Showing posts with label சுவையான தகவல்கள். Show all posts
Showing posts with label சுவையான தகவல்கள். Show all posts

Saturday, December 1, 2012

"E" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தாமல் ஆங்கில நாவல் எழுதியவர்....!


உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள்......


√ பேரரசர் கலிகுலா ஒரு தடவை உரோமன் கடல் தெய்வத்திற்கெதிராக[Poseidon - பொசிடொன்] போர்ப்பிரகடனம் செய்து, அம்புகள் மூலம் எழுந்தமானமாக தாக்குமாறு தமது போர்வீரர்களுக்கு கட்டளை பிறப்பித்தாராம்.

√ உலகப் புகழ்பெற்ற டச்சு நாட்டினைச் சேர்ந்த சித்திரக்கலைஞர் வின்சென்ட் வான் கோ அவர்கள் தனது வாழ்நாளில் தன்னுடைய சித்திரங்களில் ஒன்றினையே விற்பனை செய்தாராம்.



√ முதலாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் கண்டிப்பான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில், செல்வந்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் தட்டையான தொப்பியினை அணியவேண்டும் என்பதே அந்த சட்டமாகும்.

1714ம் ஆண்டு இங்கிலாந்து மன்னனாக முடிசூடிக்கொண்டவர் 1வது ஜோர்ஜ் ஆவார். ஆனால் இவரது மனைவி இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக வரவேயில்லையாம். மகாராணியாக இருக்கவேண்டிய மனைவி 32 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாராம்.

√ மிகச்சிறந்த போர்வீரனாக விளங்கிய இங்கிலாந்தினைச் சேர்ந்த தளபதி அட்மிரல் நெல்சனின் உயரம் 1.6 மீற்றர்கள்தானாம், அதாவது 5 அடி 2 அங்குலம்.

√ ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த எர்னெஸ்ட் வின்சென்ட் ரைட் அவர்கள் எழுதிய "கட்ஸ்வை" என்கின்ற ஆங்கில நாவல் 50000 சொற்களைக் கொண்டிருந்தது, ஆனால் இந்த நாவலில் "E"  என்கின்ற எழுத்து ஒரு தடவைகூட பயன்படுத்தவிலையாம்.

 √ உகண்டா நாட்டினை ஆட்சிசெய்த கொடுங்கோலன் சர்வாதிகாரி இடி   ஆமின், பதவிக்கு வரும்முன் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேவகனாக பணிபுரிந்தவனாம்.



***

Sunday, October 21, 2012

உலக அப்பிள் தினம் → அக்டோபர் 21



அக்டோபர் மாதம் 21ம் திகதி உலக அப்பிள் தினமாகும். அந்தவகையில் அப்பிள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்.

Ø  உலகளாவியரீதியில் 7500இற்கும் மேற்பட்ட அப்பிள் வகைகள் உள்ளன.



Ø  வாழைப்பழங்கள், தோடம்பழங்கள், திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்கை பண்ணப்படுவது அப்பிள் பழங்கள் ஆகும்.

Ø  கஸ்பியன் மற்றும் கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.

Ø  கி.மு 6500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் அப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான எச்சங்களினை புதைபொருளியலாளர்கள்/ தொல்பொருளியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Ø  அப்பிள் மரங்கள், ஒரு அப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.

Ø  அப்பிள் மரங்களில் சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவையாகும்.

Ø  புராதன உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக அப்பிள் விளங்கியது.

Ø  அப்பிள்கள் மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.

Ø  அப்பிளின் இரசாயனவியல் பெயர்; "அப்ளிகுஸ் ரோசாசியா"

Ø  அப்பிள் மரங்கள் 4 5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க தொடங்குகின்றன.



Ø  தூய அப்பிள் பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் அப்பிள் பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.

Ø  அப்பிள் பழங்களின் தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetin அடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.

Ø   நடுத்தர அளவினை உடைய ஒரு அப்பிளில் 80 கலோரி சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.

Ø  உலகில் அதிகளவில் அப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% வகிபாகம்) , ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சிலி.

