Sunday, July 14, 2013

விடைபெறும் தந்திச் சேவை…!

கடந்த 163 ஆண்டுகளாக மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்த தந்திச் சேவைக்கு சாவுமணி அடிக்கின்றது இந்தியா…!


கையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் அஞ்சல்களின் அறிமுகத்தின் பின்னர் தந்திச் சேவையின் அவசியம் உலகில் வெகுவாக குறைந்துவிட்டதனால் உலகில் பல நாடுகள் வருமானத்தினை மிஞ்சிய செலவின் காரணமாக தந்திச் சேவைக்கு பிரியாவிடை கொடுத்துள்ளன.

ஆம்…! அந்தவகையில், இன்றைய தினம் 14 ஜுலை 2013, இரவு 9.00 மணியுடன் இந்திய நாட்டில் தந்திச் சேவை முடிவுக்கு வருகின்றது.

அந்தவகையில், உலகப் புகழ்பெற்ற சில சுவாரஷ்சியமான தந்தித் தகவல்கள் சில….!

* வரலாற்றில் முதன்முறையாக மே 24, 1844ம் ஆண்டு அமெரிக்காவினைச் சேர்ந்த சாமுவேல் மோர்ஸ் வாஷிங்டனிலிருந்து, வல்ரிமோருக்கு முதல் தந்திச் செய்தியினை அனுப்பினார்.  அனுப்பட்ட செய்தி வாசகம் What hath God wrought?”



* ஏப்ரல் 15, 1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பலில் இருந்து இறுதியாக அனுப்பப்பட்ட தந்தியில்லா செய்தித் தகவல் SOS SOS CQD CQD Titanic. நாங்கள் மிகவேகமாக மூழ்கிக்கொண்டிருக்கின்றோம். பயணிகளை படகுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றோம். டைட்டானிக்”

* அமெரிக்க ஊடகவியலாளரான ரொபர்ட் பென்ச்லி பயணக் கட்டுரை எழுதுவதற்காக இத்தாலி, வெனிஸ் நகருக்கு அனுப்பட்டார். அவர் நியூயோர்க்கிலுள்ள தனது பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பிய பிரபல்யமான செய்தித் தகவல் ஹரோல்ட் ரோஸ், முதல் தடவையாக வெனிஸ்சினை வந்தடைந்தேன். வீதிகள் எல்லாம் தண்ணீரால் நிரம்பியுள்ளன. தயவுசெய்து ஆலோசனை வழங்குங்கள் ”.

* வரலாற்றில் ஆங்கிலத்தில் மிகக்குறுகிய தந்தி செய்தியினை அயர்லாந்தினைச் சேர்ந்த எழுத்தாளர் ஒஸ்கார் வில்ட் அனுப்பினார். பாரிஸ் நகரில் வசித்த இவர், பிரிட்டனிலுள்ள அவரின் புத்தக பதிப்பகத்தாருக்கு தன்னுடைய புதிய புத்தகத்தின் அச்சிடல் செயற்பாடுகள் எந்தவகையில் உள்ளது என்பதனை அறிவதற்கு அனுப்பிய செய்தித் தகவல் பின்வருமாறு ஆகும். "?", இதற்கான பதிப்பகத்தாரின் பதில் செய்தித் தகவல் "!" என்பதாகும்.

* பெளதிகவியலாளரான எட்வர்ட் ரெலர் 1952ம் ஆண்டு தனது தொழிற்துறை நண்பனான லொஸ் அலமோஸ்க்கு,  தன்னுடைய முதலாவது ஐதரசன் குண்டு வெடிப்பு தொடர்பாக அனுப்பிய தந்தி இது ஒரு சிறுவன் It’s a Boy

* "ரைட் சகோதர்கள்" தமது வெற்றிகரமான முதல் வான்பறப்பு தொடர்பாக 1903ம் ஆண்டு வட கரோலினாவிலிருந்து தந்தி மூலம் அறிவித்தார்கள். “வெற்றிகரமான நான்கு பறப்புக்கள் வியாழன் காலை” ⊶ (Successful four flights Thursday morning)

, சுவாரஷ்சியமான தந்தி ⇨ ஒருதடவை எனது அலுவலக விடுப்பு தொடர்பாக  நான் அனுப்பிய தந்தியினை 3 நாட்களின் பின்னர் அலுவலகத்தில் நானே பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது. (இலங்கை தந்திச்சேவை)  * வரலாறு முக்கியம் அமைச்சரே…!

***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களிடமிருந்து பதிவு வரும் என்று எதிர்ப்பார்த்தேன்... தேடலின் தகவலுக்கு நன்றிகள்...

வரலாறும் முக்கியம்...!

இராஜராஜேஸ்வரி said...

உலகப் புகழ்பெற்ற சில சுவாரஷ்சியமான தந்தித் தகவல்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ…

Blog Widget by LinkWithin