Tuesday, December 29, 2009

2009 இல் விளையாட்டு உலகம்

  • ஜேர்மனியின் பெர்லினில் நடைபெற்ற 12வது உலக சாம்பியன்சிப்தடகளப்போட்டியில் 100மீற்றர், 200மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளில் உலகசாதனை படைத்தார். 100மீற்றர் ஓட்டப் போட்டியினை 9.58 செக்கன்களிலும், 200மீற்றர் ஓட்டப் போட்டியினை 19.19 செக்கன்களிலும் ஓடி முடித்து தன்னாலே படைக்கப்பட்ட சாதனைகளை ஜமைக்காவின் யுசைன் போல்ட் புதுப்பித்தார்.
  • அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிண்ணத்தை ஒருகுழந்தையின் தாயாகிய கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் (பெல்ஜியம்) கைப்பற்றியமைசிறப்பம்சமாகும்.
  • டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை(15) வென்றுசுவிற்சர்லாந்தின் ரொர் பெடரர் சாதனை படைத்தார். முன்னர் அமெரிக்காவின்பீட் சாம்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது. ரொஜர் பெடரர் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தினை வென்றது சிறப்பம்சமாகும்.
  • எல்லா கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 6வது வீரராக ரொஜர் பெடரர் சாதனை படைத்தார்.
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில்(30) வெற்றி பெற்று ஸ்பெயினின் ரபெல் நடால் புதிய சாதனை.
  • ரஸ்யாவின் மராட் சபீன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2000ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தினையும், 2005ம் ஆண்டு அவுஸ்ரேலிய ஓபன் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார் என்பதும் இவர் 2000ம்ஆண்டு சர்வதேச டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடம் வகித்தார்.
  • டென்னிஸ் போட்டிகள் மூலம் 50மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்தமுதல் டென்னிஸ் வீரராக ரொஜர் பெடரர் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் பீட் சாம்ராஸ் 43.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்தமை குறிப்பிடத்தக்கது.
  • விளையாட்டின் மூலம் அதிக தொகை (23.5மில்லியன் அமெரிக்க டொலர்கள்) சம்பாதித்த வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ், கோல்ப் வீராங்கனை அனிகா சொசென்ஸ்சினை முந்தி சாதனை படைத்தார்.
  • உலகின் முதல் பில்லியன் டொலர் வீரராக அமெரிக்காவின் கோல்ப் வீரர் டைகர்வுட்ஸ் சாதனை படைத்தார்.
  • இந்தியாவின் சானியா மிர்ஸா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினைவென்று சாதனை புரிந்தார். அவுஸ்ரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தினை சானியா-பூபதி ஜோடி பெற்றது.
  • அமெரிக்காவின் நட்சத்திர கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ், பல பெண்களுன் தவறான பாலியல் தொடர்புகளை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியதையடுத்து அவரின் குடும்ப வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டு கோல்ப் விளையாட்டிலிருந்து தற்காலிக ஓய்வினை அறிவித்தார். மேலும் இவருடான விளம்பர ஒப்பந்தங்களை பல நிறுவனங்கள் விலக்கிக்கொண்டன.
  • போர்த்துக்கல் கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1950 கோடிக்கு ரியல் மாட்ரிட் கழகத்துக்கு கைமாறினார். இவர் முன்னர் மஞ்செஸ்டர்கழகத்துக்காக விளையாடினார்.
  • தென்னாபிரிக்காவில் நடைபெற்ற கொன்பெடரேசன் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
  • 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் மேரியன் ஜோன்ஸ்சின் பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மூலம் 200மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையாக இலங்கையின் சுசந்திகா ஜயசிங்க அறிவிக்கப்பட்டார்.
  • இலங்கையின் சுசந்திகா ஜயசிங்க தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்தார்.
  • சர்வதேச கிரிக்கெட் நடுவர் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மே.தீவுகளின் பக்னர் அறிவித்தார்.
  • முன்னாள் பிரபல கிரிக்கெட் நடுவர் இங்கிலாந்தினைச் சேர்ந்த டேவிட் சேப்பார்ட் காலமானார். நெல்சன் இலக்கம் என்றவுடன் அனைவர் கண்முன்னாலும் நினைவுக்கு வருகின்றவர்.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது. மகளிர் பிரிவில் இங்கிலாந்து சாம்பியனானது.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
  • தென்னாபிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன் கிண்ணப் போட்டிகளில்அவுஸ்ரேலியா வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
  • அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற 9வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டிகளில் இங்கிலாந்து வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.
  • ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்டது.
***

No comments:

Blog Widget by LinkWithin