எதிர்வருகின்ற ஜூன் மாதம் தென்னாபிரிக்க மண்ணில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துடன் தொடர்புடைய அரிய சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக இதோ..........
1950ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற 4வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு இந்திய அணி தெரிவு செய்யப்பட்டது. ஆனாலும் இந்திய அணி போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஏனெனில் பீபா[FIFA] இந்திய அணிக்கு பாதணிகளின்றி போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு நாடுகளினை தெரிவுசெய்யும்போது அவற்றுக்கு தகுதிகாண் போட்டிகள் முக்கியமாகும். தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு நுழைவுக் கட்டணம் செலுத்தமுடியாமல் ஒரு நாடானது போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகிக் கொண்டது. அந்த நாடு..... வேறென்ன இலங்கை அணிதான். - 11வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி [1978ம் ஆண்டு]
தென் அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இதுவரை தலா 9 தடவைகள் உலகக் கிண்ண உதைபந்தாட்ட சாம்பியன் பட்டங்களை சுவீகரித்துள்ளன. ஏனைய கண்டத்து நாடுகளால் இதுவரை உலகக் கிண்ண உதைபந்தாட்ட சாம்பியன் பட்டங்களை சுவீகரிக்க முடியவில்லை.
பயிற்சியாளர் பொரா மிலுடினொவிக் 1986ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளின்போதும் வெவ்வேறு நாடுகளுக்கு பயிற்றுனராக விளங்கினார்.முறையே..... மெக்சிக்கோ, கொஸ்ரா ரிகா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு...
உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளிலும், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே வீரர் யார் தெரியாமா? டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற விவ்வியன் ரிச்சர்ட்ஸ் அவர்களேதான்... [அன்ரிகுவா - உதைபந்தாட்டம் & மே.தீவுகள் - கிரிக்கெட்]
இதுவரை நடைபெற்ற சகல உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே நாடு பிரேசில் [1930-2010]
***
T20 உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்
மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 2010ம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை இங்கிலாந்து அணி கைப்பற்றி நேற்று புதிய சாதனையினைப் படைத்தது.
அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 147 ஓட்ட இலக்கினை 18 பந்துகள் மீதமிருக்க இங்கிலாந்து அணி 7விக்கட்களால் வெற்றி பெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிரேக் கீத்வெஸ்ரர் தெரிவு செய்யப்பட்டதுடன், போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக கெவின் பீற்றர்சன் தெரிவு செய்யப்பட்டார்.
கிரிக்கெட் விளையாட்டினை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாடானது கிரிக்கெட்டில் கைப்பற்றிய முதல் உலகக் கிண்ணம் இது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
இதேவேளை மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியினை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.
***
2 comments:
நல்ல தகவல்கள் .. இப்ப தான் தெரிஞ்சுது
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள் ....
Post a Comment