Showing posts with label அரிய தகவல்கள். Show all posts
Showing posts with label அரிய தகவல்கள். Show all posts

Sunday, June 27, 2010

பறவைகள்... விந்தைகள்!

பறவைகளினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்களினைக் கொண்ட பதிவு.........

 பறவைகளில் மிகப்பெரிய முட்டையிடும் பறவை தீக்கோழி ஆகும்.









 பறவைகளில் தன் உடலமைப்புடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய முட்டையிடும் பறவை கிவி பறவை. கிவி பறவையின் முட்டையானது அதனது உடம்புடன் ஒப்பிடும்போது 1/3 பங்காகும்.

 பறவைகளின் முட்டைகளில், தீக்கோழியின் முட்டையானது மிகக் கெட்டியான ஓட்டினைக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இதனை அவிப்பதற்கு 2 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றதாம்.

 பறவைகளில் மிகச்சிறிய முட்டையிடும் பறவை ஹம்மிங்பேர்ட் பறவை. இதன் முட்டையின் நீளம் 0.39 அங்குலம் & நிறை 0.0132 oz

 Royal Albatross' பறவைகள் அடைகாத்து அதன் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியாவதற்கு 79 நாட்கள் தேவைப்படுகின்றது.


 Albatross பறவைகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவைதான் முட்டையிடுகின்றதாம்.




 பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்துபோன மடகாஸ்கரின் யானைப் பறவையானது 27பவுண்டுகளுக்கும் அதிகமான நிறையில் முட்டையிட்டதாம்.

 முட்டையிடும் ஒரு சராசரி பெட்டைக்கோழியானது வருடாந்தம் 257 முட்டைகளினை இடுகின்றதாம்.

 சாதாரணமாக ஒரு முட்டையின் நிறையில் 12சதவீத வகிபாகத்தினை முட்டையின் மேல் ஓடானது பெறுகின்றது.


***

Sunday, June 13, 2010

“O” என்ற பெயரில் ஒரு இடமா?

· ரோமப் பேரரசர் கலிகுலா தனது குதிரையினை செனட்டராக நியமித்தானாம்.

· சீனா நாட்டில் உள்ள தேநீர்களில் ஒரு வகை வெண் தேநீர் ஆகும். வெண் தேநீர் என்பது யாதெனில் சாதாரணமாக சூடாக்கப்பட்ட நீரினையே குறிக்கும்.

· பற்தூரிகையானது முதன்முதலில் 1498ம் ஆண்டு சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.


· உலகில் அதிக எண்ணிக்கையான மக்கள் பேசுகின்ற மொழி யாதெனில் சீனாவின் மண்டேரியன் மொழி ஆகும். எனினும் ஆங்கில மொழி அதிகமானவர்கள் பேசுகின்ற நாடு யாதெனில் அது அமெரிக்காதான். சீனா இந்த வரிசையில் பின்நிலையிலேயே உள்ளது.

· நீங்கள் அதிகமாக கரட்டினை சாப்பிடும் போது தற்காலிகமாக செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைவீர்கள்.

· நீல நிறமும், வெள்ளை நிறமும் தான் உலகில் பொதுவான பாடசாலை நிறங்களாகும்.

· உலகில் 2பில்லியன் மக்களுக்கு ஒருவரே 116 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுவரை உயிருடன் வாழ்கின்றனராம்.

· ஜப்பான் நாட்டிலுள்ள ஒரு இடமானது “ O” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.

· பிரான்ஸ் நாட்டிலுள்ள ஈபிள் கோபுரமானது 2,500,000 ஆணிகளைக் கொண்டுள்ளது.

***

Sunday, May 23, 2010

Y என்ற பெயரில் ஒரு இடமா ?

 பசுபிக் சமுத்திரத்தினை விட அத்திலாண்டிக் சமுத்திரம் உவர்ப்பானதாகும்.

