Sunday, December 15, 2013

சர்வதேச தேயிலை தினம்

சர்வதேச தேயிலைத் தினமானது 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், வியட்னாம் போன்ற ஆசிய நாடுகளிலும் கென்யா, உகண்டா, தான்சானியா, மாலாவி போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தேயிலை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான  தகவல் துளிகள்;


√ தேயிலையின் இரசாயனவியல் பெயர் "கமேலியா சிசென்சிஸ்" ஆகும்.

√ தேயிலையானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

√ தண்ணீரினை அடுத்து உலகில் அதிகம் பேரால் நுகரப்படும் பானம் தேநீர் ஆகும். 

√ தேயிலையானது உலகில் சுமாராக 52 நாடுகளில் வளர்க்கப்படுகின்றது.

√  உலகில் தலா நுகர்வு அடிப்படையில் உலகில் அதிகளவு தேநீரை நுகர்வோர் அயர்லாந்து நாட்டவரே ஆவர்.

√  உலகில் தினசரி 3 பில்லியன் குவளை தேநீர் நுகர்வு செய்யப்படுகின்றது.

√ தேயிலையானது பல்வேறு வகையான ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கின்ற நோயெதிர்ப்பு சக்திகள், விற்றமின்கள், கனிப்பொருட்களை கொண்டுள்ளதாக ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.  இதன் சில நன்மைகளாவன;
* கொலஸ்ரோலை ஒழுங்குபடுத்துகின்றது.
புற்று நோய்,  நீரிழிவு, இதய நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
நீர்ப்பீடணத் தொகுதியினை ஊக்குவிக்கின்றது.
எலும்புகளைப் பலப்படுத்துகின்றது.
மூட்டு வாத நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
பக்றீரியா, வைரஸ்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
உடற்பருமனை குறைக்க உதவுகின்றது.
பற்களுக்கு உறுதியளிக்கின்றது.
 
(புகைப்படம் - சூரியகந்தை, இரத்தினபுரி)

√ தேயிலையில் பிரதானமாக 06 வகைகள் உண்டு.
அவையாவன, கிறீன் (Green), வைட் (White), யெலோ (Yellow), ஊலங் (Oolong), ரெட் (Red), ப்ளக் (Black) ஆகியனவாகும். இவை அனைத்தும் தேயிலையில் இருந்து வந்தாலும்,
இவை தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தும் முறைகளாலும் இவ்வாறு வேறுபடுகின்றன

√ உலகில் 3200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேயிலைத் தாவரம் சீனா நாட்டில் காணப்படுகின்றது.




ஒவ்வொரு நாளும் நாம் அருந்துகின்ற தேநீரின் சுவை எமக்கு உற்சாகத்தினை வழங்குகின்றதுஅந்த தேநீரின் சுவையின் சுவையினை எமக்கு வழங்க தம்மை அர்ப்பணிக்கின்ற தொழிலாளர்களினை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம். 

# நண்பர்களே, தேநீர் குடித்தவாறுதான் இந்தப் பதிவினை நான் அச்சேற்றி முடித்தேன்.

(குறிப்பு : இந்தப் பதிவிலுள்ள புகைப்படங்கள் எனது ஹட்டன் பயணத்தின் போது கிளிக்கியவை ஆகும்)





2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான தகவல்களுக்கு நன்றி தோழரே...

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ…!

Blog Widget by LinkWithin