ஐ.நா சபையின் காலநிலை மாநாட்டில் கடந்த 14ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் காலநிலை மாற்றங்களின் காரணமாக அரச பென்குவினிலிருந்து அவுஸ்ரேலியாவின் கோலா கரடிகள் வரையான டசின் கணக்கான விலங்கினங்கள் அழிவினை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டங்களின் அதிகரிப்பு ,சமுத்திரங்கள் அமிலமயமாதல் மற்றும் துருவப் பிரதேசங்களில் பனி சுருங்குதல் ஆகியவை உயிரினங்களின் அழிவில் பெரும்பங்கு வகிக்கின்றன, மேலும் மாசடைதல்களின் அழுத்தங்கள் அவற்றுடன் வாழிடங்கள் சுருங்குதல் ஆகியவற்றின் பாதிப்புகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்து விட்டதாக இயற்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமாசம்-IUCN ன் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமை , பெலுகா திமிங்கிலங்கள், கிளவ்ன் மீன்(clownfish), அரச பென்குவின் மற்றும் சல்மொன் உட்பட 10 வகையான இனங்களை காலநிலை மாற்றங்கள் அவற்றினுடைய வாழ்க்கையினைப் எவ்வாறு பாதித்துள்ளன என அவ்வறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபனீரொட்சைட் வாயுவின் அதிகரிப்பின் காரணமாக அவுஸ்ரேலியா கோலாகளின் உணவாகிய யூக்கலிப்ட்ஸ் இலைகளின் போசணைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு கோலா கரடிகள் போசணைக் குறைபாடுகளையும், பசி பட்டினிகளையும் எதிர் நோக்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றங்களினால், குறிப்பாக துருவ இனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
அரச பென்குவின், வளமாக வாழ்வதற்குரிய வாழிடங்கள் அந்தாட்டிக்கா நிலைமைகள் போன்ற சில ஒத்ததான தீமையான பிரச்சினைகளினை எதிர் நோக்கியுள்ளன. பனி படர்ந்த நிலைவரங்கள் குறைவடைதலானது அரச பென்குவின்களினுடைய இனப்பெருக்க நிலைவரங்களினையும் மற்றும் இளங் குஞ்சுகளை வளர்ப்பதினிலும் பாதிப்படையச் செய்கின்றன. மேலும் அவற்றிக்கான பிரதான உணவு மூலங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதாம்.
***
No comments:
Post a Comment