1848ம் ஆண்டு நயாகாரா நீழ்வீழ்ச்சியில் அரை மணி நேரம் நீர் கொட்டவில்லையாம். ஏனெனில் நயாகாராவுக்கு நீர் வழங்குகின்ற பிரதான ஆற்றிலிருந்து நீர் வருவதனை பனிக்கட்டிகள் தடுத்துவிட்டமை தான் காரணமாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உலகில் தனது பெயரின் இறுதியில் வியப்புக்குறியினைக்(!) கொண்ட ஒரே இடம்.......
தனது பெயரின் இறுதியில் வியப்புக்குறியினைக்(!) கொண்டு அமைந்துள்ள உலகின் ஒரே இடம்- Westward Ho!
இது டேவொன்,இங்கிலாந்தில் அமைந்துள்ள ஒரு கரையோரக் கிராமமாகும்.
***************************************
ரொஜர் பெடரர் ஒரு கிரிக்கெட் பிரியராம்!!!
டென்னிஸ் வரலாற்றில் ஆடவர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ள சுவிற்சர்லாந்து நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் ஒரு கிரிக்கெட் பிரியராம் என்பது ஒரு சுவாரஸ்சியமான விடயமாகும்.
ரொஜர் பெடரரின் தாயார் தென்னாபிரிக்கா நாட்டினைச் சேர்ந்தவராம் . தென்னாபிரிக்கா நாடானது கிரிக்கெட் விளையாட்டுக்குப் பேர் போன நாடாகும். அந்தவகையில் ரொஜர் பெடரருக்கு கிரிக்கெட் விளையாட்டினைப் பிடிக்குமாம்.
டென்னிஸ் நட்சத்திரம் ரொஜர் பெடரர் இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களினை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

***
6 comments:
நயாகராவுக்கு இப்பிடி ஒரு வரலாறா
தகவலுக்கு நன்றி லோகநாதன்
தெரியாத செய்திகள் - நன்றிகள்!
Nayagara....super information!
நன்றிங்க..
நண்பர்களே அன்பின் நன்றிகள் ........
Wah
Post a Comment