மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.
சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.
சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.
சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.
சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.
சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.
புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நிறக்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.
தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.
உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.
ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.
இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் ...
19ம் நூற்றாண்டில் இத்தாலி தேசத்தினை ஒற்றுமைப்படுத்திய தலைவர் கருபொல்டியின் தலைமையிலான இராணுவவீரர்கள் சிவப்பு ஆடையினையே அணிந்தனராம்.
பின்னிரவு நேர விமானப் பறப்பினை "Red Eye" என்கின்றனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது சிவப்பு நிறமானது எருதுகளினை கோபப்படுத்துகின்றது என்பது தவறாகும். ஏனெனில் எருதுகள் நிறக்குருடுகளாகும். மாறாக ஜல்லிக்கட்டின்போது அசைக்கப்படும் துணிகளின் அசைவுகளுக்கேற்பவே எருதுகள் கோபத்துடன் செயற்படுகின்றன.
நம் இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணமானது ஹீமோகுளோபின் என்கின்ற இரசாயனமாகும்.
நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு பிடித்த நிறம் சிவப்பு நிறம்........
அப்படியே இந்தப் பாடலினையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்.....
***
5 comments:
நிறைய புதிய தகவல்கள் நன்றி நண்பரே!
naan therinjikanumnu aasai pattadhai correct'ana time la soliteenga.. thank u so much
இடது சாரித்தலைவர் போல்ஸ்விக் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.அது தவறு.அவர் பெயர் வி.இ.லெனின்.போல்ஸ்விக் என்றால் புரட்சிக்காரன் என்று அர்த்தம்.
நண்பர்களின் கருத்துரைகளுக்கு நன்றிகள்......
சுட்டிக்காட்டியமைக்கு சகோதரி பரிமளாவுக்கு நன்றிகள்...
அருமையான் பதிவு. பல பயனுள்ள் விடயங்கள். எனக்கு பிடித்தது ரத்தச்சிவப்பு .
நன்றி பாராட்டுக்கள்
Post a Comment