ஐக்கிய அமெரிக்காவின் 8வது ஜனாதிபதியாக பதவிவகித்தவர் மார்ட்டின் வான் வுரென் ஆவார். இவர் அவரின் சுயசரிதையில் தன்னுடைய மனைவியினைப் பற்றி ஒரு வார்த்தையினைக்கூட எழுதவில்லையாம்.
சிறு வயதிலேயே இசை மேதையாக விளங்கி உலகப்புகழ்பெற்ற மொசார்ட் பள்ளிக்கு சென்றதே இல்லையாம்.
சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபேக்கு பிரித்தானிய அரசாங்கமானது 1994ம் ஆண்டு கெளரவ “சேர்” பட்டத்தினை வழங்கி கெளரவித்தது, ஆனாலும் அந்த கெளரவ “சேர்” பட்டத்தினை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய அரசாங்கமானது 2008ம் ஆண்டு அறிவித்தது.
கியூபாவில் சோசலிச ஆட்சியை நிறுவிய பெருமைக்குரிய புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் தனது ஜனாதிபதிப் பொறுப்பினை 2008ம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார் என்பது நீங்கள் அறிந்ததே. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நீண்ட நேரம் உரையாற்றிவர் என்ற பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் 1960ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் திகதி ஐ.நா பொதுச்சபையில் 4 மணித்தியாலங்கள் 29 நிமிடங்கள் உரையாற்றி சாதனை படைத்தார்.
சார்பியல் கொள்கையின் தந்தை அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஆவார். இவரின் அருகாமையிலிருந்த தாதிக்கு ஜேர்மனி மொழி தெரியாதனால், இவரின் மரணத்துடன் இவரின் இறுதிவார்த்தையும் மரணித்துவிட்டதாம்.
================================================
ஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்ற நாடுகளில் "சர்வதேச சிறுவர் தினம்" நவம்பர் மாதம் 20ம் திகதி கொண்டாடப்பட்டாலும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியே சிறுவர் தினமாகும். உலகில் 1954ம் ஆண்டு முதல் ஐ.நா உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் சிறுவர்களின் மீதான வன்கொடுமைகள் கவலையினை ஏற்படுத்துகின்ற விடயமாகும். மகிழ்ச்சியாக வாழவேண்டிய குழந்தைகள் இளம்வயதிலே பல்வேறு கஷ்டங்களினை அனுபவிக்கின்றனர். சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுதல் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் சிறுவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
உலக தொழிலாளர் அமையத்தின் தகவல்களின் பிரகாரம் 5-14 வயதிற்கிடைப்பட்ட 165மில்லியன் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் வாழ்வில் சந்தோசங்களே தொடரவேண்டும்.
===============================================
உலகில்1990ம் ஆண்டு முதல் ஐ.நா "சர்வதேச முதியோர் தினம்" கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய உலக சனத்தொகையில் 10பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும், 2050ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் 5பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும், 2150ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் 3பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும் விளங்குவர் என எதிர்வுகூறப்படுகின்றது.
அந்தவகையில் முதியோர்தொகையின் அதிகரிப்பானது உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்காசியாவில் 60 அல்லது 60 வயதினை தாண்டிய முதியோர் அதிக எண்ணிக்கையில் காணப்படும் நாடாக இலங்கையே விளங்குகின்றது.
முதியோரின் தேவைகளினை பூர்த்திசெய்ய எம்மால் இயன்றவரை பங்களிப்புச் செய்வோம்......
இன்று சர்வதேச சிறுவர் தினம்......

"சிறுவர்களுக்கு மதிப்பளிப்போம்"
===============================================
இன்று சர்வதேச முதியோர் தினம்......
உலகில்1990ம் ஆண்டு முதல் ஐ.நா "சர்வதேச முதியோர் தினம்" கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய உலக சனத்தொகையில் 10பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும், 2050ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் 5பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும், 2150ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் 3பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும் விளங்குவர் என எதிர்வுகூறப்படுகின்றது.
அந்தவகையில் முதியோர்தொகையின் அதிகரிப்பானது உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்காசியாவில் 60 அல்லது 60 வயதினை தாண்டிய முதியோர் அதிக எண்ணிக்கையில் காணப்படும் நாடாக இலங்கையே விளங்குகின்றது.
முதியோரின் தேவைகளினை பூர்த்திசெய்ய எம்மால் இயன்றவரை பங்களிப்புச் செய்வோம்......
***
2 comments:
தகவல்களுக்கு நன்றி.
நண்பர்களே உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் ........
Post a Comment