Saturday, January 16, 2010
உலகினை உலுக்கிய பூமியதிர்ச்சிகள்
கடந்த 12ம் திகதி ஹெய்ட்டியின் தலைநகரினை தாக்கிய பூமியதிர்ச்சிகளின் காரணமாக 100,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. 200 ஆண்டு காலத்தில் ஹெய்ட்டி நாட்டினைத் தாக்கிய மிக மோசமான பூமியதிர்ச்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பூமியதிர்ச்சியானது ரிச்டர் அளவுகோலில் 7.0 எனப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உள் நாட்டில் இடம்பெற்ற போர் மற்றும் வன்முறைகளினால் ஹெய்ட்டியானது மிகமோசமாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஹெய்ட்டியானது பன்னாட்டு உதவிகளினை தற்சமயம் கோரி நிற்கின்றது.
உலகில் பாரியளவில் மோசமான உயிர்ச் சேதங்களினை ஏற்படுத்திய சில பிரதானமான பூமியதிர்ச்சிகள்
1. 1556ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி, சீனாவின் ஷான்சி பிராந்தியத்தினை 8.0 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 830,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
2. 1976ம் ஆண்டு ஜூலை 28ம் திகதி, சீனாவின் டங்ஷன் பிராந்தியத்தினை 7.5 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 255,000 மக்கள் (உத்தியோகபூர்வ தகவல்) கொல்லப்பட்டனர். ஆனாலும் கொல்லப்பட்ட மக்களின் தொகை 655,000 ஆகுமென மதிப்பிடப்பட்டது.
3. 526ம் ஆண்டு மே 20ம் திகதி, அண்டிஒச் பய்ஷான்ரின் பேரரசினைத் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 250,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
4. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி, இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் மேற்கு கரையில் 9.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் காரணமாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாகிய சுனாமிப் பேரலையின் காரணமாக 230,210 மக்கள் கொல்லப்பட்டும், காணாமலும் போயினர்.
5. 1138ம் ஆண்டு ஒக்டோபர் 11ம் திகதி, சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தினை 8.5 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 230,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
6. 856ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி, ஈரானின் தம்ஹன் பிராந்தியத்தினை தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 200,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
7. 1920ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி, சீனாவின் நிங்ஷியா-ஹன்சு(ஹையுவான்) பிராந்தியத்தினை 7.8/8.5 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 200,000-240,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
8. 893+ம் ஆண்டு மார்ச் 23ம் திகதி, ஈரானின் அர்டாவில் பிராந்தியத்தினை தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
9. 1923ம் ஆண்டு செப்டம்பர் 01ம் திகதி, ஜப்பானின் கண்டோ பிராந்தியத்தினை 7.9 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 143,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
10. 1948ம் ஆண்டு ஒக்டோபர் 06ம் திகதி, துர்க்மெனிஸ்தான் அஷ்காவட் பிராந்தியத்தினை 7.3 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 111,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
11. 2005ம் ஆண்டு ஒக்டோபர் 08ம் திகதி, பாகிஸ்தானின் காஷ்மீர் பிராந்தியத்தினை 7.6/7.8 ரிச்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 80,000 மக்கள் (உத்தியோகபூர்வ தகவல்) கொல்லப்பட்டனர். ஆனாலும் கொல்லப்பட்ட மக்களின் தொகை 100,000 ஆகுமென மதிப்பிடப்பட்டது.
(தகவல்-United States Geological Survey)
***
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தகவலுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு நன்றிகள்
gujrat earth quake???
26 ஜனவரி 2001- குஜராத்தினை தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 19000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் .
Post a Comment