- டெல் கணினி நிறுவனத்தினுடைய ஸ்தாபகராகவும், இயக்குனராகவும் விளங்குகின்றவர் மைக்கல் டெல் ஆவார். ஆரம்ப காலத்தில் மைக்கல் டெல், மணித்தியாலத்துக்கு $2.30 சம்பளத்தில் சீன உணவகமொன்றில் பாத்திரம் சுத்தம் செய்பவராக வேலை பார்த்தாராம்.
- மாமன்னன் ஜூலியஸ் சீசர் பிரபல்யமான ஒரு நீச்சல்காரராக விளங்கியவராம்.
- மாவீரன் நெப்போலியன் தான் மேற்கொள்ளும் எல்லாப் போர் நடவடிக்கைகளின்போதும் சொக்லேட்டினை தன்வசம் எடுத்துக் கொண்டுசெல்வானாம்.
- புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தவர் விஞ்ஞானி சேர் ஐசாக் நியூட்டன் ஆவார். புவியீர்ப்பு விசை தொடர்பான கண்டுபிடிப்பினை மேற்கொண்ட போது நியூட்டனின் வயது 23 மாத்திரமே ஆகும்.
- பிரபல நாவலாசிரியர் சார்ளஸ் டிக்கன்ஸ், வடக்கு பக்கம் தலை வைத்தே உறங்குவாராம். ஏனெனில் அவ்வாறு உறங்குவதன் காரணமாக தன்னுடையஎழுத்தாற்றல் மேம்படுவதாக அவர் நம்பினார்.
- அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்த தியோடர் ரூஸ்வெல்ட், 1907ம் ஆண்டு புத்தாண்டு தினத்தின் போது 8513 மக்களுடன் கைகுலுக்கினாராம்.
- பிரிட்டன் பிரதமராக பதவிவகித்த சேர் வின்சன் சேர்ச்சில் நடனமாடும் பெண்களின் அறையிலேயே பிறந்தவராம்.
***
No comments:
Post a Comment