 சிறுத்தைகள் தமது வேகத்தினை 2 செக்கன்களில் 0 இல் இருந்து 70 கிலோமீற்றர் வேகத்திற்கு விரைவுபடுத்தும் இயலுமை கொண்டதாகும்.

 1666ம் ஆண்டு லண்டன் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாக லண்டன் நகரின் அரைவாசிக்கும் அதிகமான பகுதி எரிந்து நாசமாகியதாம். ஆனால் இத்தீவிபத்தின் காரணமாக 6 பொதுமக்களே பாதிப்புக்குள்ளாகினர்.

 90%க்கும் அதிகமான நிக்கரகுவா மக்கள் ரோமன் கத்தோலிக்கத்தினையே பின்பற்றுகின்றனர்.

 வெனிசுலாவில் அமைந்துள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியானது , நயாகாரா நீர்வீழ்ச்சியினை விட அண்ணளவாக16மடங்கு உயரமானதாகும்.


நயாகாரா நீர்வீழ்ச்சி


ஏஞ்சல் நீர்வீழ்ச்சி


 கரீபியன் பிராந்தியத்தில் புகையிரதப் பாதைகளை கொண்டுள்ள ஒரே தீவு கியூபா தேசம்தான்.

 பிரிட்டன் மகாராணியாரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பக்கிங்ஹாம் மாளிகையாகும். பக்கிங்ஹாம் மாளிகையானது 602 அறைகளைக் கொண்டுள்ளது.




 பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு இடமானது “ Y” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.

 ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் அலஸ்கா மாநிலமாகும். அலஸ்கா மாநிலமானது, ரஷ்யாவிடமிருந்து ஏக்கருக்கு 2சதங்கள் வீதம் செலுத்தி அமெரிக்காவினால் கொள்வனவு செய்யப்பட்டதாம்.


***

Monday, May 17, 2010

உலகக் கிண்ணத்துக்கு தெரிவுசெய்யப்பட்டும் பாதணிகளின்மையால் வெளியேறிய நாடு...

எதிர்வருகின்ற ஜூன் மாதம் தென்னாபிரிக்க மண்ணில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துடன் தொடர்புடைய அரிய சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக இதோ..........

 1950ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற 4வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு இந்திய அணி தெரிவு செய்யப்பட்டது. ஆனாலும் இந்திய அணி போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஏனெனில் பீபா[FIFA] இந்திய அணிக்கு பாதணிகளின்றி போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை.




 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு நாடுகளினை தெரிவுசெய்யும்போது அவற்றுக்கு தகுதிகாண் போட்டிகள் முக்கியமாகும். தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு நுழைவுக் கட்டணம் செலுத்தமுடியாமல் ஒரு நாடானது போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகிக் கொண்டது. அந்த நாடு..... வேறென்ன இலங்கை அணிதான். - 11வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி [1978ம் ஆண்டு]

 தென் அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இதுவரை தலா 9 தடவைகள் உலகக் கிண்ண உதைபந்தாட்ட சாம்பியன் பட்டங்களை சுவீகரித்துள்ளன. ஏனைய கண்டத்து நாடுகளால் இதுவரை உலகக் கிண்ண உதைபந்தாட்ட சாம்பியன் பட்டங்களை சுவீகரிக்க முடியவில்லை.

 பயிற்சியாளர் பொரா மிலுடினொவிக் 1986ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளின்போதும் வெவ்வேறு நாடுகளுக்கு பயிற்றுனராக விளங்கினார்.முறையே..... மெக்சிக்கோ, கொஸ்ரா ரிகா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு...

 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளிலும், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே வீரர் யார் தெரியாமா? டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற விவ்வியன் ரிச்சர்ட்ஸ் அவர்களேதான்... [அன்ரிகுவா - உதைபந்தாட்டம் & மே.தீவுகள் - கிரிக்கெட்]




 இதுவரை நடைபெற்ற சகல உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே நாடு பிரேசில் [1930-2010]

***


T20 உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்




மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 2010ம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை இங்கிலாந்து அணி கைப்பற்றி நேற்று புதிய சாதனையினைப் படைத்தது.

