உலகத்தில் மிக உயரத்தில் அமைந்து காணப்படுகின்ற பாலமானது இந்தியாவின் இமய மலைப் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாலமானது இமய மலைப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற ட்ரஸ் மற்றும் சுரு ஆறுகளிடைய அமைந்துள்ள லடக் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கானது இந்தியப்பகுதி காஷ்மீரின் கடல் மட்டத்திலிருந்து 5602மீற்றர் [18379அடி] உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. “வைய்லி பாலம்” என அழைக்கப்படுகின்ற இப்பாலமானது 30மீற்றர் [98அடி] நீளமானதே என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பாலமானது 1982 ஆகஸ்ட்டில் இந்திய இராணுவத்தினால் கட்டப்பட்டதாகும்.

நீர்நிலை மேலே மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமானது அமெரிக்கா, கொலராடோவில் அர்கன்சாஸ் ஆற்றின் மேலாக அமைந்துள்ள “ரோயல் கோர்ஜ்” பாலமாகும். இப்பாலமானது 1929ம் ஆண்டு $ 350000 செலவில் கட்டப்பட்டதுடன் , நீர்நிலையிலிருந்து 321மீற்றர் [1053 அடி] உயரத்தில் காணப்படுகின்றது.

வாராவதித் தூண்களைக் கொண்டு மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமானது பிரான்சில் மசிவ் மத்திய மலைகளின் ரான் ஆற்றின் மேலாகக் கட்டப்பட்டுள்ள “மிலாவ் வைய்டக்” பாலமாகும். இப்பாலமானது 300மீற்றர் [984அடி] இலும் அதிக உயரமானதுடன், 2.5கி.மீ [1.5மைல்கள்] நீளமானதாகும்.

***
2 comments:
Arivukku virunthu. nanri
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள் ....
Post a Comment