கடந்த 24ம் திகதி குவாலியரில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான 2வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 200 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்து சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் தனிநபர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 147பந்துகளை எதிர்கொண்டு 25 நான்கு ஓட்டங்கள் , 3 சிக்ஸர்கள் அடங்கலாக 200 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். அந்தவகையில் ஒருநாள் போட்டியொன்றில் அதிக நான்கு ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தினை சச்சின் டெண்டுல்கர் பெற்றுக்கொண்டார். இந்த சாதனை முன்னர் சனத் ஜயசூரிய வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சனத், 2006 ஜூலை 4ம் திகதி அம்ஸ்ரல்வீனில் நெதர்லாந்து அணிக்கெதிராக 24 நான்கு ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒருநாள் போட்டியொன்றில் 20க்கும் அதிகமான நான்கு ஓட்டங்களைப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்கள்....
- சச்சின் டெண்டுல்கர் 200*(147), 25- 4’s , இந்தியா v தென்னாபிரிக்கா, குவாலியூர்,2010
- சனத் ஜயசூரிய 157(104), 24- 4’s, இலங்கை v நெதர்லாந்து , அம்ஸ்ரல்வீன், 2006/07
- சயீட் அன்வர் 194(146), 22- 4’s, பாகிஸ்தான் v இந்தியா,சென்னை, 1997/98
- ஹேர்சல் கிப்ஸ் 175(111), 21- 4’s, தென்னாபிரிக்கா v அவுஸ்ரேலியா,ஜோகனர்ஸ்பேர்க், 2006/07
- விவ்வியன் ரிச்சர்ட்ஸ் 189*,21- 4’s, மே.தீவுகள் v இங்கிலாந்து,மன்செஸ்டர்,1984/85
- பிரைன் லாரா 153(143), 21- 4’s, மே.தீவுகள் v பாகிஸ்தான், சார்ஜா,1993/94
- சனத் ஜயசூரிய 152(99), 20- 4’s, இலங்கை v இங்கிலாந்து ,லீட்ஸ்,2006/07
- சிவ். சந்திரபோல் 150(136), 20- 4’s, மே.தீவுகள் v தென்னாபிரிக்கா,கிழக்குலண்டன், 1999
- சச்சின் டெண்டுல்கர் 186*(150), 20- 4’s , இந்தியா v நியூசிலாந்து, ஹைதராபாத்,1999/00
- திலகரத்ன டில்சான் 160(124),20- 4’s ,இலங்கை v இந்தியா,ராஜ்கோட்.2009/10
2 comments:
unga blog romba nalla iruku
High Definition Youtube Video Download Free
visit 10 to 15 Website and EARN 5$
CineMa Tickets Booking Online
நண்பரே நன்றிகள். பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் வழங்குகின்ற உற்சாகமான வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றிகள்.
Post a Comment