கடந்த சனிக்கிழமை(12/12/2009) மொகாலியில் நடைபெற்ற இலங்கை அணியுடனான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி 6விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை பெற்ற அணியாக இந்தியா சாதனை படைத்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய யுவராஜ் சிங் 20 பந்துகளினை எதிர்கொண்டு அரைச்சதத்தினை பூர்த்திசெய்தமை(60*) குறிப்பிடத்தக்கது. (கடந்த என்னுடைய பதிவாகிய "வீணாகிப் போன அதிரடிகள்" என்னும் பதிவில் யுவராஜ் சிங்கின் அரைச்சதம் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது). இந்த இரண்டாவது T20 போட்டியன்று தனது 28வது பிறந்த நாளை யுவராஜ் சிங் கொண்டாடியதுடன் அவர் அன்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் தனதாக்கிக் கொண்டார்.
கிரிக்கெட்டில் பொதுவாக தத்தமது பிறந்த நாளன்று போட்டியில் சதம் பெறுவதென்பது அடிக்கடி நிகழ்கின்றதொரு விடயமல்ல. ஏனெனில் தத்தமது பிறந்த நாளன்று தாம் விளையாடுகின்ற அணிக்கு போட்டி கிடைப்பதென்பது அவ்வவ் வீரர்களின் அதிர்ஸ்டம் எனலாம்.
அந்த வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரையில் தமது பிறந்த நாளன்று சதம் பெற்ற கிரிக்கெட் வீரர்களாக மூன்று வீரர்கள் காணப்படுகின்றனர்.
24ஏப்ரல்1998 அன்று தனது 25வது பிறந்த நாளன்று நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், சார்ஜாவில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 134 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் சச்சினின் பள்ளிப் பருவ நண்பனாகிய வினோத் காம்ளி 18ஜனவரி1993 அன்று தனது 21 பிறந்த நாளன்று, ஜெய்ப்பூரில் இங்கிலாந்து அணிக்கெதிராக ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் இலங்கை அணியின் அதிரடி ஆட்டநாயகன் சனத் ஜயசூரிய 30 ஜூன் 2008 அன்று தனது 39வது பிறந்த நாளன்று , கராச்சியில் பங்களாதேஸ் அணிக்கெதிராக ஆசிய கிண்ணப் போட்டியில் 130 ஓட்டங்களைப் பெற்றமை நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கின்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டினைப் பொறுத்தவரை தமது பிறந்த நாளன்று சதம் பெற்ற கிரிக்கெட் வீரர்களாக ஒன்பது வீரர்கள் காணப்படுகின்றனர். அது தொடர்பான விபரங்கள் கீழே...
· RG.பொல்லக்(23வது பிறந்த நாள்), 105,தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா, 27-2-1967,போர்ட் எலிசபெத்
· CC. லெவிஸ்(25), 117,இங்கிலாந்து Vs இந்தியா, 14-2-1993,சேப்பாக்கம்
· RR.சர்வான்(26), 116,மே.தீவுகள் Vs இந்தியா, 23-6-2006,வெஸ்ரியர்
· BL.இர்வின்(26), 102,தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா, 9-3-1970,போர்ட் எலிசபெத்
· PE. ரிச்சர்ட்சன்(26), 126,இங்கிலாந்து Vs மே.தீவுகள்,4-7-1957,டென்பிறிட்ஜ்
· இம்ரான் கான்(28), 123,பாகிஸ்தான் Vs மே.தீவுகள்,25-11-1980,லாகூர்
· AC.ஹுட்சன்(29), 102,தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா, 17-3-1994,கேப்டவுன்
· RT.சிம்சன்(31), 156*,இங்கிலாந்து Vs அவுஸ்ரேலியா, 27-2-1951,மெல்பேர்ன்
· AJ.ஸ்டுவர்ட்(31), 118,இங்கிலாந்து Vs மே.தீவுகள், 8-4-1994,பிறிட்ஜ்டவுன்
***
No comments:
Post a Comment