Showing posts with label புகைப்படப் பகிர்வு. Show all posts
Showing posts with label புகைப்படப் பகிர்வு. Show all posts

Sunday, December 15, 2013

சர்வதேச தேயிலை தினம்

சர்வதேச தேயிலைத் தினமானது 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், வியட்னாம் போன்ற ஆசிய நாடுகளிலும் கென்யா, உகண்டா, தான்சானியா, மாலாவி போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தேயிலை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான  தகவல் துளிகள்;


√ தேயிலையின் இரசாயனவியல் பெயர் "கமேலியா சிசென்சிஸ்" ஆகும்.

√ தேயிலையானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

√ தண்ணீரினை அடுத்து உலகில் அதிகம் பேரால் நுகரப்படும் பானம் தேநீர் ஆகும். 

√ தேயிலையானது உலகில் சுமாராக 52 நாடுகளில் வளர்க்கப்படுகின்றது.

√  உலகில் தலா நுகர்வு அடிப்படையில் உலகில் அதிகளவு தேநீரை நுகர்வோர் அயர்லாந்து நாட்டவரே ஆவர்.

√  உலகில் தினசரி 3 பில்லியன் குவளை தேநீர் நுகர்வு செய்யப்படுகின்றது.

√ தேயிலையானது பல்வேறு வகையான ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கின்ற நோயெதிர்ப்பு சக்திகள், விற்றமின்கள், கனிப்பொருட்களை கொண்டுள்ளதாக ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.  இதன் சில நன்மைகளாவன;
* கொலஸ்ரோலை ஒழுங்குபடுத்துகின்றது.
புற்று நோய்,  நீரிழிவு, இதய நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
நீர்ப்பீடணத் தொகுதியினை ஊக்குவிக்கின்றது.
எலும்புகளைப் பலப்படுத்துகின்றது.
மூட்டு வாத நோயிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
பக்றீரியா, வைரஸ்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
உடற்பருமனை குறைக்க உதவுகின்றது.
பற்களுக்கு உறுதியளிக்கின்றது.
 
(புகைப்படம் - சூரியகந்தை, இரத்தினபுரி)

√ தேயிலையில் பிரதானமாக 06 வகைகள் உண்டு.
அவையாவன, கிறீன் (Green), வைட் (White), யெலோ (Yellow), ஊலங் (Oolong), ரெட் (Red), ப்ளக் (Black) ஆகியனவாகும். இவை அனைத்தும் தேயிலையில் இருந்து வந்தாலும்,
இவை தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தும் முறைகளாலும் இவ்வாறு வேறுபடுகின்றன

√ உலகில் 3200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேயிலைத் தாவரம் சீனா நாட்டில் காணப்படுகின்றது.




ஒவ்வொரு நாளும் நாம் அருந்துகின்ற தேநீரின் சுவை எமக்கு உற்சாகத்தினை வழங்குகின்றதுஅந்த தேநீரின் சுவையின் சுவையினை எமக்கு வழங்க தம்மை அர்ப்பணிக்கின்ற தொழிலாளர்களினை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம். 

# நண்பர்களே, தேநீர் குடித்தவாறுதான் இந்தப் பதிவினை நான் அச்சேற்றி முடித்தேன்.

(குறிப்பு : இந்தப் பதிவிலுள்ள புகைப்படங்கள் எனது ஹட்டன் பயணத்தின் போது கிளிக்கியவை ஆகும்)





Friday, September 27, 2013

செப்டம்பர் 27 ⇨ உலக சுற்றுலா தினம் – புகைப்படப் பகிர்வு

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீஜிங்கில் இடம் பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women).

2013ம் வருடத்திற்கான கருப்பொருள் - சுற்றுலா மற்றும் நீர்: நமது பொதுவான எதிர்காலத்தை பாதுகாத்தல்

சுற்றுலா செல்வது எனக்கு ரொம்ப பிடித்தமான பொழுபோக்கு ஆகும். அந்தவகையில் சில சுற்றுலாத் தளங்களில் என்னால் படம்பிடிக்கப்பட்ட சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்வுறுகின்றேன்.

 
Y ஏழுமலை, கதிர்காமம் Y

 Y சிவன்சோலை, கிளிநொச்சி Y

Y வெருகல், திருகோணமலை Y

Y உகந்தை, அம்பாரை Y

Y நயினாதீவு, யாழ்ப்பாணம் Y

Y கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், மட்டக்களப்பு Y

Y சூரியகந்தை, இரத்தினபுரி Y

Y கேரதீவு, சங்குப்பிட்டி பாலம், பூநகரி Y

Y குமண பறவைகள் சரணாலயம் Y

***

Blog Widget by LinkWithin