உலகக் கிண்ண உதைபந்தாட்டம் தொடர்பான சுவையான தகவல்கள் ...........
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில், ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் சாம்பியனாகவில்லையாம்.
இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் 6 நாடுகள் மாத்திரமே தாயகத்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில், இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற நாடுகளில் பிரேசில் நாடும் மாத்திரமே தாயகத்தில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான அரையிறுதிப் போட்டிகளில் [11 தடவைகள்] விளையாடிய நாடு ஜேர்மனி.~ 1934, 1954, 1958, 1966, 1970, 1974, 1982, 1986, 1990 வரை மே.ஜேர்மனி, 2002 & 2006 - ஒன்றிணைந்த ஜேர்மனியாகவும் பங்குபற்றியுள்ளன.
இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான இறுதிப் போட்டிகளில் [7 தடவைகள்~ 1950, 1958, 1962, 1970, 1994,1998 & 2002] விளையாடிய நாடு பிரேசில் & ஜேர்மனி (1954,1966,1974,1982,1986,1990~ மே.ஜேர்மனி,2002~ஒன்றிணைந்த ஜேர்மனி). இதில் பிரேசில் 5தடவைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.~ 1958, 1962, 1970, 1994 & 2002.
1958ம் ஆண்டு நடைபெற்ற கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் பெரிய பிரித்தானியாவின் அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய 4 நாடுகளும் பங்குபற்றின.
***
No comments:
Post a Comment