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 147 ஓட்ட இலக்கினை 18 பந்துகள் மீதமிருக்க இங்கிலாந்து அணி 7விக்கட்களால் வெற்றி பெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிரேக் கீத்வெஸ்ரர் தெரிவு செய்யப்பட்டதுடன், போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக கெவின் பீற்றர்சன் தெரிவு செய்யப்பட்டார்.




கிரிக்கெட் விளையாட்டினை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாடானது கிரிக்கெட்டில் கைப்பற்றிய முதல் உலகக் கிண்ணம் இது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

இதேவேளை மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியினை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.

***

Tuesday, March 16, 2010

ஒரேஞ் நிறமற்ற கரட்கள்.........



கரட் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது செம்மஞ்சள் நிறம்தான்.... அந்த வகையில் கரட் தொடர்பிலான அரிய தகவல்கள்.........


உலக கரட் நூதனசாலை [ ஆம், உண்மையில் இது காணப்படுகின்றதாம்] தகவல்களின் பிரகாரம், உருளைக் கிழங்குப் அடுத்தபடியாக இரண்டாவது பிரபலமான காய்கறியாக கரட் விளங்குகின்றதாம். அத்துடன் கரட் பிரிட்டனில் மிகவும் அதிக பிரபல்யம் பெற்று விளங்குகின்றதாம்.


நிஜ கரட்கள் பல்வேறுபட்ட நிறங்களில் காணப்பட்டதாம். ஊதா, வெள்ளை, கறுப்பு, மஞ்சள், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கரட் காணப்பட்டதாம். 1500ம் ஆண்டுப் பிற்பகுதிவரை செம்மஞ்சள் [ஒரேஞ்] நிறத்திலான கரட் காணப்படவில்லையாம். அதிகாரத்திலிருந்த டச்சு ரோயல் அரசாங்கம் செம்மஞ்சள் நிறத்தில் கரட்டினை பயிரிட எண்ணி வடக்கு ஆபிரிக்காவிலிருந்து மஞ்சள் நிற கரட் விதைகளைப் பெற்று மாற்றம் செய்து பயிரிட்டதாம்.




செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்ற கரட்டில் கரோட்டின் காணப்படுகின்றது, இது மனித உடம்புக்கு விற்றமின் A இனை வழங்கின்றது.

கரட்டின் நிறத்தினை ஏனைய காரணிகளான வெப்ப நிலை, மண் தன்மை, வெளிச்சம் ஆகியனவும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதாம். அதிகப்படியான நீர், குறைவான பகல் வெளிச்சம், 15° - 20°C (70° - 80°F) க்கு அதிகப்படியான வெப்ப நிலை ஆகியன கரட் நிறத்தின் உறுதி தன்மையில் பலவீனத்தினை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


**********



இந்தப் பதிவினை இட வேண்டும் என எண்ணிய போது நம்ம வானொலி வெற்றி பண்பலையில் நிறங்களுடன் தொடர்புபடுத்தி இன்று 16/03/2010 விடியலில் பரிசு கிடைத்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி.... [என்ன ஒற்றுமை???......]


***

Monday, January 25, 2010

சதாம் ஹுசைன், ஹிட்லர் இடையேயான ஒரு ஒற்றுமை

• இங்கிலாந்தினை ஆட்சி செய்த 1ம் ஜோர்ஜ் மன்னர், இவர் ஆங்கிலம் பேசமாட்டாராம். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜேர்மனி நாட்டில் தானாம். 1714ம் ஆண்டு முதல் 1727ம் ஆண்டு வரை இங்கிலாந்தினை ஆட்சி செய்த இவர் ஆங்கிலத்தினை பேசுவதற்கு கற்கவில்லையாம். அப்படியாயின் இவர் எவ்வாறு நாட்டினை ஆட்சி செய்தார்? ஆம். இவர் முதலாவது அரசாங்க அமைச்சரவையினை நிறுவி தனது அமைச்சர்களினூடாகவே இங்கிலாந்தினை ஆட்சி செய்தாராம்.

