பச்சைத் தேயிலையினை(Green Tea) அருந்திவருவதன் மூலம் புகைத்தலினால் ஏற்படுகின்ற சுவாசப்பை புற்று நோயின் அபாயத்தினைக் குறைந்துக் கொள்ளலாம் என புதியதொரு ஆய்வு தெரிவிக்கின்றது.
“தாய்வான் நாட்டில் எல்லா புற்று நோய் மரணங்களிலும், சுவாசப்பை புற்று நோயின் காரணமாகவே அதிகமானவர்கள் மரணிக்கின்றனர் என்கின்றார்” தாய்வான் சுங் ஷன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதுமாணி மாணவன் I-Hsin Lin. இந்த ஆய்வுக் குழுவிற்கு தலைமை தாங்கியது I-Hsin Lin ஆவார்.
தேயிலை, குறிப்பாக பச்சைத் தேயிலையானது உறுதியான நோய் எதிர்ப்பு பொருளான பொலிப்பெனொல்ஸ்சினைக் கொண்டுள்ளது. மேலும் தேயிலையானது கட்டிகளினை தோற்றுவிப்பதற்கெதிராக செயற்படுகின்றதாம்.
Lin மற்றும் அவரது குழுவினர், சுவாசப்பை புற்று நோயினை கொண்ட 170 நோயாளிகளையும், கட்டுப்பாடுகளைக் கொண்ட 340 ஆரோக்கியமானவர்களையும் தமது ஆய்வில் உள்ளடக்கியிருந்தனர்.
இந்த ஆய்வுக்காக அவர்கள் வினாக்கொத்துக்களினை வழங்கி அதில் அவர்களின் தனிப்பட்ட விபரங்கள், சிகரெட் புகைக்கும் பழக்கங்கள், பச்சை தேயிலை அருந்துவது தொடர்பான விபரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளினை உட்ளெடுத்தல் தொடர்பான விபரங்கள், சமைத்தல் முறைகள் மற்றும் குடும்பத்தில் சுவாசப்பை புற்று நோயினது பாதிப்பு விபரம் தொடர்பான தகவல்களினைத் திரட்டினர்.
பச்சைத் தேயிலையினை ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அருந்துபவர்களினை விடவும், புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களிடையே, அவர்கள் பச்சைத் தேயிலையினை அருந்தாதவர்களாக இருந்தவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயினது அபாயம் 5.61-போல்ட் அதிகரித்துக் காணப்பட்டது.
பச்சைத் தேயிலையினை ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அருந்துபவர்களினை விடவும், புகை பிடிப்பவர்களிடையே, அவர்கள் பச்சைத் தேயிலையினை அருந்தாதவர்களாக இருந்தவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயினது அபாயம் 12.71-போல்ட் அதிகரித்துக் காணப்பட்டது.
“இந்த அபாய வேறுபாடுகள் தொடர்பில் ஜீன்கள் பிரதான வகிபாகத்தினை வகிக்கலாம்” என Lin மற்றும் அவரது குழுவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர் என புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தின் வெளியீடு தெரிவிக்கின்றது.
“புகைத்தல் உடல் நலத்துக்கு கேடானதாகும்”
2 comments:
பயனுள்ள இடுகை...
பச்சைத்தேயிலையின் பயன்பாடு மக்களிடையே தற்போது கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது.
நன்றிகள்
Post a Comment