Ø  ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க அப்பிள் பழங்களே காரணமாகும். 



Ø  "தினசரி ஒரு அப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரினை நாடவேண்டிய தேவையே இருக்காது" என்பது உலகளாவியரீதியிலான ஒரு பிரபல்யமான மருத்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு கனிப்பொருட்களினை அப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.

***

Thursday, October 27, 2011

1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாளைக் கொண்டுள்ள தாவரம் ....!!!



பார்ப்பதற்கு ஒக்டோபஸ் போன்று காட்சியளிக்கும் வெல்விட்ச்சியா என்கின்ற இந்த தாவரத்தின் சிறப்பியல்பு யாது தெரியுமா ?.... 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாட்களைக் கொண்டுள்ள வெல்விட்ச்சியா, ஆபிரிக்காவின் நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளின் பாலைவனங்களில் வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது இரண்டு இலைகளைக் கொண்டுள்ளன, அவை பல்வேறு சிறிய துண்டுகளாக வளர்கின்றன. வெல்விட்ச்சியா தாவரமானது பாலைவனத்திலுள்ள சிறிய விலங்குகளுக்கு தங்குமிடமாக விளங்குகின்றன அத்துடன் இவை பாலைவன வாழ்க்கையில் முக்கிய வகிபாகத்தினை வகிக்கின்றன.



இந்த தாவரமானது 2 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியதாகும்.வெல்விட்ச்சியா அருகிவரும் தாவரங்களில் ஒன்றாக இருப்பதனால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை செய்யப்பட்டிருப்பினும் அதனது விதைகளுக்காக காடுகளிருந்து சட்டவிரோதமாக விலைபோகின்றன.

இந்த இனங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதனால் இவை பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.



இந்த தாவரத்தினை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஒஸ்ரியா நாட்டினை சேர்ந்த தாவரவியலாளர் பிரீட்ரிச் வெல்விட்ச்(1806-1872) ஆவார் . இவர் 1860ம் ஆண்டு அங்கோலா நாட்டின் தன் பாகத்திலுள்ள நமிப் பாலைவனத்தில் கண்டுபிடித்தார். பிரீட்ரிச் வெல்விட்ச் மகத்தான தாவரவியல் ஆராய்ச்சிக்காகவும், முதன்முதலில் கண்டறிந்து சேகரித்தமைக்காகவும் இத்தாவரமானது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.

***

Thursday, November 4, 2010

உங்களுக்குத் தெரியுமா?............

நீரினை விடவும் சனிக்கிரகம் அடர்த்தி குறைந்ததாகும்.....
சனிக்கிரகத்தின் அடர்த்தியானது(0.687 g/cm3), நீரின் அடர்த்தியினை விடவும் குறைவாகும்(0.998 g/cm3). அதாவது நீரில் சனிக்கிரகத்தினை இட்டால் சனிக்கிரகமானது மிதக்கும் எனலாம். சனிக்கிரகத்தின் விட்டம் 120,536 km ஆகும்.



===============================================

வீதியின் குறுக்காக விமான ஓடுபாதைகள்
புகையிரதப்பாதைகளின் சந்திப்பு, அல்லது பஸ் பாதைகளின் சந்திப்பு அல்லது பாலங்களின் கீழே கப்பல் பாதைகளின் சந்திப்பு தொடர்பாகவே நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்படியாயின் நீங்கள் விமானங்கள், வாகனப் போக்குவரத்துப்பாதையில் சந்திப்பது, குறுக்கிடுவது தொடர்பாக கேள்விப்பட்டதுண்டா?

ஆம்...... கீழே உள்ள படங்களில் வீதியின் குறுக்காக விமானம் தரித்திருப்பதன் காரணத்தினால் வாகனங்கள் காத்திருப்பதனை காண்கின்றீர்கள்.
ஆமாம்.........வீதியின் குறுக்கே காணப்படும் இந்த விமான ஓடுபாதைகள் ஜேர்மனி நாட்டில் காணப்படுகின்றதாம்.





