
தினமும் ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்திவருவதன் மூலம் பல்மருத்துவர்களிடமிருந்து தூரவிலகி நிற்கலாம் என்கின்றது புதிய ஆராய்ச்சியொன்றின் பெறுபேறுகள்.
பச்சை தேயிலையானது[Green Tea], நுண்ணியிர்களின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் “கெரிரென்” என்கின்ற இரசாயனப் பொருளினை உள்ளடக்கியுள்ளதாம், இதன் மூலம் பற்சுகாதாரத்தினை மேம்படுத்த பச்சை தேயிலையானது உதவுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனி சுவை சேர்க்கப்பட்ட பச்சை தேயிலையினை மாத்திரம் அருந்துவது பக்றீரியா பாதிப்புக்களினை ஏற்படுத்தலாம், இதன் காரணமாக பற்கள் பாதிக்கப்படலாம் என்கின்றார் நியூயோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த அல்பிரிடோ மொராவியா.
அவர்களின் அறிக்கையின் பிரகாரம் இனிப்பு சுவை சேர்க்கப்பட்ட கோப்பியினை அருந்துவதும் தீமை பயக்கக்கூடியதாகும். கோப்பி தனியே பிரச்சினையினை கொண்டிருக்கவில்லையாயினும், இனிப்பு சுவை சேர்க்கப்பட்ட கோப்பியானது உங்கள் பற்களினை இழக்கச் செய்யலாம்.

இந்த ஆய்வில், 40-64 வயதிற்கிடைப்பட்ட 25000 ஜப்பானிய ஆண்,பெண் இருபாலாரிடையேயும் ரொஹொகு பல்கலைக்கழக மருத்துவ பட்டப்படிப்பு பள்ளியின் யசூசி கொயமா மற்றும் அவரது குழாமினர் ஆய்வுக்குட்படுத்தினர்.
இந்த ஆய்வின் பிரகாரம், ஒரு நாளில் குறைந்தது 1 கோப்பை பச்சை தேனீர் அருந்திவருகின்ற ஆண்களில் 19 சதவீதமானவர்களே 20பற்களிலும் குறைவாக கொண்டுள்ளனர், பெண்களில் இது 13 சதவீதமாகும். பச்சை தேனீர் அருந்தாதவர்களில் இது அதிக சதவீதமாகும்.
தினமும் ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்திவருவதன் மூலம் பல்மருத்துவர்களிலிருந்து தூரவிலகி நிற்கலாமே!!!
***
No comments:
Post a Comment