ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரமானது அபுதாபியிலுள்ள உயர்மட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான அபுதாபி எமிரேட்ஸ் பலேஸ் ஹோட்டல் இந்தச் சேவையினை மே12, 2010 தொடக்கம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ATM இயந்திரம் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒருமுறை தங்கச் சந்தை விலைகளினை கணனி முறை மூலம் இற்றைப்படுத்துகின்றதாம்.

இந்த ATM இயந்திரம் மூலம் 24கரட் கொண்ட 1கிராம், 5கிராம், 10கிராம் நிறையுடைய தங்கங்களை கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தங்கம் பெறும் இந்த ATM இயந்திரமானது ஜேர்மன் தொழில்முயற்சியாளர் தோமஸ் கீஸ்ஸ்லெர் [TG Gold-Super-Markt நிறுவன இயக்குனர்] என்பவரின் கண்டுபிடிப்பாகும்.

ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரமானது 2009ம் ஆண்டு முதன்முதலில் ஜேர்மனியில் பரீட்சிக்கப்பட்டாலும், தோமஸ் அவர்கள் ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரத்தினை உத்தியோகபூர்வமாக ஸ்தாபிப்பதற்கு அபுதாபியினை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் யாதெனில் தங்கத்துக்கு அங்கே அதிகரித்த கேள்வி நிலவிகின்றமையாலாகும்.

அடடா.....அபுதாபி சென்றால் ATM மூலம் தங்கம் பெறலாமே.... நீங்கள் தயாரா?..........
***
ATM தொடர்பான இன்னுமொரு செய்தி..........

உலகுக்கு ATM[The second first ATM] இயந்திரத்தினை அறிமுகப்படுத்தி வங்கிகளில் பணம் பெறுவதனை இலகுபடுத்திய ஜோன் ஷெப்பேர்ட் பர்ரோன் அவர்கள் தனது 84வது வயதில் ஸ்கொட்லாந்தில் அண்மையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வங்கி வாடிக்கையாளர்களே ATM இயந்திரத்தில் உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஜோன் ஷெப்பேர்ட் பர்ரோன் அவர்களை நினைவில்கொள்ளுங்கள்.
***
3 comments:
அருமையான தகவலா இருக்கே சார். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
உங்கள் கருத்துரைக்கு நன்றிகள் நண்பா!
Supper diar
Post a Comment