
ஏராளமான விற்றமின்களினையும், மூலகங்களையும், குறைந்தளவான கலோரியினையும் உள்ளடக்கியதுதான் ஸ்ட்ரோபெர்ரி பழங்களாகும். .
முழுமையான நோயெதிர்ப்பு சக்திகளை உள்ளடக்கிய ஸ்ட்ரோபெர்ரியானது இருதய, இரத்த குழாய் அடைப்புக்களினை சரி செய்வதுடன், புற்று நோய் செல்களின் வளர்ச்சி பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பளிப்பதுடன், இது முதுமையடைவதனை தாமதப்படுத்துவதிலும் உதவுகின்றது.
ஸ்ட்ரோபெர்ரியானது, எமது நீர்ப்பீடண தொகுதிக்கு உந்துசக்தி அளிப்பதுடன் குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறவும் உதவுகின்றது.
ஸ்ட்ரோபெர்ரியானது பொட்டாசியத்தினை அதிகம் உள்ளடக்கியுள்ளது. பொட்டாசிய மூலகமானது இது இரத்த ஓட்டத்தினை சீராக்குவதுடன், மாரடைப்பினையும், ஸ்ரோக் அபாயத்தினையும் குறைக்க உதவுகின்றது.
ஸ்ட்ரோபெர்ரியிலுள்ள போலிக் அமிலமானது எமது உடம்பில் இரத்த சிவப்பணு உற்பத்திக்களுக்கான பிரதான காரணியாகவும் விளங்குகின்றது.
ஸ்ட்ரோபெர்ரியானது ஏனைய பழங்களினைவிடவும் விற்றமின் C இனை அதிகம் கொண்டுள்ளது. இதன் மூலம் சிலவகை புற்று நோய்களிலினை எதிர்த்துப் போராடவும், கொலஸ்ரோலினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகின்றது.
ஸ்ட்ரோபெர்ரியானது, விற்றமின்களான B2, B5, B6, K ஆகியவற்றினையும் மூலகங்களான செம்பினையும், மக்னீசியத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் ஓமேகா அமிலத்தினையும் ஸ்ரோபெரியானது உள்ளடக்கியுள்ளது.
ஸ்ட்ரோபெர்ரியானது உடற் பருமன் குறைப்புக்கு காரணமான ஓமோன்களை ஒழுங்காக தொழிற்பட வைக்க உதவுகின்றது.
ஸ்ட்ரோபெர்ரியிலுள்ள அமிலமானது பற்களினை வெண்மையாக்கவும் உதவுகின்றதாம். இதற்காக ஸ்ட்ரோபெர்ரி பழத்தினை இரண்டு துண்டுகளாக வெட்டி பற்களிலும், முரசிலும் தேய்க்க வேண்டுமாம். இதன்மூலம் கறைகள் நீங்கி பற்கள் பளிச்சிடுமாம்.
இவ்வளவு சிறப்புக்களினைக் கொண்ட ஸ்ட்ரோபெர்ரியினை, உணவுவகைகளுடன் சேர்த்து உண்ணும்போது அதிகளவான நன்மைகளினைப் பெற்றுக்கொள்ள முடியுமாம். இதனை காலை ஆகாரத்துடன் சேர்த்துக்கொண்டால் அந்த நாளில் மிகுந்த உத்வேகமான சக்தியினை இது உங்களுக்கு அளிக்குமாம்.
***
No comments:
Post a Comment