Sunday, December 20, 2009

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் கோப்பி,தேயிலை


அவுஸ்ரேலிய, சிட்னி பல்கலைக்கழக சர்வதேச சுகாதாரத்துக்கான ஜோர்ஜ் நிறுவக ஆய்வாளர் Rachel Huxley(D.Phil) மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க கோப்பி மற்றும் தேயிலை ஆகியன உதவிபுரிவதாக கண்டறிந்துள்ளனர்.

இதற்காக அவரது குழுவினர் கோப்பியருந்தும் 457,922 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 18 ஆய்வுகளையும் , கபின் அற்ற கோப்பியருந்தும் 225,516 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 6 ஆய்வுகளையும் மேலும் தேநீர் அருந்தும் 286,701 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 7 ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஒரு நாளில் மேலதிகமாக அருந்துகின்ற ஒவ்வொரு கோப்பை கோப்பியினால் நீரிழிவு நோயின் அதிகரித்த அபாயமானது 7% இனால் குறைவடைவதாக கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளில் 3-4 கோப்பை அருந்துபவர்கள், 0-2 கோப்பை அருந்துபவர்களை அருந்துபவர்களை விடவும் 25% இற்கும் குறைவான அபாயங்களினை எதிர்நோக்குகின்றனர்.


மேலும் இந்த ஆய்வின் பிரகாரம் கபின் அற்ற கோப்பியருந்துபவர்கள் ஒருநாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், கோப்பி அருந்தாதவர்களைக்காட்டிலும் அண்ணளவாக 1/3 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின்அபாயத்தை எதிர்கொள்கின்றனர். தேநீர் அருந்துபவர்கள் ஒரு நாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், தேநீர் அருந்தாதவர்களைக் காட்டிலும்அண்ணளவாக 1/5 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின் அபாயத்தைஎதிர்கொள்கின்றனர்.


நாமும் நாள்தோறும் கோப்பி அல்லது தேநீர் அருந்தி நீரிழிவு நோயின் அபாயத்தினைக் குறைத்துக் கொள்வோமாக...........

***

No comments:

Blog Widget by LinkWithin