உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள்......
√ பேரரசர் கலிகுலா ஒரு தடவை உரோமன் கடல்
தெய்வத்திற்கெதிராக[Poseidon - பொசிடொன்]
போர்ப்பிரகடனம் செய்து, அம்புகள் மூலம் எழுந்தமானமாக தாக்குமாறு தமது
போர்வீரர்களுக்கு கட்டளை பிறப்பித்தாராம்.
√ உலகப் புகழ்பெற்ற டச்சு நாட்டினைச் சேர்ந்த சித்திரக்கலைஞர்
வின்சென்ட் வான் கோ அவர்கள் தனது வாழ்நாளில் தன்னுடைய சித்திரங்களில் ஒன்றினையே
விற்பனை செய்தாராம்.
√ முதலாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிக் காலத்தில்
இங்கிலாந்து நாட்டில் கண்டிப்பான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமைகளில், செல்வந்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் தட்டையான தொப்பியினை
அணியவேண்டும் என்பதே அந்த சட்டமாகும்.
√ 1714ம் ஆண்டு இங்கிலாந்து மன்னனாக
முடிசூடிக்கொண்டவர் 1வது ஜோர்ஜ் ஆவார். ஆனால் இவரது மனைவி இங்கிலாந்து நாட்டின்
மகாராணியாக வரவேயில்லையாம். மகாராணியாக இருக்கவேண்டிய மனைவி 32 ஆண்டுகள்
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தாராம்.
√ மிகச்சிறந்த போர்வீரனாக விளங்கிய இங்கிலாந்தினைச் சேர்ந்த
தளபதி அட்மிரல் நெல்சனின் உயரம் 1.6 மீற்றர்கள்தானாம், அதாவது 5 அடி
2 அங்குலம்.
√ ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த எர்னெஸ்ட்
வின்சென்ட் ரைட் அவர்கள் எழுதிய "கட்ஸ்வை" என்கின்ற ஆங்கில நாவல் 50000
சொற்களைக் கொண்டிருந்தது, ஆனால் இந்த நாவலில் "E" என்கின்ற எழுத்து ஒரு தடவைகூட
பயன்படுத்தவிலையாம்.
√
உகண்டா நாட்டினை ஆட்சிசெய்த கொடுங்கோலன் சர்வாதிகாரி இடி ஆமின், பதவிக்கு வரும்முன் பிரிட்டிஷ்
இராணுவத்தில் சேவகனாக பணிபுரிந்தவனாம்.
***
3 comments:
புதிய சுவாரசிய தகவல்கள்
நன்றிகள் சகோ....
அப்ப இவ்ர்-"இ"-ன்னு யாருகிட்டேயும் பல்லைக் காட்டாம் எழுதினாருன்னு சொல்லுங்க....
Post a Comment