√ தேயிலையானது பல்வேறு வகையான ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கின்ற நோயெதிர்ப்பு சக்திகள், விற்றமின்கள், கனிப்பொருட்களைகொண்டுள்ளதாக ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதன் சில நன்மைகளாவன; * கொலஸ்ரோலை ஒழுங்குபடுத்துகின்றது.
* புற்று நோய், நீரிழிவு, இதய நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
பச்சைத் தேயிலையினை(Green Tea) அருந்திவருவதன் மூலம் புகைத்தலினால் ஏற்படுகின்ற சுவாசப்பை புற்று நோயின் அபாயத்தினைக் குறைந்துக் கொள்ளலாம் என புதியதொரு ஆய்வு தெரிவிக்கின்றது.
“தாய்வான் நாட்டில் எல்லா புற்று நோய் மரணங்களிலும், சுவாசப்பை புற்று நோயின் காரணமாகவே அதிகமானவர்கள் மரணிக்கின்றனர் என்கின்றார்” தாய்வான் சுங் ஷன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதுமாணி மாணவன் I-Hsin Lin. இந்த ஆய்வுக் குழுவிற்கு தலைமை தாங்கியது I-Hsin Linஆவார்.
தேயிலை, குறிப்பாக பச்சைத் தேயிலையானது உறுதியான நோய் எதிர்ப்பு பொருளான பொலிப்பெனொல்ஸ்சினைக் கொண்டுள்ளது. மேலும் தேயிலையானது கட்டிகளினை தோற்றுவிப்பதற்கெதிராக செயற்படுகின்றதாம்.
Lin மற்றும் அவரது குழுவினர், சுவாசப்பை புற்று நோயினை கொண்ட 170 நோயாளிகளையும், கட்டுப்பாடுகளைக் கொண்ட 340 ஆரோக்கியமானவர்களையும் தமது ஆய்வில் உள்ளடக்கியிருந்தனர்.
இந்த ஆய்வுக்காக அவர்கள் வினாக்கொத்துக்களினை வழங்கி அதில் அவர்களின் தனிப்பட்ட விபரங்கள், சிகரெட் புகைக்கும் பழக்கங்கள், பச்சை தேயிலை அருந்துவது தொடர்பான விபரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளினை உட்ளெடுத்தல் தொடர்பான விபரங்கள், சமைத்தல் முறைகள் மற்றும் குடும்பத்தில் சுவாசப்பை புற்று நோயினது பாதிப்பு விபரம் தொடர்பான தகவல்களினைத் திரட்டினர்.
பச்சைத் தேயிலையினை ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அருந்துபவர்களினை விடவும், புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களிடையே, அவர்கள் பச்சைத் தேயிலையினை அருந்தாதவர்களாக இருந்தவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயினது அபாயம் 5.61-போல்ட் அதிகரித்துக் காணப்பட்டது.
பச்சைத் தேயிலையினை ஒரு நாளில் குறைந்தது ஒரு தடவையாவது அருந்துபவர்களினை விடவும், புகை பிடிப்பவர்களிடையே, அவர்கள் பச்சைத் தேயிலையினை அருந்தாதவர்களாக இருந்தவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயினது அபாயம் 12.71-போல்ட் அதிகரித்துக் காணப்பட்டது.
“இந்த அபாய வேறுபாடுகள் தொடர்பில் ஜீன்கள் பிரதான வகிபாகத்தினை வகிக்கலாம்” என Lin மற்றும் அவரது குழுவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர் என புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க சங்கத்தின் வெளியீடு தெரிவிக்கின்றது.
அவுஸ்ரேலிய, சிட்னி பல்கலைக்கழக சர்வதேச சுகாதாரத்துக்கான ஜோர்ஜ் நிறுவக ஆய்வாளர் Rachel Huxley(D.Phil) மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க கோப்பி மற்றும் தேயிலை ஆகியன உதவிபுரிவதாக கண்டறிந்துள்ளனர்.
இதற்காக அவரது குழுவினர் கோப்பியருந்தும் 457,922 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 18 ஆய்வுகளையும் , கபின் அற்ற கோப்பியருந்தும் 225,516 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 6 ஆய்வுகளையும் மேலும் தேநீர் அருந்தும் 286,701 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 7 ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.
பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஒரு நாளில் மேலதிகமாக அருந்துகின்ற ஒவ்வொரு கோப்பை கோப்பியினால் நீரிழிவு நோயின் அதிகரித்த அபாயமானது 7% இனால் குறைவடைவதாக கண்டறிந்துள்ளனர்.
ஒரு நாளில் 3-4 கோப்பை அருந்துபவர்கள், 0-2 கோப்பை அருந்துபவர்களை அருந்துபவர்களை விடவும் 25% இற்கும் குறைவான அபாயங்களினை எதிர்நோக்குகின்றனர்.
மேலும் இந்த ஆய்வின் பிரகாரம் கபின் அற்ற கோப்பியருந்துபவர்கள் ஒருநாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், கோப்பி அருந்தாதவர்களைக்காட்டிலும் அண்ணளவாக 1/3 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின்அபாயத்தை எதிர்கொள்கின்றனர். தேநீர் அருந்துபவர்கள் ஒரு நாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், தேநீர் அருந்தாதவர்களைக் காட்டிலும்அண்ணளவாக 1/5 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின் அபாயத்தைஎதிர்கொள்கின்றனர்.
நாமும் நாள்தோறும் கோப்பி அல்லது தேநீர் அருந்தி நீரிழிவு நோயின் அபாயத்தினைக் குறைத்துக் கொள்வோமாக...........