===========================================

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை துவம்சம் செய்த இலங்கை அணி.......

நேற்று அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கிடையிலான Commonwealth Bank கிண்ணத்துக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 01 விக்கட் வித்தியாசத்தில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்தது.

340 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 8 விக்கட்களினை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அந்தவகையில் 09 விக்கட்டில் அஞ்சலோ மத்தியூஸ்சுடன் ஜோடி சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஜோடி சாதனைமிகு 132 ஓட்டங்களினைப் பகிர்ந்து 27 ஆண்டுகால சாதனையினை முறியடித்தனர்.



இதற்குமுன்னர் இந்த சாதனையினை 1983ம் ஆண்டு 3வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இந்திய அணியின் கபில்தேவ், மற்றும் சயீட் கிர்மானி ஆகியோர் வீழ்த்தப்படாத 126 ஓட்டங்களினை சிம்பாவே அணிக்கெதிராக மே.தீவுகளின் ரேன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் பெற்றமையே சாதனையாகப் பதிவாகியிருந்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லசித் மாலிங்க(56) , அஞ்சலோ மத்தியூஸ் (77*)ஆகியோர் அரைச்சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றிக்குத் தேவையான ஓட்டத்தினை சாதனை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

=========================================

தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.......




தீபத்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையினை (05.11.2010) கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.....

***

Sunday, October 24, 2010

சிவப்பு நிறம் தொடர்பான சுவையான தகவல்கள்......

 ரஷ்சிய மொழியில் சிவப்பு(Red) என்பதற்கான அர்த்தம் யாதெனில் "அழகானது" என்பதாகும்.

 மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.

சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.

சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

 ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.

 சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.

 சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.

சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.

 புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நிறக்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.

 தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.

 உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.

 ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.




இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் ...

 19ம் நூற்றாண்டில் இத்தாலி தேசத்தினை ஒற்றுமைப்படுத்திய தலைவர் கருபொல்டியின் தலைமையிலான இராணுவவீரர்கள் சிவப்பு ஆடையினையே அணிந்தனராம்.

 பின்னிரவு நேர விமானப் பறப்பினை "Red Eye" என்கின்றனர்.

 ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது சிவப்பு நிறமானது எருதுகளினை கோபப்படுத்துகின்றது என்பது தவறாகும். ஏனெனில் எருதுகள் நிறக்குருடுகளாகும். மாறாக ஜல்லிக்கட்டின்போது அசைக்கப்படும் துணிகளின் அசைவுகளுக்கேற்பவே எருதுகள் கோபத்துடன் செயற்படுகின்றன.

 நம் இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணமானது ஹீமோகுளோபின் என்கின்ற இரசாயனமாகும்.

நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு பிடித்த நிறம் சிவப்பு நிறம்........

அப்படியே இந்தப் பாடலினையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்.....



***

Sunday, October 17, 2010

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 வீரர்களும் பந்துவீசிய சந்தர்ப்பங்கள்...

கிரிக்கெட்டில் ஒரு அணியின் சார்பில் 11 வீரர்கள் விளையாடுவர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு அணியின் 11 வீரர்களும்(விக்கட் காப்பாளர் உட்பட) பந்துவீசிய 04 சந்தர்ப்பங்கள் மாத்திரமே இதுவரை பதிவாகியுள்ளன.

இதன் முதல் சந்தர்ப்பம் 1884ம் ஆண்டு, இங்கிலாந்து த ஓவலில் நடைபெற்ற அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில், ஆஸியின் 1வது இன்னிங்ஸ்சில்(551ஓட்டங்கள்/10) இங்கிலாந்து அணியின் 11வீரர்களும் பந்துவீசியமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் அல்பிரட் லிட்ரால்ரோன் மிகச்சிறப்பாக பந்துவீசி 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 04 விக்கட்களை வீழ்த்தினார்.

1979-80 பருவகாலத்தில் பாகிஸ்தானின் பைசலாபாத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய, பாகிஸ்தான்(382ஓட்டங்கள்/2) அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் 11வீரர்களும் பந்துவீசியமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த டெஸ்ட் போட்டியில் underarm பந்துவீச்சுப் புகழ் கிறேஸ் இடையிடையே விக்கட் காப்பாளராகவும் பணியாற்றினாராம். மழையினால் பாதிக்கப்பட்டு வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் தஸ்லிம் ஆரிப் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்களை பெற்றதுடன் டெஸ்ட் போட்டிகளில் அற்பமாகவே பந்துவீசுகின்ற ஆஸியின் விக்கட் காப்பாளர் ரொட் மார்ஷ் 10ஓட்டமற்ற ஓவர்களினை வீசினாராம்.




2001-02 பருவகாலத்தில் அன்ரிகுவா சென்.ஜோன்ஸ்சில் நடைபெற்ற மே.தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில், மே.தீவுகளின்(629/9) 2வது இன்னிங்ஸ்சில் இந்திய அணியின் 11 வீரர்களும் பந்துவீசினராம். இந்த டெஸ்ட்டில் விக்கட்காப்பாளர் அஜய் ரட்ரா ஒரு ஓவர் பந்துவீசினார். முன்னதாக இந்த டெஸ்ட்டில் அஜய் ரட்ரா இளவயதில் சதம்பெற்ற விக்கட்காப்பாளராக சாதனை படைத்தமை நினைவில் நிற்கின்றது.




டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 வீரர்களும் பந்துவீசிய அண்மைய சந்தர்ப்பமாக 2004-05 பருவகாலத்தில் அன்ரிகுவா சென்.ஜோன்ஸ்சில் நடைபெற்ற மே.தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில், மே.தீவுகளின் 1வது இன்னிங்ஸ்சில் தென்னாபிரிக்க அணியின் 11 வீரர்களும் பந்துவீசினர். இந்த டெஸ்ட் போட்டியில் மே.தீவுகளின் கிறிஸ் கெய்ல் முச்சதம்(317) பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Sunday, September 26, 2010

அறிவியல் துளிகள்.....

சில சுவாரஷ்சியமான அறிவியல் தகவல்களினைக் கொண்ட பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய ஆக்கம்…….





(நன்றிவீரகேசரி வாரவெளியீடு 19.09.2010)
***

Monday, September 20, 2010

உயிரினங்களின் "பற்கள்" தொடர்பான சுவையான தகவல்கள்...

 நத்தைகள் தனது வாயில் 135 பல்வரிசைகளில் மொத்தமாக 14175 பற்களைக் கொண்டுள்ளன.

 எறும்புதின்னிகளுக்கு அதனது வாயில் பற்கள் இல்லை.

 பசுமாடுகளுக்கு மேற்தாடை பற்கள் இல்லை.



 முயல்களின் பற்களானது எப்பொழுதும் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்குமாம்.

 ஆமைகளுக்கு அதனது வாயில் பற்கள் இல்லை.

 யானைகள் அதனது வாயில் 4 பற்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பல்லின் நிறையும் 9-12 பவுண்ட்களுக்கும்(4-5 கிலோகிராம்) அதிகமாம்.



 சுறா மீன்களுக்கு ஒவ்வொரு வாரமும் பற்கள் விழுந்து புதிதாக முளைக்குமாம். இவ்வாறு விழுந்து முளைக்கின்ற பற்கள் காரணமாக, சுறாக்கள் தன் வாழ்நாளில் 20000க்கும் மேற்பட்ட பற்களை கொண்டிருக்குமாம்.

 சில டொல்பின்களுக்கு 200க்கு மேற்பட்ட பற்கள் உண்டாம்.

 விளீன் திமிங்கிலங்களுக்கு(Baleen whales) பற்கள் இல்லையாம்.

 ஒட்டகச்சிவிங்கிகள் மனிதர்களைப் போலவே 32 பற்களைக் கொண்டுள்ளன.

 நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் அதிகமான பற்களைக் கொண்ட உயிரினம் மிக நீளமான ஆர்மடில்லோக்கள் ஆகும். இவை தன் வாயில் 100க்கும் மேற்பட்ட பற்களைக் கொண்டுள்ளன

***

Thursday, September 2, 2010

ஒலிம்பிக் சாம்பியனுக்கு ஹிட்லர் வழங்கிய ஓக் மர அன்பளிப்பு...!!!



1936ம் ஆண்டு 11வது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனியின் பேர்லினில் நடைபெற்ற காலகட்டத்தில் ஜேர்மனியின் அதிபராக அடோல்ப் ஹிட்லர் ஆட்சி செய்தார். அந்த ஒலிம்பிக்கில் அதிதியாக அழைக்கப்பட்டவர் ஹிட்லர். அதிதியான ஹிட்லர், தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ஓக் மரக்கன்றுகளினை அன்பளிப்பாக வழங்கினார். அப்படி ஓக் மரக்கன்றினை பெற்றவர்களில் இங்கிலாந்தினைச் சேர்ந்த "ஹரோல்ட் விற்லொக்" அவர்களும் உள்ளடங்குகின்றார். ஹரோல்ட் விற்லொக், பேர்லின் ஒலிம்பிக்கில் 50 கிலோமீற்றர் நடைப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவராவார். விற்லொக், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த ஓக் மரக்கன்றினை வடக்கு லண்டனில் தான் கல்விகற்ற பழைய பாடசாலையில் நட்டார்.


ஹரோல்ட் விற்லொக்


இதன் காரணத்தினால் அந்த ஓக் மரத்துக்கு "ஹிட்லர் ஓக் மரம்"[“Hitler Oak”] என்ற செல்லப் பெயர் வழங்கப்பட்டு வந்தது. இது 70 ஆண்டுகளாக 50அடி நிலப்பரப்பில் வியாபித்திருந்தது. 2007ம் ஆண்டு இந்த மரத்தினை பங்கஸ் நோய் தாக்கியது, இதன் காரணமாக அங்கு கல்விபயில்கின்ற மாணவர்களுக்கு தீங்கு ஏற்படலாம் என்று கருதி இந்த ஓக் மரம் அங்கிருந்து வெட்டி அகற்றப்பட்டது. இந்த ஓக் மரமிருந்த இடத்தில் ஹரோல்ட் விற்லொக்கின் பேரன், ரோஸ் தனது வீட்டில் வளர்த்துவந்த ஒலிம்பிக் ஓக் மரத்திலிருந்து உருவாகிய மரக்கன்றுகளிலிருந்து ஒன்றை வழங்கினார். இப்பொழுது இந்த புதிய ஓக் மரத்தின் செல்லப் பெயர் "ஹிட்லர் ஓக் மரத்தின் மகன்" [“Son of Hitler Oak”] என்பதாக மாற்றமடைந்துவிட்டதாம்.

***

Wednesday, September 1, 2010

ஆண் மீன், பெண் மீனாக மாற்றமடையும் இயற்கையின் அதிசயம்.......!!!

☼ வர்ரமுண்டி[Barramundy] என்கின்ற மீனினமானது ஆண் மீனினமாக வளருமாம், ஆனால் இந்தவகையான மீனினங்கள் 2 ஆண்டுகளின் பின்னர் பெண் மீனினமாக மாற்றமடைந்துவிடும் இயல்பினை கொண்டவையாகுமாம்.



மின்சார மீன்கள்.......!!!

☼ ஸ்கேட்ஸ், ரேஸ் போன்ற வகை மீன்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மீன்களாக உள்ளன. இந்த மீன்களின் தலைப்பாகத்தில் கண்களுக்குப் பின்னால் சிறிய உறுப்புக்கள் உள்ளன. இவை மின்சாரக் கதிர்களை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சாரக் கதிர்கள் மீன்களின் இரையை சென்றடையும்போது அதிர்ச்சியடைந்ததுபோல ஆகிவிடுகின்றன. அப்பொழுது இவ்வகை மீன்கள் அதிர்ச்சி வாங்கிய இரையை உணவாக உண்கின்றன.

