Showing posts with label தெரியுமா உங்களுக்கு. Show all posts
Showing posts with label தெரியுமா உங்களுக்கு. Show all posts

Wednesday, September 1, 2010

ஆண் மீன், பெண் மீனாக மாற்றமடையும் இயற்கையின் அதிசயம்.......!!!

☼ வர்ரமுண்டி[Barramundy] என்கின்ற மீனினமானது ஆண் மீனினமாக வளருமாம், ஆனால் இந்தவகையான மீனினங்கள் 2 ஆண்டுகளின் பின்னர் பெண் மீனினமாக மாற்றமடைந்துவிடும் இயல்பினை கொண்டவையாகுமாம்.



மின்சார மீன்கள்.......!!!

☼ ஸ்கேட்ஸ், ரேஸ் போன்ற வகை மீன்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மீன்களாக உள்ளன. இந்த மீன்களின் தலைப்பாகத்தில் கண்களுக்குப் பின்னால் சிறிய உறுப்புக்கள் உள்ளன. இவை மின்சாரக் கதிர்களை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சாரக் கதிர்கள் மீன்களின் இரையை சென்றடையும்போது அதிர்ச்சியடைந்ததுபோல ஆகிவிடுகின்றன. அப்பொழுது இவ்வகை மீன்கள் அதிர்ச்சி வாங்கிய இரையை உணவாக உண்கின்றன.

வேகமாக நீந்தும் மீனினம்
☼ செய்ல்பிஷ்[sailfish] என்கின்ற மீன் இனமே மிக வேகமாக நீந்துகின்ற மீன் வகையாகும். இதன் வேகம் மணிக்கு 109கிலோமீற்றர்(68மைல்) ஆகும்.



மெதுவாக நீந்தும் மீனினம்

☼ கடற் குதிரை[Sea Horse] மீன் இனமே மிக மெதுவாக நீந்துகின்ற மீன் வகையாகும். இதன் வேகம் மணிக்கு 0.016கிலோமீற்றர்(0.01மைல்) ஆகும்.




***

Tuesday, August 24, 2010

"6" என்ற பெயரில் ஒரு நகரமா?

 அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகம் கங்காரு என்பது நாமறிந்ததே... கங்காருக்களில் 50க்கு மேற்பட்ட வகைகள் உண்டாம்.

 கடல் மட்டத்திற்கு கீழே நிலப்பகுதியினைக் கொண்டிராத ஒரே கண்டம் அந்தாட்டிக்கா கண்டமாகும்.




 உலகிலுள்ள எல்லா அணு ஆயுதங்களும் கூட்டாக வெளிப்படுத்துகின்ற சக்தியினை விடவும் அதிகமான சக்தியினை 10 நிமிட சூறாவளி ஏற்படுத்துகின்றதாம்.

 கெட்பிஷ் (பூனை மீன் ~ Catfish) 100,000 சுவை அரும்புக்களைக் கொண்டுள்ளதாம்.
ஆனால் மனிதர்களுக்கு 10,000 சுவை அரும்புகள்தான் உண்டாம்.

 ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இல்லையாம். ஆனால் ஆபிரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் உண்டாம்.

 ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவிலுள்ள ஒரு நகரமானது "6 " என்றே அழைக்கப்படுகின்றது.

 குளிர் நீரினை விட சூடாக்கிய நீரே நிறை கூடியதாகும்.

 நீல நிறத்தினைப் அடையாளங் காணக்கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டும்தான்.

 மண்புழுக்கள் 5 இதயங்களைக் கொண்டுள்ளன.

 வேபி ரொபின் பறவைகள், மண்புழுக்களினை விரும்பி உண்ணுமாம். அவை நாளாந்தம் உண்ணும் மண்புழுக்களிள் மொத்த நீளம் சராசரியாக 14அடியளவிலாகும்.




***
Blog Widget by LinkWithin