• ஈராக் நாட்டினை ஆட்சி செய்த சதாம் ஹுசைன், பொதுமக்களினை கொன்ற குற்றச்சாட்டில் அமெரிக்க அரசாங்கத்தின் தயவில் இயங்கிய ஈராக் அரசாங்கத்தினால் தூக்கு தண்டனைக்குள்ளாகி மரணமானர். சதாம் என்ற பெயரின் அரபு விளக்கம் “எப்போதும் யுத்தத்துக்கு தயாரானவராம்”.

• ஜேர்மனி நாட்டினை ஆட்சி செய்த சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் எழுதிய நூலின் பெயர் “எனது போராட்டம்”. அதேவேளை சதாம் ஹுசைன் எழுதிய நூலின் பெயர் “எங்களுடைய போராட்டம்”.



• எட்வேட் கென்னடி, ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற போது ஸ்பானிஷ் பரீட்சையில் மோசடி செய்தமைக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டாராம்.

• தொலைபேசியினை உலகுக்கு அறிமுகம் செய்தவர் அலெக்சாண்டர் கிரஹம்பெல் என்பதனை நாமறிவோம். இவரின் இறுதிச் சடங்கின் போது அமெரிக்காவிலும், கனடாவிலும் 1 நிமிடத்துக்கு தொலைபேசிகளின் பாவனை அனைத்தும் நிறுத்தப்பட்டது.



• அமெரிக்க ஜனாதிபதியாக தற்சமயம் பதவிவகிக்கும் பராக் ஒபாமா, 2006ம் ஆண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்ட சிறந்த பேச்சுக்காக கிராமி விருதினைப் பெற்றுக்கொண்டார். “என் தந்தையின் கனவுகளிலிருந்து” என்ற தனது புத்தகத்தின் ஒலிப்பதிவு வடிவமே இதுவாகும்.

***

Monday, October 12, 2009

உலகப்பெற்றவர்கள் தொடர்பான சில அரிய தகவல்கள் # 02

1) பிரபல நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளின் ஒரு தடவை ஒரு போட்டியில் 3ம் இடத்தையே பெற்றுக் கொண்டாராம். என்ன போட்டி தெரியுமா? சார்ளி சாப்ளினை ஒத்த ஒருவரை தெரிவு செய்யும் போட்டியிலாம். ( நம்மமுடிகின்றதா??? )





2) அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதில்லையாம். காரணம் என்னவெனில் அவர்கள் இருவரும் காது கேளாதவர்களாம்.

3) அமெரிக்காவின் 17வது ஜனாதிபதியாக இருந்த அன்றூ ஜோன்சன் தனது 17வயது வரையும் வாசிக்கவே தெரியாமல் இருந்தாராம்.

4) உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோவினுடைய முழுப்பெயர் என்ன தெரியுமா? “Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Martyr Patricio Clito Ruíz y Picasso” (என்ன வாசித்து ஞாபகம் வைக்கலாமா???)

5) அலெக்ஸ்சாண்டர் கிரஹம் பெல் thanதன்வசம் மேலும் ஒரு சாதனையைக் கொண்டுள்ளாராம். தனது 72வது வயதில் ஒரு மணித்தியாலத்தில் 70வது மைல்களுக்கும் அதிகமாக பயணம் செய்து உலக நீர் வேக சாதனையைப் படைத்துள்ளார்.

6) சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் Time's சஞ்சிகையின் 1938ம் ஆண்டின் மனிதராக தெரிவு செய்யப்பட்டவராம்.

7) ஆங்கிலத்தில் “Assassination” (படுகொலை) என்ற சொல்லை கண்டுபிடித்தவர் நாடகாசிரியர் சேக்ஸ்பியர் தானாம்.


***
Blog Widget by LinkWithin