Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

Thursday, February 23, 2012

“Liebster Blog” விருதினை நினைத்துப் பார்க்கின்றேன்........



லோகநாதனின் பகிர்வுகள்என்கின்ற எனது வலைப்பூவுக்கு “Liebster Blog” என்கின்ற விருதினை வழங்கிய “ஆழ்கடல் களஞ்சியம்” வலைத்தளத்தினை நடாத்தும் Prabhadamu அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

“Liebster Blog” என்பது வலைப்பதிவர்களுக்கு வழங்கப்படும் ஜேர்மன் நாட்டு விருது என்றும், “Liebster” என்கின்ற சொல்லுக்கு “மிகவும் பிடித்த” என்ற அர்த்தமாம்.



எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதினை அன்புக்குரிய கீழ்க்கண்ட ஐந்து பதிவர்களுக்கு வழங்குவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்:

# அம்பாளடியாள்

# சிதறல்கள்

# நிலாக்கால நினைவுகள்

# வரலாற்று சுவடுகள்

# தகவல் துளிகள்

விருது பெற்ற நண்பர்கள் இந்த விருதை தங்கள் பதிவில் இட்டு தங்களுக்கு பிடித்த ஐந்து வலைப்பூக்களுக்கு விருதை அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி….

***

Tuesday, January 31, 2012

300வது பதிவு - டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தடவைகள் வெள்ளையடிப்பு செய்யப்பட்ட இந்திய அணி



அண்மையில் நடைபெற்று முடிவடைந்த அவுஸ்திரேலிய,இந்திய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவிக்கொண்டது. இதன் மூலம் இந்திய அணி, அதிக தடவை எதிரணியால் வெள்ளையடிப்பு செய்யப்பட்ட எதிரணி என்கின்ற மோசமான சாதனையினை புதுப்பித்துக் கொண்டது.

இந்திய அணி வெள்ளையடிப்பு செய்யப்பட்ட டெஸ்ட் தொடர்கள் வருமாறு......
(ஆகக்குறைந்தது 03 டெஸ்ட் போட்டிகள் )

 இங்கிலாந்து 5 எதிர் இந்தியா ( இங்கிலாந்து மண்ணில்), 1959

 மே.தீவுகள் 5 எதிர் இந்தியா ( மே.தீவுகள் மண்ணில்), 1961/62

 இங்கிலாந்து 3 எதிர் இந்தியா ( இங்கிலாந்து மண்ணில்), 1967

 அவுஸ்திரேலியா 4 எதிர் இந்தியா (அவுஸ்திரேலிய மண்ணில்), 1967/68

 இங்கிலாந்து 3 எதிர் இந்தியா ( இங்கிலாந்து மண்ணில்), 1974

 அவுஸ்திரேலியா 3 எதிர் இந்தியா (அவுஸ்திரேலிய மண்ணில்~ போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்), 1999/00

 இங்கிலாந்து 4 எதிர் இந்தியா ( இங்கிலாந்து மண்ணில்), 2011

 அவுஸ்திரேலியா 4 எதிர் இந்தியா (அவுஸ்திரேலிய மண்ணில்~ போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்), 2011/12

************************************************



ஆம்..... உங்களில் ஒருவனாக லோகநாதனின் பகிர்வுகளினூடாக பதிவுலகில் தடம் பதித்து 32 மாதங்களினை அண்மிக்கும் இந்தவேளையில் என் 300வது பதிவில் உங்களினை சந்திப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.

அந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், இணையத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.



என் வலைப்பூக்களில் வெளியாகிய ஆக்கங்களை தொகுத்து நூலுருவாக்க வேண்டும் என்பதே என் அவாவாகும். வாய்ப்புக்கள், உதவிகள், ஒத்தாசைகள் கிடைக்குமாயின் என் கனவு நனவாகும் என எண்ணுகின்றேன்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்........!!!

நன்றிகள்.....!!! வாழ்த்துக்கள்.......!!!

என்றும் உங்கள் அன்பின்
கே.கே.லோகநாதன்

***

Tuesday, August 31, 2010

முன்னேற்றப் பாதையில்… 200வது பதிவு .....!!!




ஆம்..... உங்களில் ஒருவனாக லோகநாதனின் பகிர்வுகளினூடாக பதிவுலகில் கால்பதித்து இன்று 200வது பதிவில் உங்களினை சந்திப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.

பதிவுலகில் தடம்பதித்த என்னை நண்பர்களின் அன்பான வரவேற்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் வலையுலகில் என்னை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.

அந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், இணயத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.



பதிவுலகில் தடம் பதித்து 14 மாதங்களினை அண்மிக்கும் இந்தவேளையில் என் வலைப்பூவினை ருசித்துவிட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை 50000+.
[என் வலைப்பூவில் கொடித் தரவினை இணைத்தது பதிவுலகில் தடம் பதித்து 02 மாதங்களின் பின்னரே....]

என் உள்ளம் புத்துணர்ச்சி அடைவதற்கு பதிவுலகம் ஒருவிதத்தில் உறுதுணையாக இருந்துவருவதையிட்டும் திருப்திகொள்கின்றேன்.

என் வலைப்பூக்களில் வெளியாகிய ஆக்கங்களை தொகுத்து நூலுருவாக்க வேண்டும் என்பதே என் அவாவாகும். வாய்ப்புக்கள், உதவிகள், ஒத்தாசைகள் கிடைக்குமாயின் என் கனவு நனவாகும் என எண்ணுகின்றேன்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்........!!!

நன்றிகள்.....!!! வாழ்த்துக்கள்.......!!!

