அண்மையில் நடைபெற்று முடிவடைந்த அவுஸ்திரேலிய,இந்திய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவிக்கொண்டது. இதன் மூலம் இந்திய அணி, அதிக தடவை எதிரணியால் வெள்ளையடிப்பு செய்யப்பட்ட எதிரணி என்கின்ற மோசமான சாதனையினை புதுப்பித்துக் கொண்டது.
இந்திய அணி வெள்ளையடிப்பு செய்யப்பட்ட டெஸ்ட் தொடர்கள் வருமாறு......
(ஆகக்குறைந்தது 03 டெஸ்ட் போட்டிகள் )
இங்கிலாந்து 5 எதிர் இந்தியா ( இங்கிலாந்து மண்ணில்), 1959
மே.தீவுகள் 5 எதிர் இந்தியா ( மே.தீவுகள் மண்ணில்), 1961/62
இங்கிலாந்து 3 எதிர் இந்தியா ( இங்கிலாந்து மண்ணில்), 1967
அவுஸ்திரேலியா 4 எதிர் இந்தியா (அவுஸ்திரேலிய மண்ணில்), 1967/68
இங்கிலாந்து 3 எதிர் இந்தியா ( இங்கிலாந்து மண்ணில்), 1974
அவுஸ்திரேலியா 3 எதிர் இந்தியா (அவுஸ்திரேலிய மண்ணில்~ போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்), 1999/00
இங்கிலாந்து 4 எதிர் இந்தியா ( இங்கிலாந்து மண்ணில்), 2011
அவுஸ்திரேலியா 4 எதிர் இந்தியா (அவுஸ்திரேலிய மண்ணில்~ போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்), 2011/12
************************************************
ஆம்..... உங்களில் ஒருவனாக லோகநாதனின் பகிர்வுகளினூடாக பதிவுலகில் தடம் பதித்து 32 மாதங்களினை அண்மிக்கும் இந்தவேளையில் என் 300வது பதிவில் உங்களினை சந்திப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.
அந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், இணையத்தளங்கள், இணையத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.
என் வலைப்பூக்களில் வெளியாகிய ஆக்கங்களை தொகுத்து நூலுருவாக்க வேண்டும் என்பதே என் அவாவாகும். வாய்ப்புக்கள், உதவிகள், ஒத்தாசைகள் கிடைக்குமாயின் என் கனவு நனவாகும் என எண்ணுகின்றேன்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்........!!!
நன்றிகள்.....!!! வாழ்த்துக்கள்.......!!!
என்றும் உங்கள் அன்பின்
கே.கே.லோகநாதன்
***
3 comments:
300 பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்.
இந்திய அணிக்கு இது போதாத காலம்
300 th பதிவுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே.......
Post a Comment