Thursday, January 7, 2010

தீராத நோயாளிகளுக்கு SMS சிகிச்சை



இந்த தொடர்பாடல் தொழில்நுட்பமானது தீராத நோய்களின் கொடுமைகளினால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவதனை குறிப்பிடலாம். நோயாளர்களின் கையடக்கத் தொலைபேசிக்கு அவர்களுக்கு அடுத்து நிர்ணயிக்கப்பட்ட மருத்துவருடனான சந்திப்பு அல்லது சோதனை அல்லது அவர்கள் எடுக்க வேண்டிய மருந்துகள் தொடர்பாக நினைவுபடுத்த ஒரு SMS தகவலினை அனுப்புவதானது சிறந்ததொரு நடவடிக்கை என்கின்றார் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் சிறுவர் மையத்தின் Delphine Robotham.


Robotham மேலும் தெரிவிக்கையில் ஆய்வுகளின் பிரகாரம் அரைப்பங்கான நோயாளர்கள் அவர்கள் நாளந்தம் எடுக்க வேண்டிய ஒழுங்குமுறையான மருந்துகளினை எடுக்கத் தவறுகின்றனர் என்கின்றார். மருந்தினை உள்ளெடுக்க சில பங்கினர் மறப்பதற்கான பிரதான காரணமாக கவனமின்மை ஆகும். ஆகவே அவர்களுக்கு நினைவுறுத்த ஒரு தகவலானது தேவைப்படுகின்றது.


இன்று பல்வேறு வகையான ஆய்வுகளில் SMS பயன்பாட்டினை பயன்படுத்துவதனை Robotham அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

உதாரணமாக , நீரிழிவு நோயின் பாதிப்பினைக் கொண்ட குழந்தைகளுக்கு அவர்களின் குருதியில் வெல்லத்தின் அளவினைக் சோதிக்கும் சோதனையானது மேம்பட்டுக் காணப்படுகின்றதாம். இந்தக் குழந்தைகள் அவர்களின் குருதியில் வெல்லத்தின் அளவினைக் சோதிக்கும் சோதனை முடிவுகள் தொடர்பில் அவர்களின் மருத்துவர்களின் நிலையத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர்.


பிறிதொரு ஆய்வில், ஈரல் மாற்றீடு செய்யப்பட்டவர்கள் அதன் பின்னரான மருத்துவ முறைகளில் கவனம் செலுத்துவதானது மேம்பட்டுள்ளது.


தீராத நோயின் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளவர்கள் நாளாந்தம் மருத்துவமானது தேவைப்படுகின்றது. அதாவது எச்.ஐ.வி, அஸ்த்மா, காச நோய், அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் தொடர்பிலான நாளாந்த சோதனைகள் செய்வர்களுக்கு SMS சிகிச்சையானது சிறந்ததாகும் என்கின்றார் Robotham.



இன்று கையடக்கத் தொலைபேசிகளின் பாவனையானது பெருமளவில் காணப்படுகின்றது. அவற்றினை இது போன்ற பயனுள்ள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதானது ஒரு சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும் எனலாம்...........

***

No comments:

Blog Widget by LinkWithin