Thursday, June 24, 2010
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் பெறப்பட்ட பிரமாண்டமான வெற்றிகள்
தென்னாபிரிக்க மண்ணில் தற்சமயம் 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற G குழுவிற்கான போட்டியில் போர்த்துக்கல் நாடானது வட கொரியா அணியினை 7-0 என அபாரமாக வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட மிகப் பிரமாண்டமான வெற்றிகளில் ஒன்றாக பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் பெற்றப்பட்ட பிரமாண்டமான முதல் 10வெற்றிகள்..........
#10. துருக்கி(7கோல்கள்) V தென்கொரியா(0)
1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் துருக்கி அணியானது தென்கொரியா அணியினை 7–0 என வீழ்த்தியது.
1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலேயே தென் கொரியா முதன்முதலில் பங்குபற்றியது.
#09. உருகுவே(7கோல்கள்) V ஸ்கொட்லாந்து(0)
1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் உருகுவே அணியானது ஸ்கொட்லாந்து அணியினை 7–0 என வீழ்த்தியது.
#08. போலந்து(7கோல்கள்) V ஹெய்ட்டி(0)
1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் போலந்து அணியானது ஹெய்ட்டி அணியினை 7–0 என வீழ்த்தியது.
1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் தனது ஆரம்பப் போட்டியில் இத்தாலி அணியுடான போட்டியில் முன்னிலை வகித்த ஹெய்ட்டி அணியானது இறுதியில் 3-1 என தோல்வியடைந்தமை நினைவுகூரத்தக்க விடயமாகும்.
#07. போர்த்துக்கல்(7கோல்கள்) V வட கொரியா(0)
தற்சமயம் தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவருகின்ற 19வது உலகக் கிண்ணத் தொடரில் (2010) போர்த்துக்கல் அணியானது வட கொரியா அணியினை 7–0 என வீழ்த்தியது.
தனது ஆரம்ப குழுப் போட்டியில் பிரேசில் அணியிடம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் போராடி தோற்ற வடகொரியா, போர்த்துக்கல் அணிக்கு சவாலாக விளங்குமென்று அனைவராலும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இடைவேளைக்கு முன்னர் 1 கோலினை மாத்திரமே பெற்ற போர்த்துக்கல் அணி இடைவேளைக்கு பின்னர் 6 கோல்களினை அபாரமாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரமாண்டமான வெற்றி பெறப்பட்ட இந்தப் போட்டியில் மாத்திரமே எந்தவொரு வீரரும் ஹெட் - ரிக் கோல்களினைப் பெறவில்லை குறிப்பிடத்தக்கதாகும்.
#06. சுவீடன்(8கோல்கள்) V கியூபா(0)
1938ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் சுவீடன் அணியானது கியூபா அணியினை 8–0 என வீழ்த்தியது.
#05. உருகுவே(8கோல்கள்) V பொலிவியா(0)
1950ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் உருகுவே அணியானது பொலிவியா அணியினை 8–0 என வீழ்த்தியது.
#04. ஜேர்மனி(8கோல்கள்) V சவுதி அரேபியா(0)
2002ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஜேர்மனி அணியானது சவுதி அரேபியா அணியினை 8–0 என வீழ்த்தியது
#03. ஹங்கேரி(9கோல்கள்) V தென்கொரியா(0)
1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஹங்கேரி அணியானது தென்கொரியா அணியினை 9–0 என வீழ்த்தியது.
தென் கொரியா 7-0 என இதற்கு முந்தைய தனது போட்டியில், துருக்கி அணியிடம் தோல்வியினை தழுவியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
#02. யுகோஸ்லாவியா(9கோல்கள்) V சயர்(0)
1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் யுகோஸ்லாவியா அணியானது சயர் [தற்சமயம் கொங்கோ ஜனநாயக குடியரசு] அணியினை 9–0 என வீழ்த்தியது.
இந்த உலகக் கிண்ணமே சயர் அணியின் முதலாவதும் இறுதியுமான உலகக் கிண்ணமாகும்.
#01. ஹங்கேரி(10கோல்கள்) V எல் சல்வடோர்(1)
1982ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஹங்கேரி அணியானது எல் சல்வடோர் அணியினை 10–1 என வீழ்த்தியமை உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் மிகச் சிறந்த அதிக கோல்களினால் பெறப்பட்ட வெற்றியாக கருதப்படுகின்றது.
இங்கே சுவாரஷ்சிய விடயமென்னவென்றால் முதல் சுற்றில் ஹங்கேரி அணியானது, பெல்ஜியம் அணியுடனான இறுதி குழுப்போட்டியினை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டதனால் ஹங்கேரி அணியானது முதல் சுற்றுடன் வெளியேறியது.
***
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment