Wednesday, March 24, 2010
தாமரை தொடர்பிலான புதிய ஆய்வுத்தகவல்
அவுஸ்ரேலியாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தாமரைப்பூவிற்கு தன்னுடைய வெப்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய அற்புதமான சக்தி இருக்கிறது என்பதனை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஒரு தாமரைப்பூவால் 30 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பத்தை உற்பத்தி செய்ய செய்ய முடியும். வெளியே உள்ள சீதோஷ்ணம் 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைவாக இருந்தாலும் அது அதிகமான வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு தாமரைப்பூ ஒரு வாட் உஷ்ணத்தை உற்பத்தி செய்கிறபடியால் 40 தாமரைப்பூக்கள் ஒரு 40 வாட்ஸ் மின்குமிழை எரியத்தக்க உஷ்ணத்தை உற்பத்தி செய்ய முடியும். எப்படி இந்த மலரால் இத்தகைய காரியத்தை செய்ய முடிகின்றது. அதாவது வெப்பத்தை உற்பத்தி செய்கின்றது என்பதனை விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியாத புதிராக உள்ளதாம்.
இந்த மலரிலுள்ள வெப்பம் வண்டுகளையும் மற்ற பூச்சிகளையும் ஈர்க்கின்றது. அவைகள் இந்த மலருக்குள் அதிக நேரத்தை செலவழிக்கின்றன. இரவில் தாமரைப்பூ தன்னுடைய இதழ்களை மூடிக்கொள்ளும்போது, இந்தப் பூச்சிகளுக்கு வெளியே இருக்கின்ற குளிரிலிருந்து நல்ல வெப்பமான வீட்டை அமைத்து தருகின்றது. தாமரைப்பூவிற்குள் வண்டுகள் உணவினை உண்டு, இனப்பெருக்கம் செய்கிறது. வண்டுகள் மேல் தாமரை மலரின் மகரந்தம் முழுவதுமாக மூடிவிடுகின்றது. காலையில் வெளியே செல்லும்போது அவை வேறு இடத்தில் தாமரைச்செடிகள் உண்டாக உதவி செய்கின்றது.
தாமரைப்பூ போலவே இன்னும் இரண்டு வகையான செடிகள் தங்களுடைய வெப்பத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிகின்றது.
***
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment