Monday, September 13, 2010

உலகில் மிகப்பெரிய மணி......




உலகில் மிகப்பெரிய மணியாக புகழ்பெற்ற "சார் கொலோகொல்" [Tsar-Kolokol] விளங்குகின்றது. ஆனால் இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

"சார் கொலோகொல்" மணியானது, ரஷ்சியாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்சிய அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய கிரம்ளனில் அமைந்துள்ளது. இந்த மணியானது 1733-35ம் ஆண்டளவில் வடிவமைக்கப்பட்டதாகும். இதன்போது இந்த மணியானது 3தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் நிறையானது 400,000பவுண்ட்(180தொன்கள்) ஆகும். இதன் உயரம் 6.14மீற்றர்கள் அத்துடன் இதன் விட்டம் 6.6 மீற்றர்கள் ஆகும். இந்த மணியினை 200இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்தே வடிவமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


1737ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாகவே "சார் கொலோகொல்" மணியில் ஒரு துண்டு உடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த உடைந்த துண்டின் நிறை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் "சார் கொலோகொல்" ம்ணியானது ஒலிப்பதில்லை.


உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணி......



உலகில் ஒலி எழுப்பும் மிகப்பெரிய மணியானது மியன்மாரில் காணப்படுகின்றது. "மின்கன்"[ Mingun] மணியானது மத்திய மியன்மாரில், மண்டலி நகரின் வடக்கே அமைந்துள்ளது.

"மின்கன்" மணியானது 1808ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி பொடவ்பயா மன்னனால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மணியானது 13அடி[3.96மீற்றர்] உயரமானதுடன், இதன் நிறை 90.55 மெட்றிக் தொன்களாகும்.


=================================================


பிரபல பின்னணிப் பாடகி சொர்ணலதா காலமானார்....




தமிழ் திரைப்படத்துறையின் பிரபல பின்னணிப் பாடகி "சொர்ணலதா" தனது 37வது வயதில் நேற்று காலமானார். தனது வசீகரமான குரலால் ரசிகர்களின் அபிமானத்தினை பெற்றிருந்த பாடகி சொர்ணலதா இந்திய அரசின், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினை "கருத்தம்மா" படத்திற்காக பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


சொர்ணலதாவின் இழப்பினால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


போறாளே பொன்னுத்தாயி..... கருத்தம்மா பாடல்வரிகள் இன்றும் என்மனதில் பசுமையானதாக நிலைத்துநிற்கின்றது...

***

No comments:

Blog Widget by LinkWithin