
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது நம்மிடையே பொதுவாக பாவனையிலுள்ள ஒரு பழமொழி ஆகும். உப்பிலுள்ள போதுமானளவு சோடியமானது நம்முடைய என்புகளின் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றது. எம்முடைய உணவில் அதிகளவு உப்புச் சேர்வதன் காரணமாக உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் [Type 2] ஆகியன ஏற்படுவதற்கு உப்பு காரணமாகின்றதாம்.
உலக சுகாதார அமையம் மற்றும் உணவு விவசாய அமையம் ஆகியவற்றின் அறிக்கையின் பிரகாரம் ஒருவர் நாளொன்றுக்கு 5கிராமுக்கும் [2கிராம் சோடியம்] குறைவான சோடியம் குளோரைட்டினையே நுகரவேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம் இரத்தத்தில் உப்பானது உணவின் மூலமாகவே பிரவேசித்து, இதன் காரணமாக இரத்தத்தின் அழுத்த நிலையானது பாதிக்கப்படுகின்றதாம்.
ஒருவர் குறைந்தளவு உப்பினை நுகர்வதன் காரணமாக இருதய நோய்கள், மூளை கட்டிகள் போன்ற நோய்களின் பாதிப்புக்களுக்கு ஆட்படுவது குறைந்தளவே ஆகும். 1 கிராம் சோடியம் குளோரைட் என்னும் போது இது 393.4 மில்லிகிராம் சோடியமாகும். அமெரிக்க சுகாதார திணைக்கள தகவலின் பிரகாரம், அமெரிக்கா முழுவதும் ஸ்ரோக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் காரணமாக 8லட்சம் பேர் மரணிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிகளவு உப்பினை நுகர்வதன் காரணமாக சிறுநீரக கற்கள் தொடர்பிலான நோய்கள், ஒஸ்ரியோபொரொசிஸ், வாயுத் தொல்லை, புற்று நோய் ஆகியன ஏற்படுவதற்கு இது வழிவகுப்பதாக கண்டறிந்துள்ளனர்.
எம்முடைய சாதாரண உடம்புக்கு அத்தியாவசியமாக அயடின் தேவைப்படுகின்றது என்பது முக்கியமானதாகும். அதேவேளை எம்முடைய உணவில் உப்பின் அளவினைக் குறைந்தளவு பேணுவோம், நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.
குறிப்பு - நாம் நாளொன்றுக்கு 3கிராம் உப்பினை நுகர்வது போதுமானதாம்.......
***
3 comments:
ரொம்ப நல்ல தகவல் நண்பரே.
நல்ல தகவல்!
நண்பர்களே உங்கள் கருத்துரைக்கு அன்பின் நன்றிகள் ........
Post a Comment