Showing posts with label நிறங்கள். Show all posts
Showing posts with label நிறங்கள். Show all posts

Sunday, October 24, 2010

சிவப்பு நிறம் தொடர்பான சுவையான தகவல்கள்......

 ரஷ்சிய மொழியில் சிவப்பு(Red) என்பதற்கான அர்த்தம் யாதெனில் "அழகானது" என்பதாகும்.

 மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.

சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.

சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

 ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.

 சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.

 சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.

சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.

 புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நிறக்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.

 தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.

 உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.

 ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.




இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் ...

 19ம் நூற்றாண்டில் இத்தாலி தேசத்தினை ஒற்றுமைப்படுத்திய தலைவர் கருபொல்டியின் தலைமையிலான இராணுவவீரர்கள் சிவப்பு ஆடையினையே அணிந்தனராம்.

 பின்னிரவு நேர விமானப் பறப்பினை "Red Eye" என்கின்றனர்.

 ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது சிவப்பு நிறமானது எருதுகளினை கோபப்படுத்துகின்றது என்பது தவறாகும். ஏனெனில் எருதுகள் நிறக்குருடுகளாகும். மாறாக ஜல்லிக்கட்டின்போது அசைக்கப்படும் துணிகளின் அசைவுகளுக்கேற்பவே எருதுகள் கோபத்துடன் செயற்படுகின்றன.

 நம் இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணமானது ஹீமோகுளோபின் என்கின்ற இரசாயனமாகும்.

நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு பிடித்த நிறம் சிவப்பு நிறம்........

அப்படியே இந்தப் பாடலினையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்.....



***

Tuesday, March 16, 2010

ஒரேஞ் நிறமற்ற கரட்கள்.........



கரட் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது செம்மஞ்சள் நிறம்தான்.... அந்த வகையில் கரட் தொடர்பிலான அரிய தகவல்கள்.........


உலக கரட் நூதனசாலை [ ஆம், உண்மையில் இது காணப்படுகின்றதாம்] தகவல்களின் பிரகாரம், உருளைக் கிழங்குப் அடுத்தபடியாக இரண்டாவது பிரபலமான காய்கறியாக கரட் விளங்குகின்றதாம். அத்துடன் கரட் பிரிட்டனில் மிகவும் அதிக பிரபல்யம் பெற்று விளங்குகின்றதாம்.


நிஜ கரட்கள் பல்வேறுபட்ட நிறங்களில் காணப்பட்டதாம். ஊதா, வெள்ளை, கறுப்பு, மஞ்சள், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கரட் காணப்பட்டதாம். 1500ம் ஆண்டுப் பிற்பகுதிவரை செம்மஞ்சள் [ஒரேஞ்] நிறத்திலான கரட் காணப்படவில்லையாம். அதிகாரத்திலிருந்த டச்சு ரோயல் அரசாங்கம் செம்மஞ்சள் நிறத்தில் கரட்டினை பயிரிட எண்ணி வடக்கு ஆபிரிக்காவிலிருந்து மஞ்சள் நிற கரட் விதைகளைப் பெற்று மாற்றம் செய்து பயிரிட்டதாம்.




செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்ற கரட்டில் கரோட்டின் காணப்படுகின்றது, இது மனித உடம்புக்கு விற்றமின் A இனை வழங்கின்றது.

கரட்டின் நிறத்தினை ஏனைய காரணிகளான வெப்ப நிலை, மண் தன்மை, வெளிச்சம் ஆகியனவும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதாம். அதிகப்படியான நீர், குறைவான பகல் வெளிச்சம், 15° - 20°C (70° - 80°F) க்கு அதிகப்படியான வெப்ப நிலை ஆகியன கரட் நிறத்தின் உறுதி தன்மையில் பலவீனத்தினை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


**********



இந்தப் பதிவினை இட வேண்டும் என எண்ணிய போது நம்ம வானொலி வெற்றி பண்பலையில் நிறங்களுடன் தொடர்புபடுத்தி இன்று 16/03/2010 விடியலில் பரிசு கிடைத்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி.... [என்ன ஒற்றுமை???......]


***

Monday, March 1, 2010

உங்கள் உணர்வுகளினை நிறங்களால் நிரப்புங்கள்..



நீல வெளிச்சமானது நீண்ட காலமாக எதிர்மறையான விடயத்துடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், நீல நிறமானது தன்னம்பிக்கையினையும், சந்தோச மட்டத்தினையும் உயர்த்திவிடுவதற்கு துணைபுரிகின்றது எனத் கண்டறிந்துள்ளனர். சசெக்ஸ் பல்கலைக்கழத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிறங்களினையும், ஒளியினையும் வெளிக்காட்டி ஆய்வுகளினை சிலரிடம் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் பிரகாரம், நீல நிறமும், பச்சை நிறமும் ஆண்களிடம் சந்தோச உணர்வினை ஏற்படுத்துகின்றதாம், அதேவேளை நீலம், ஊதா, மற்றும் செம்மஞ்சள்[ஒரேஞ்ச்] ஆகிய நிறங்கள் பெண்களிடம் சந்தோச உணர்வினை ஏற்படுத்துகின்றதாம். மேலும் நீல நிறமும், சிவப்பு நிறமும் ஆண்களிடையே தன்னம்பிகை மட்டத்தினை மேம்படுத்துகின்றதாம், அதேவேளை நீல நிறமும், ஊதா நிறமும் பெண்களிடையே சிறந்த மதிப்பினை ஏற்படுத்துகின்றதாம்.

இந்த ஆய்வின் பிரகாரம், பிரகாசமான நிறங்கள் பொதுவாக நன்மையான விடயங்களினை வெளிக்காட்டுகின்றதாம்.


###########################################################


நிறங்கள் என்றவுடன் ஓவியங்கள் நம்முடைய நினைவுக்கு வரும். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோவின் கைவண்ணத்தில் உருவாகிய ஓவியங்களில் ஒன்று உங்களுக்காக பார்த்து ரசியுங்கள்...........

***

Blog Widget by LinkWithin