Wednesday, September 29, 2010

ஹிட்லரை வியக்கவைத்த இந்திய ஹொக்கி அணி....

ஒரு காலத்தில் ஹொக்கி விளையாட்டு என்றால் இந்திய அணிதான் என்ற நிலையிருந்துவந்தது. ஆனால் இந்த நிலைமை தற்சமயம் மாற்றமடைந்துவிட்டது என்றால் மிகையில்லை எனலாம்.

ஒலிம்பிக்கில் இந்திய ஹொக்கி அணி இதுவரை 8 தங்கப்பதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1928ம் ஆண்டு நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹொக்கி அணி முதன்முதலில் தங்கப்பதக்கம் வென்றது.


"மந்திரக்கோல் மன்னர்" என அழைக்கப்பட்ட தயான் சந்

1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்றன. இதில் 1928 மற்றும் 1932ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தயான் சந் தலைமையிலான இந்திய ஹொக்கி அணி, இறுதிப்போட்டியில் ஜேர்மனியினை 8-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தமது தேச ஹொக்கி அணி தோல்வியடைந்த காரணத்தினால் அப்போதைய ஜேர்மனியின் அரசதலைவராகவிருந்த ஹிட்லர், இந்திய ஹொக்கி அணி தலைவரின் மட்டை மந்திரக்கோலா என சந்தேகித்து அதனை பரிசோதிக்கும்படி தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தயா சந்தின் மட்டை ஹொக்கி மட்டைதான் என உறுதிசெய்யப்பட்டபின்னர் அதனை தான் வாங்குவதாக ஹிட்லர் கூறினார். அந்த ஹொக்கி மட்டையில் தயா சந்தின் ஆட்டோகிராப்பினையும் ஹிட்லர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் ஹொக்கியில் 6 முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி 1960ம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹொக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.


இந்தியா 1980ம் ஆண்டு ரஷ்சியாவின் மொஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹொக்கியில் தமது இறுதி தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது கனவாகவே இருக்கின்றது.

=======================================

உங்களுக்குத் தெரியுமா?....

19வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு சர்சைகளுக்குப் பின்னர் இந்தியாவின், புதுடில்லி நகரில் ஆரம்பமாகவுள்ளன. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த நாடுகளே கலந்துகொண்டாலும் வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டனின் ஆளுகைக்குட்படாத நாடொன்று இந்தமுறை போட்டிகளில் பங்கேற்கின்றது. அந்த நாடு ஆபிரிக்க கண்டத்தினை சேர்ந்த பெல்ஜியத்தின் ஆளுகைக்குட்பட்ட றுவாண்டா நாடாகும்.

றுவாண்டா நாடானது 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுநலவாய அமையத்தில் 54வது நாடாக சேர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

2 comments:

பொன் மாலை பொழுது said...

இவரின் இறுதிக்காலம் மிகவும் வேதனையானது. இங்கு இந்தியாவில் யாரும் இவரை கண்டுகொள்ளவில்லை. இவரின் மெடல்கள் எல்லாம் திருட்டுப்போயின . "இந்தியாவில் இனி ஹாக்கி விளையாட்டு பெருமை இழந்து போகும் " என்று அன்றே சொல்லிவிட்டார். இவரின் சிலை வியன்னா நகரில் உள்ளது. இதுவே இவரின் திறமைக்கு சான்று.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே உங்கள் தகவலுக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றிகள்......

Blog Widget by LinkWithin