Monday, December 28, 2009

2009ல் நினைவில் நின்றவை

ஏனைய வருடங்களைப் போலவே 2009ம் வருடமும் நிறையவே தடயங்களை விட்டுச்செல்ல தயாராகிவிட்டது. அந்தவகையில் 2009ம் வருடத்தின் சில நினைவுச்சுவடுகள்;

ஜனவரி

ஐக்கிய அமெரிக்க தேசத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கறுப்பினத்தவர் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். பராக் ஒபாமா அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாவார்.

பெப்ரவரி

  • 81வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக இரண்டு ஒஸ்கார் விருதுகளினைப் பெற்று தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார். மேலும் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் 8 ஒஸ்கார் விருகளை சுவீகரித்துக் கொண்து.
  • கொசாவோ தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தியது.

மார்ச்

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது பாகிஸ்தானில் வைத்து ஆயுததாரிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.(3/3) இதில் சில வீரர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 1972 மூனிச் ஒலிம்பிக்கின் பின்னர் ஆயுததாரிகளினால் விளையாட்டு வீரர்கள் மீது முதல் தடவையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்

இலங்கை உட்பட ஏராளமான நாடுகளில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி(ய)/வருகின்ற பன்றிக்காய்ச்சல் நோயானது(இன்புளுவென்சா A H1N1 வைரஸ் கிருமியால் ஏற்படுவது) முதன்முதலில் மெக்சிக்கோவில் கண்டறியப்பட்டது. பன்றிக்காய்ச்சல் நோயானது ஐ. நா சபையினால் தொற்று கொள்ளை நோயாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மே

நேபாள நாட்டுப் பிரதமர் பிரசண்டா, ஜனாதிபதியுடனான முரண்பாடுகள் காரணமாக பதவிவிலகினார். நேபாள நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்படுவதற்கு மாவோ கட்சியின் தலைவர் பிரசண்டா பெரியளவில் போராட்டங்களை மேற்கொண்டவராவார்.

ஜூன்

  • உலகப்புகழ் பெற்ற பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்சன் மரணமானது அவரின் ஏராளமான ரசிகர்களிடையே ஆழ்ந்த அதிர்வலைகளினை ஏற்படுத்தியது.
  • 228பேருடன் காணாமல் போன எயார் பிரான்ஸ் A-333 விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஜூலை

  • 21ம் நூற்றாண்டில் அதிக நேரம் நீடித்த முழுசூரிய கிரகணம் ஜூலை 22ம் திகதி நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • யேமானிய விமானம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்து 153 பேர் வரையில் பலியாகினர்.

ஆகஸ்ட்

இந்தியா சந்திரனுக்கு அனுப்பிய சந்திராயன்-1 செயற்கைக் கோளானது செயலிழந்ததாக இஸ்ரோ உத்தியோகபூர்வமாக அறிவித்தது. சந்திராயன் விண்கலமானது சந்திரனில் நீர் இருப்பதனை உறுதிப்படுத்தியது மிகப்பெரும் சாதனையாகப் கருதப்படுகின்றது.

செப்டம்பர்

  • கினியாவில் இராணுவ ஆட்சியாளருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது படைகள் சராமரியாக துப்பாக்கி பிரயோகம் செய்தன. பெண்கள் மீது கூட்டாக பாலியல் வல்லுறவினை மேற்கொண்டனவாம். 150க்கும் அதிகமானோர் பலி. பலர் காயம் அடைந்தனர்.
  • 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரமாக பிரேசிலின் றியோ டி ஜெனிரோ தெரிவுசெய்யப்பட்டது.

ஒக்டோபர்

இலங்கை வம்சாவளி வர்த்தகர் ராஜ் ராஜரத்தினம் பங்கு சந்தை மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது . ராஜ் ராஜரத்தினம் போர்ப்ஸ் சஞ்சிகையின் உலக பணக்கார பட்டியலில் உள்ளார் .


நவம்பர்

  • மைக்கல் ஜக்சனுக்கு 4 அமெரிக்க இசை விருதுகள் வழங்கப்பட்டது
  • வியட்நாமை சூறாவளி தாக்கியதில் பலர் பலி

டிசம்பர்

  • இந்த வருடத்துக்கான சமாதான நோபல் பரிசானது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு ஒஸ்லோவில் வழங்கப்பட்டது. இது பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியது எனலாம். (டிசம்பர்10)
  • இந்தியாவில் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கை வலுப்பெற்று வன்முறைகள் தலைதூக்க ஆரம்பித்தன.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பனிமழையின் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

என் வாழ்வில் 2009

  • மே 31ம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் B.Com பட்டத்தினைப் பெற்றுக்கொண்டேன்.
  • ஜூன் 5ம் திகதி பதிவுலகத்தில் முதன்முறையாக கால் பதித்தது.
  • ஜூன்21ம் திகதி அன்புள்ள மருமகள் (அக்காவின் மகள்) ஜயபிரதா தன்னுடைய முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடியது.


***

1 comment:

தர்ஷன் said...

நம்மையும் மீட்டுப் பார்க்கச் செய்திருக்கிறீர்கள்
நன்றி

Blog Widget by LinkWithin