வேகமாக நீந்தும் மீனினம்
☼ செய்ல்பிஷ்[sailfish] என்கின்ற மீன் இனமே மிக வேகமாக நீந்துகின்ற மீன் வகையாகும். இதன் வேகம் மணிக்கு 109கிலோமீற்றர்(68மைல்) ஆகும்.



மெதுவாக நீந்தும் மீனினம்

☼ கடற் குதிரை[Sea Horse] மீன் இனமே மிக மெதுவாக நீந்துகின்ற மீன் வகையாகும். இதன் வேகம் மணிக்கு 0.016கிலோமீற்றர்(0.01மைல்) ஆகும்.




***

Saturday, August 21, 2010

பிரட்மன் 299 Not Out.......!!!



கிரிக்கெட்டின் பிதாமகன் "சேர்" டொனால்ட் பிரட்மன் டெஸ்ட்டில் ஆட்டமிழக்காமல் 299 ஓட்டங்களை பெற்றிருந்தபோது நடைபெற்ற சம்பவம் யாது?....

1931/32 கிரிக்கெட் பருவகாலத்தில் தென்னாபிரிக்க அணியானது அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதன்போது அடிலெய்ட்டில் நடைபெற்ற 4வதுடெஸ்ட்டில் ஆஸி அணி 9விக்கட்களை இழந்து 499 ஓட்டங்களை பெற்றிருந்தபோது இறுதி விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த பிரட்மன் மற்றும் பட் துர்லோவ் ஆகியோர் 14 ஓட்டங்களை இணைப்பாட்ட பெற்றிருந்தனர். மேலும் ஓட்டமொன்றைப் பெற முனைகையில் பட் துர்லோவ் ரன் முறையில் ஆட்டமிழக்கின்றார். அந்தவேளையில் டொன் பிரட்மன் 299ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் இருந்ததுடன் ஒரு ஓட்டத்தினால் அவரின் முச்சதமும் தவறிப்போய்விட்டது.

பட் துர்லோவ் விளையாடிய ஒரேயொரு டெஸ்ட் போட்டியும் அதுவே.அவரின் மொத்த ஓட்டங்கள் 0. வீழ்த்திய விக்கட்கள் 0.

***

Tuesday, August 17, 2010

99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் ஒருநாள் போட்டியில் பெற்றவர்கள்....!!!




இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெற்றுவருகின்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று பகலிரவுப் போட்டியாக இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி 6விக்கட் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றமை நீங்கள் அறிந்ததே... இந்தப் போட்டியானது இலங்கை அணி தனது சொந்த மண்ணில் அதிக பந்துகள்(93பந்துகள்) வித்தியாசத்தில் தோல்வியடைந்த சர்வதேச ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

171ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் 99ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் விசேட அம்சம் யாதெனில் சுராஜ் ரன்டீவ் 35வது ஓவரினை வீசிய அழைக்கப்பட்டபோது சேவாக் 99ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். முதல் பந்தில் உதிரியாக 4 ஓட்டங்கள் பெறப்பட இந்திய அணி 1 ஓட்டத்தினைப் பெற்றால் வெற்றி என்ற நிலையிருந்தது. 2வது,3வது பந்தினை சேவாக் தடுத்தாட, 4வதாக வீசப்பட்ட பந்து நோ போலாக[No Ball] வீசப்பட அந்த பந்தில் சேவாக் 6ஓட்டங்களைப் பெற்றாலும் நோ போலுடன் வெற்றி இலக்கு எட்டப்பட சேவாக் 99ஓட்டங்களை மாத்திரமே பெற்றதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்வானது மிக "அரிய" நிகழ்வாக ஒருநாள் சரித்திரத்தில் பதிவாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஒருநாள் போட்டியில் 99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றவர்கள்....


