
படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துகின்றீர்களா? ஆம் எனில், இது உங்களது சுகாதாரத்தைப் பாதிப்பதாக ஒரு பிரதான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக நித்திரையின்மை, தலையிடிகள் ஏற்படும் அதேவேளை ஆழ்ந்த நித்திரையில் நேரத்தினைச் செலவிடுவதனை குறைவடையச் செய்கின்றது.
போதுமான நித்திரையினைப் பெறத் தவறுவதன் காரணமாக மனவழுத்தங்கள் ஏற்படுகின்றது,கவனங்கள் குறைவடைகின்றது மற்றும் ஆளுமை/நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
போதுமான நித்திரையின்மை காரணமாக இளவயது வயதினர் oஒழுங்கீனங்களில் தமது கவனத்தினைச் செலுத்துவதுடன், கல்விசார் செயற்பாடுகளில் முன்னேற்றங்களை அடையத் தவறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியானது கையடக்கத் தொலைபேசி உற்பத்தியாளர்களால் விஞ்ஞானிகளுக்கு நிதிவசதிகளினை அளித்து மேற்கொள்ளப்பட்டது.மேலும் சாதனங்களிலிருந்து வெளியாகின்ற கதிரியக்க மாசுகள் தொடர்பாக சுகாதார பயமுறுத்தல்களையும் கவனத்தில் கொண்டனர்.
படுக்கைக்குப் போகும் முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரை கட்டத்தினை அடைவதற்கு நீண்ட நேரம் எடுத்ததுடன் அவற்றில் குறைவான நேரத்தினையே செலவிட்டனர் என்பதும் ஆய்வின் முடிவாக இருந்தது.
உடம்பிலுள்ள கலங்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கும் அன்றைய நாளில் பாதிக்கப்பட்டு சேதமடைந்தவை சீரடைவதற்கும் ஆழ்ந்த நித்திரை பொழுதானது அவசியமானதாகும்.
எடின்பேர்க் நித்திரை மையத்தினுடைய இயக்குனர் மருத்துவர் Chris Idzikowski கருத்து தெரிவிக்கையில் : “படுக்கைக்குப் போகும் நேரத்துக்கு முன்னர் கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த நித்திரையின்றி எதிர்மறையாகப் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதற்கு தற்சமயம் போதுமான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளது.” என்கின்றார்.
இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் 18 தொடக்கம் 45 வயதிற்குட்பட்ட 36 பெண்களையும், 35 ஆண்களையும் ஆய்வுக்குட்படுத்தினர்.
சிலர் கையடக்கத் தொலைபேசியினைப் பாவித்த போது கதிரியக்க அதிர்வுகளினைப் பெறுகின்றனர். ஏனையவர்கள் ஒன்றினையும் பெறவில்லை.
இதன் பிரகாரம், இதன் முதல் குழுவினர் ஆழ்ந்த நித்திரையின் முதல் கட்டத்துக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்ததுடன் மேலும் ஆழ்ந்த நித்திரையினை குறைந்த நேரமே மேற்கொண்டனர்.
இந்தப் பெற்பேறுகளானது பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சி அளிக்கலாம், ஏனெனில் நித்திரைக்கு முன்னர் அவர்களுடைய குழந்தைகள் தமது நண்பர்களுடன் கையடக்கத் தொலைபேசியில் வழமையாக அளவளாவுவதனலாகும்.
இந்த ஆய்வானது கரோலின்ஸ்கா நிறுவகம் மற்றும் சுவீடனின் அப்சலா பல்கலைக்கழகம் மற்றும் மிச்சிகன் வய்ன் அரச பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாகும்.
ஆனாலும் இந்த முடிவுகள் ஒரு முடிந்தமுடிவல்ல என்கின்றார்கள். கையடக்கத் தொலைபேசியினைப் பயன்படுத்துவதால் நித்திரைக் குழப்பங்கள் ஏற்படுகின்றது என்கின்ற முடிவுக்கு தாம் வரவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆனால் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் Bengt Arnetz கருத்து தெரிவிக்கையில், கையடக்கத் தொலைபேசியிலிருந்து வெளிவருகின்ற கதிரியக்கங்களின் காரணமாக மூளையில் ஏற்படுகின்ற பாதிப்புகளினை அளவிடக் கூடியதாகவுள்ளது. கதிரியக்கங்களின் காரணமாக மூளையின் அழுத்த செயற்பாடானது பாதிப்படைந்து, ஆழ்ந்த நித்திரையில் மாறுதல்களினை ஏற்படுத்துகின்றதாம்.
***
#########################
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
உழவர் திருநாளாம் தைத் திருநாளில்
தமிழர் மனங்களில் அமைதியும்,சந்தோசமும் பெருகி
தமிழர் வாழ்வில் நிம்மதியும், செளபாக்கியமும் கரைபுரண்டோடி
நித்தமும் மகிழ்ச்சியில் திளைக்கவும்................
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற மரபுக்கிணங்க
வாழ்வில் சகலமும் பெற்று வளமுடன் வாழ்கவென
இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.........
கே.கே.லோகநாதன்
#######################
3 comments:
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி,வாழ்த்துக்கள்...!
Post a Comment