Tuesday, June 29, 2010
உடற் பருமனிலிருந்து போராட உதவும் "செத்தல் மிளகாய்"
ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், செத்தல் மிளகாயிலுள்ள "கெப்சசெய்ன்" என்கின்ற இரசாயமானது உடம்பில் ஏராளமான நன்மைபயக்கும் புரத மாற்றங்களினை ஏற்படுத்தி உடற்பருமனைக் குறைக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.
ஜொங் வொன் யுன் மற்றும் அவரது குழுவினர் உடற் பருமனாவது உலகில் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுவதாக வகைப்படுத்தியுள்ளனர். ஆய்வுகூட முடிவுகளின் பிரகாரம், "கெப்சசெய்ன்" இரசாயனமானது, கலோரியினை உள்ளெடுப்பதனை குறைக்கின்றது, கொழுப்பு திசுக்களினை சுருக்குகின்றது, இரத்தத்தில் கொழுப்பின் மட்டத்தினை குறைந்தளவில் பேண உதவுகின்றது. இதன்காரணமாக உடற்பருமனைக் குறைக்க உதவுகின்றது.
இந்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் ஆய்வுகூட எலிகள் மீது "கெப்சசெய்ன்" இரசாயனத்தினை செலுத்தியும், "கெப்சசெய்ன்" இரசாயனத்தினை செலுத்தாமலும் ஆய்வினை மேற்கொண்டனர். "கெப்சசெய்ன்" இரசாயனம் செலுத்தப்பட்ட எலிகள், அதன் உடல் நிறையில் 8 சதவீதத்தினை இழந்துள்ளதுடன், கொழுப்பில் காணப்படுகின்ற ஆகக் குறைந்தது முக்கியமான 20 புரதங்களின் அளவுகளில் மாற்றங்களை காட்டியது. இந்த புரதங்கள் கொழுப்பினை கரைப்பதற்காக பணிபுரிகின்றது.
இந்த மாற்றங்கள் மூலம் உடற்பருமனிலிருந்து போராட "கெப்சசெய்ன்" உதவுவதன் காரணத்தினால் புதிய செயற்பாடுகளுக்கு இது உந்துசக்தியாக விளங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் உடற்பருமனா என்ன முடிவெடுத்துள்ளீர்கள்???...........
***
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment