கரட் என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது செம்மஞ்சள் நிறம்தான்.... அந்த வகையில் கரட் தொடர்பிலான அரிய தகவல்கள்.........
உலக கரட் நூதனசாலை [ ஆம், உண்மையில் இது காணப்படுகின்றதாம்] தகவல்களின் பிரகாரம், உருளைக் கிழங்குப் அடுத்தபடியாக இரண்டாவது பிரபலமான காய்கறியாக கரட் விளங்குகின்றதாம். அத்துடன் கரட் பிரிட்டனில் மிகவும் அதிக பிரபல்யம் பெற்று விளங்குகின்றதாம்.
நிஜ கரட்கள் பல்வேறுபட்ட நிறங்களில் காணப்பட்டதாம். ஊதா, வெள்ளை, கறுப்பு, மஞ்சள், மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கரட் காணப்பட்டதாம். 1500ம் ஆண்டுப் பிற்பகுதிவரை செம்மஞ்சள் [ஒரேஞ்] நிறத்திலான கரட் காணப்படவில்லையாம். அதிகாரத்திலிருந்த டச்சு ரோயல் அரசாங்கம் செம்மஞ்சள் நிறத்தில் கரட்டினை பயிரிட எண்ணி வடக்கு ஆபிரிக்காவிலிருந்து மஞ்சள் நிற கரட் விதைகளைப் பெற்று மாற்றம் செய்து பயிரிட்டதாம்.
செம்மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்ற கரட்டில் “கரோட்டின்” காணப்படுகின்றது, இது மனித உடம்புக்கு விற்றமின் A இனை வழங்கின்றது.
கரட்டின் நிறத்தினை ஏனைய காரணிகளான வெப்ப நிலை, மண் தன்மை, வெளிச்சம் ஆகியனவும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதாம். அதிகப்படியான நீர், குறைவான பகல் வெளிச்சம், 15° - 20°C (70° - 80°F) க்கு அதிகப்படியான வெப்ப நிலை ஆகியன கரட் நிறத்தின் உறுதி தன்மையில் பலவீனத்தினை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
**********
இந்தப் பதிவினை இட வேண்டும் என எண்ணிய போது நம்ம வானொலி வெற்றி பண்பலையில் நிறங்களுடன் தொடர்புபடுத்தி இன்று 16/03/2010 விடியலில் பரிசு கிடைத்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி.... [என்ன ஒற்றுமை???......]
***
3 comments:
அரிய தகவலுக்கு நன்றி
நல்ல தகவல் நண்பரே!
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள்
Post a Comment