Sunday, January 3, 2010
நூறாவது பதிவு......
இன்று எனது நூறாவது பதிவுக்குரிய நாளாகும்.
நான் பதிவுலகுக்குள் நுழைந்தது எப்படி என இன்று நினைத்துப் பார்க்கின்றேன். நான் பதிவுலகுக்குள் நுழைந்தது ஒரு தற்செயலான நிகழ்வே ஆகும். ஏனெனில் ஆரம்பத்தில் பதிவுலகம் என்றால் என்னவென்றே அறிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் வாசித்த கணனி சஞ்சிகைகளில் பதிவுலகம் என்ற சொற்றொடரினை வாசித்தது இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றது. நான் முதன்முதலில் வாசித்த பதிவு யாதெனில் நம்ம நண்பர் வெற்றி FM முகாமையாளர் லோஷன் அண்ணாவினுடைய பதிவினைத் தான். அப்படி வாசிக்க முயற்சித்தது ஏனெனில் இசை உலகம் - ஒக்டோபர் 16-31, 2008 , என்னும் இதழில் வெளியாகியிருந்த லோஷன் அண்ணாவினுடைய செவ்வியில் அண்ணாவின் வலைப்பூ முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படியாக 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்துக்குள் நுழைய அதிர்ஷ்டவசமாக வாய்ப்புக் கிடைத்தது. நமக்கென்று சொந்தமாக ஒரு பதிவினை ஆரம்பிப்பது எவ்வாறென கூகிளில் தேடி சில விடயங்களைப் பெற்றுக்கொண்டு ஒரு வலைப்பூ முகவரியினை உருவாக்கிக் கொண்டேன். அந்தவகையில் அவ்வலைப்பூவில் என்ன பதிவை இடலாம் என யோசித்த போது பத்திரிகைகளில் வெளியாகிய என்னுடைய ஆக்கங்களினை இடலாம் எனலாம் யோசித்து “உலகில் உறைபனி உருகும் அபாயம்” என்னும் பத்திரிகை ஆக்கத்தினை என்னுடைய முதல் பதிவாக பதிவிட்டேன். ஆரம்பத்தில் பதிவிட்ட போது எந்தவிதமான அறிமுகத்தினையும் வெளியிடவில்லை. காரணம் எனக்கு அந்தவேளை தமிழ் தட்டச்சு தெரியாது. பின்னர் கூகிள் தமிழ் தட்டச்சு வசதியினை அறிந்துகொண்டு பதிவு தொடர்பாக சிறியதொரு அறிமுகத்தினை இட்டேன். இட்ட பதிவினை எவ்வாறு திரட்டிகளில் இணைப்பது என்பது தொடர்பாக திணறினேன். காரணம் HTML தொடர்பில் ஒன்றும் அறிந்திருக்காத காரணத்தினால், பின்னர் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் ஒருவாறாக அறிந்துகொண்டு தமிழிஷ் திரட்டியில் இணைத்துக்கொண்டு பதிவிட்டேன். (ஆரம்பத்தில் திரட்டிகளில் என் பதிவினை இணைத்த விதம் தற்சமயம் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது...) இப்படியாக ஆரம்பத்தில் கூகிள் தமிழ் தட்டச்சு வசதியினை பயன்படுத்தி சில பதிவுகளினை இட்டேன். பின்னர் இணையத்தில் தேடி “அழகி” என்ற மென்பொருளின் வசதியினை பயன்படுத்தியும் தற்சமயம் “NHM Writer ” மென்பொருளின் வசதியினை பயன்படுத்தி பதிவிடுகின்றேன். இவ்வாறு என்னுடைய பதிவிடல் சென்றுகொண்டிருக்கின்றது. மேலும் யுனிகோர்ட் தொடர்பில் நிலவிய குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிட்டது.
பதிவுலகம் தொடர்பான தொழில்நுட்பங்கள் தொடர்பில் ஓரளவே அறிந்துகொண்டுள்ளேன். பதிவுலகம் தொடர்பாக மேலும் கற்பதற்கு என்னுடைய தேடல்கள், முயற்சிகளினை இன்றும் தொடர்கின்றேன்.
பதிவுலகத்தில் நான் நுழைந்தது என்னுடைய எழுத்துப்பணிக்கான ஆர்வத்துக்கு மேலும்மேலும் தீனி போடுகின்றது. மேலும் என்னால் முடிந்தளவு பல்சுவைகளில் இன்று பதிவுகளினை இட்டுவருகின்றேன் என நினைக்கின்றேன்.
என் வலைப்பூவுக்கு தொடர்ந்து ஆக்கமும், ஊக்கமும் அளித்துவருகின்ற பதிவுலக வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் இதயம் கணிந்த நன்றிகள். மேலும் என் பதிவினை சுமந்து சென்று உலகம் முழுவதும் சேர்க்கும் தளங்கள் அனைத்துக்கும் என் நன்றிகள்.
நண்பர்களே நீங்கள் வழங்கிய, வழங்கிவருகின்ற ஆதரவானது என்னை மென்மேலும் பதிவுலகில் எழுதுவதற்கு உந்துசக்தியாக இருக்கின்றது. இந்தப் பதிவுலகில், நண்பர்களே உங்கள் ஆதரவினை தொடர்ந்தும் வேண்டி நிற்கின்றேன்.
##########################
***
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
best wishes...
Good luck and congrats Logan
அதே இசை உலகம் சஞ்சிகையில் வந்த பேட்டிதான் எனக்கும் பதிவுலகை அறிமுகம் செய்தது. அங்கிருந்து ஹிஸாமின் பதிவுக்கு சென்று, சூடான விவாதங்களில் பங்குபற்றியமை எனக்குள் ஒரு நம்பிக்கையையும் எனக்கொரு பாதையையும் காட்டியது.
வாழ்த்துக்கள் லோகநாதன்.. விடியலில் ஆரம்பம் பெற்றவர்களல்லவா நாம்..
சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!
தொடர்ந்து கலக்குங்கள்.....
நூறானது விரைவில் ஆயிரங்களாக வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து நிறைய எழுதுங்க... நிறைய படிங்க... இனிய புத்தாண்டு வாழ்த்துக்க்ள்...
உங்கள் அன்புக்கும் , வருகைக்கும் நன்றிகள்.
என் வலைப்பூவுக்கு தொடர்ந்து ஆக்கமும், ஊக்கமும் அளித்துவருகின்ற பதிவுலக வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு தடவை என் இதயம் கணிந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள்.. நூறு பதிவுகள்.. ஆயிரத்தை தொட்டு சாதனை படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Post a Comment