புருஸ் எட்கர்(நியூசிலாந்து Vs இந்தியா), ஒக்லண்ட், 1980/81

டீன்ஸ் ஜோன்ஸ்(ஆஸி Vs இலங்கை), அடிலய்ட், 1984/85

ரிச்சி ரிச்சர்ட்சன்(மே.தீவுகள் Vs பாகிஸ்தான்), சார்ஜா, 1985/86

அன்டி பிளவர்(சிம்பாப்வே Vs ஆஸி), ஹராரே, 1999/00

அலிஸ்ரெயர் கெம்பல்(சிம்பாப்வே Vs நியூசிலாந்து), புளவாயோ, 2000/01

ராம் நரேஷ் சர்வான்(மே.தீவுகள் Vs இந்தியா), அஹமதாபாத், 2002/03

பிறொட்ஜ் ஹொட்ஸ்(ஆஸி Vs நியூசிலாந்து), மெல்பேர்ன், 2006/07

முஹமட் யூசுப்(பாகிஸ்தான் Vs இந்தியா), குவாலியூர், 2007/08

மைக்கல் கிளார்க்(ஆஸி Vs இங்கிலாந்து), ஓவல், 30.06.2010

விரேந்தர் சேவாக்(இந்தியா Vs இலங்கை), தம்புள்ளை, 16.08.2010

சிறப்பம்சங்கள்:

 புருஸ் எட்கர், டீன்ஸ் ஜோன்ஸ், அன்டி பிளவர், ராம் நரேஷ் சர்வான், மைக்கல் கிளார்க் ஆகியோர் 99 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றபோது முழுமை ஓவர்களும் பந்துவீசி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 ரிச்சி ரிச்சர்ட்சன், அலிஸ்ரெயர் கெம்பல் ஆகியோர் தமது 99வது ஓட்டத்தினை ஆட்டமிழக்காமல் பெற்றபோது அணியின் வெற்றி இலக்கினையும் அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இதுவரையும் 31 துடுப்பாட்ட வீரர்கள் 99 ஓட்டங்களை ஆட்டமிழந்தோ/ ஆட்டமிழக்காமலோ ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்றுள்ளனர்.

***

Thursday, August 5, 2010

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு முறை நிகழ்த்தப்பட்ட சாதனை......

ø சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமாகி 40 ஆண்டுகளை அண்மிக்க இந்த தருணத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு முறை நிகழ்த்தப்பட்ட சாதனை தொடர்பான திவு.....
÷ சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றிய நிகழ்வானது ஒரேயொரு முறையே நடந்துள்ளது என்பது ஆச்சரியமான விடயமே.......

ö 1977ம் ஆண்டு பருவகாலத்தில் இங்கிலாந்து அணியானது அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்து எட்ஸ்வஸ்டனில் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியினை, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் துவம்சம் செய்தனர். இதில் ஆஸியின் கிரேக் செப்பல் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களினையும், கெரி கோசியர் 18 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களினையும் கைப்பற்றி சாதனை படைத்தனர். இதுவே, ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் போட்டியொன்றில் இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 05விக்கட்கள் வீதம் கைப்பற்றியது 52 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.... இதில் இறுதி சந்தர்ப்பமாக இந்திய அணி, பங்களாதேஷ்சில் மோதிய டெஸ்ட்டில் பங்களாதேஷ்சின் பந்துவீச்சில் சஹடாட் ஹொசைன் 5/71 மற்றும் சஹீப் அல் ஹசன் 5/62 பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

==============================


உலகக் கிண்ண கிரிக்கெட் ~ 2010 ஞாபகார்த்த குறியீட்டுச் சின்னம்......



இலங்கை,இந்தியா,பங்களாதேஷ்சில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் ~ 2010க்கான ஞாபகார்த்த சின்னம் அண்மையில் இலங்கையில் உத்தியோகபூர்வ வெளியிடப்பட்டது.
இந்த குறியீட்டுச் சின்னத்துக்கு "ஸ்டம்பி[Stumpy]" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

=============================

வீரகேசரி நாளிதழுக்கு அகவை "80".....!!!




இலங்கையின் முன்னணி தமிழ் நாளிதழ் "வீரகேசரி"
நாளை[06-08-2010] அகவை எண்பதில் தடம் பதிக்கின்றது.

அமுத விழா கொண்டாடும் "வீரகேசரி" நாளிதழுக்கு வாழ்த்துக்கள்.............

***
Blog Widget by LinkWithin