உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீஜிங்கில் இடம் பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006 இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா; 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆபிரிக்கா. 2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women).
2013ம் வருடத்திற்கான கருப்பொருள் - சுற்றுலா மற்றும் நீர்: நமது பொதுவான எதிர்காலத்தை பாதுகாத்தல்
சுற்றுலா செல்வது எனக்கு ரொம்ப பிடித்தமான பொழுபோக்கு ஆகும். அந்தவகையில் சில சுற்றுலாத் தளங்களில் என்னால் படம்பிடிக்கப்பட்ட சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்வுறுகின்றேன்.
Y ஏழுமலை, கதிர்காமம் Y
Y சிவன்சோலை, கிளிநொச்சி Y
Y வெருகல், திருகோணமலை Y
Y உகந்தை, அம்பாரை Y
Y நயினாதீவு, யாழ்ப்பாணம் Y
Y கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர், மட்டக்களப்பு Y
Y சூரியகந்தை, இரத்தினபுரி Y
Y கேரதீவு, சங்குப்பிட்டி பாலம், பூநகரி Y
Y குமண பறவைகள் சரணாலயம் Y
***
3 comments:
"செப்டம்பர் 27 ⇨ உலக சுற்றுலா தினம் – புகைப்படப் பகிர்வு
அருமை..!
எதிர்ப்பார்த்து கொண்டு இருந்தேன்... படங்களுடன் பகிர்வு அருமை... வாழ்த்துக்கள்...
நன்றிகள் நண்பர்களே…!
Post a Comment