என்றும் உங்கள் அன்பின்
கே.கே.லோகநாதன்


***

Sunday, January 3, 2010

நூறாவது பதிவு......



இன்று எனது நூறாவது பதிவுக்குரிய நாளாகும்.

நான் பதிவுலகுக்குள் நுழைந்தது எப்படி என இன்று நினைத்துப் பார்க்கின்றேன். நான் பதிவுலகுக்குள் நுழைந்தது ஒரு தற்செயலான நிகழ்வே ஆகும். ஏனெனில் ஆரம்பத்தில் பதிவுலகம் என்றால் என்னவென்றே அறிந்திருக்கவில்லை. ஆனாலும் நான் வாசித்த கணனி சஞ்சிகைகளில் பதிவுலகம் என்ற சொற்றொடரினை வாசித்தது இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றது. நான் முதன்முதலில் வாசித்த பதிவு யாதெனில் நம்ம நண்பர் வெற்றி FM முகாமையாளர் லோஷன் அண்ணாவினுடைய பதிவினைத் தான். அப்படி வாசிக்க முயற்சித்தது ஏனெனில் இசை உலகம் - ஒக்டோபர் 16-31, 2008 , என்னும் இதழில் வெளியாகியிருந்த லோஷன் அண்ணாவினுடைய செவ்வியில் அண்ணாவின் வலைப்பூ முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படியாக 2009ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவுலகத்துக்குள் நுழைய அதிர்ஷ்டவசமாக வாய்ப்புக் கிடைத்தது. நமக்கென்று சொந்தமாக ஒரு பதிவினை ஆரம்பிப்பது எவ்வாறென கூகிளில் தேடி சில விடயங்களைப் பெற்றுக்கொண்டு ஒரு வலைப்பூ முகவரியினை உருவாக்கிக் கொண்டேன். அந்தவகையில் அவ்வலைப்பூவில் என்ன பதிவை இடலாம் என யோசித்த போது பத்திரிகைகளில் வெளியாகிய என்னுடைய ஆக்கங்களினை இடலாம் எனலாம் யோசித்து “உலகில் உறைபனி உருகும் அபாயம்” என்னும் பத்திரிகை ஆக்கத்தினை என்னுடைய முதல் பதிவாக பதிவிட்டேன். ஆரம்பத்தில் பதிவிட்ட போது எந்தவிதமான அறிமுகத்தினையும் வெளியிடவில்லை. காரணம் எனக்கு அந்தவேளை தமிழ் தட்டச்சு தெரியாது. பின்னர் கூகிள் தமிழ் தட்டச்சு வசதியினை அறிந்துகொண்டு பதிவு தொடர்பாக சிறியதொரு அறிமுகத்தினை இட்டேன். இட்ட பதிவினை எவ்வாறு திரட்டிகளில் இணைப்பது என்பது தொடர்பாக திணறினேன். காரணம் HTML தொடர்பில் ஒன்றும் அறிந்திருக்காத காரணத்தினால், பின்னர் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் ஒருவாறாக அறிந்துகொண்டு தமிழிஷ் திரட்டியில் இணைத்துக்கொண்டு பதிவிட்டேன். (ஆரம்பத்தில் திரட்டிகளில் என் பதிவினை இணைத்த விதம் தற்சமயம் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது...) இப்படியாக ஆரம்பத்தில் கூகிள் தமிழ் தட்டச்சு வசதியினை பயன்படுத்தி சில பதிவுகளினை இட்டேன். பின்னர் இணையத்தில் தேடி “அழகி” என்ற மென்பொருளின் வசதியினை பயன்படுத்தியும் தற்சமயம் “NHM Writer ” மென்பொருளின் வசதியினை பயன்படுத்தி பதிவிடுகின்றேன். இவ்வாறு என்னுடைய பதிவிடல் சென்றுகொண்டிருக்கின்றது. மேலும் யுனிகோர்ட் தொடர்பில் நிலவிய குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிட்டது.
பதிவுலகம் தொடர்பான தொழில்நுட்பங்கள் தொடர்பில் ஓரளவே அறிந்துகொண்டுள்ளேன். பதிவுலகம் தொடர்பாக மேலும் கற்பதற்கு என்னுடைய தேடல்கள், முயற்சிகளினை இன்றும் தொடர்கின்றேன்.
பதிவுலகத்தில் நான் நுழைந்தது என்னுடைய எழுத்துப்பணிக்கான ஆர்வத்துக்கு மேலும்மேலும் தீனி போடுகின்றது. மேலும் என்னால் முடிந்தளவு பல்சுவைகளில் இன்று பதிவுகளினை இட்டுவருகின்றேன் என நினைக்கின்றேன்.
என் வலைப்பூவுக்கு தொடர்ந்து ஆக்கமும், ஊக்கமும் அளித்துவருகின்ற பதிவுலக வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் இதயம் கணிந்த நன்றிகள். மேலும் என் பதிவினை சுமந்து சென்று உலகம் முழுவதும் சேர்க்கும் தளங்கள் அனைத்துக்கும் என் நன்றிகள்.

நண்பர்களே நீங்கள் வழங்கிய, வழங்கிவருகின்ற ஆதரவானது என்னை மென்மேலும் பதிவுலகில் எழுதுவதற்கு உந்துசக்தியாக இருக்கின்றது. இந்தப் பதிவுலகில், நண்பர்களே உங்கள் ஆதரவினை தொடர்ந்தும் வேண்டி நிற்கின்றேன்.


##########################



***
Blog Widget by LinkWithin