மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய கெளதம் காம்பீர் 19 பந்துகளினை எதிர்கொண்டு அரைச்சதத்தினை பூர்த்திசெய்தமை சுவாரஸ்சியமான விடயமாகும். ஆனாலும் தோல்வியடைந்த T20போட்டி ஒன்றில் மிகவேகமாக அரைச்சதத்தினை பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனையினை கெளதம் காம்பீர் படைத்தார். மேலும் இதற்கு முன்னர் துடுப்பாட்ட வீரர்கள் 23 பந்துகளுக்கும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு சதம் பெற்ற போட்டிகள்11இல்9போட்டிகள் வெற்றியிலேயே முடிவடைந்துள்ளன. இதில் தோல்வியடைந்த போட்டி கடந்த செப்டம்பர் 2ம் திகதி நியூசிலாந்து அணிக்கெதிராக கொழும்பில் நடைபெற்ற T20 போட்டியில் இலங்கை அணியின் திலகரத்ன டில்சான் 23 பந்துகளுக்கு அரைச்சதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனாலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்ற சம்பவங்கள் 4 தடவைகள் பதிவாகியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகவேகமான அரைச்சதம் பெற்ற சனத் ஜயசூரிய, 7ஏப்ரல் 1996ல் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் 17 பந்துகளில் அரைச்சதம் பெற்றார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் லான்ஸ் கெயான்ஸ் (கிறிஸ் கெயான்ஸ்சின் தந்தையார்) 21 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்ற போட்டியில் அவுஸ்ரேலிய அணியும் , பங்களாதேஸின் முகமட் அஸ்ரப்புல் 21 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும்,பாகிஸ்தான் அணியின் அப்துல் ரசாக் 23 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவேகமாக நிமிடங்கள்(27) அடிப்படையில் பெறப்பட்ட பங்களாதேஸின் முகமட் அஸ்ரப்புல்லின் அரைச்சதமானது 2007ல் மிர்புரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸ்சில் இந்திய அணிக்கெதிராகப் பெறப்பட்டதாகும். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.***
5 comments:
அருமையான தகவல்கள் நன்றி கிரிக்கெட் தகவல்கள் எப்போதும் சுவாரசியமானவைத்தான்
நல்ல தகவல்கள் எனக்கு பிடித்ததே கிறிக்கட்டும் சினிமாவும் தான் ஆனால் இரண்டையும் பதிவு எழுதுறதில்லை. காரணம் இரண்டையும் பார்க்கிறதை இப்ப விட்டுட்டன்.
innaikkavathu jeikkarangalannu papom
அருமையான தகவல்கள்...
தேடலுக்குப் பாராட்டுக்கள்...
நண்பர்களே நன்றிகள் .........
Post a Comment