♫ பறவை இனங்களில்,
மிக நீளமான அலகினைக் கொண்ட பறவை இனம் "அவுஸ்திரேலியன் பெலிகன்" ஆகும்.
இதன் அலகின் நீளம் சராசரியாக 18.5 அங்குலங்கள் (47 சென்ரிமீற்றர்கள்).
இந்த நீர்வாழ்ப்
பறவை இனங்கள் பொதுவாக அவுஸ்திரேலியா, நியூ கினியா, பிஜி, இந்தோனேசியாவின் சில
பகுதிகள், மற்றும் நியூசிலாந்தில் காணப்படுகின்றன.
♫ பறவை இனங்களில்,
அதிக நிறையினைக் கொண்ட பறக்கும் பறவை இனம் "பஸ்ராட்" ஆகும். இதன்
நிறையினை குறிப்பிடுவதாயின் சராசரியாக ஒரு ஆறு வயது மனிதக் குழந்தையின் நிறையினை
ஒத்ததாகும்.
♫ பறவை இனங்களில், வருடாந்தம்
அதிக தூரம் இடம்பெயரும் பறவை இனம் "ஆர்ட்டிக் ரேன்" ஆகும். இவை
வருடாந்தம் 20000 – 25000மைல்கள் (32000 - 40000கிலோமீற்றர்) தூரம் ஆர்ட்டிக் பிராந்தியத்திலிருந்து அந்தாட்டிக்கா பிராந்தியத்திற்கு
பயணித்து மீண்டும் திரும்பி வருகின்றன.
♫ "ஹம்மிங் பேர்ட்" பறவைகள்
செயற்பாட்டிலிருக்கும்போது நிமிடமொன்றுக்கு 300 – 500 தடவைகள் சுவாசிக்கும். "ஹம்மிங் பேர்ட்"
பறவையின் உடற்பருமனில் அண்ணளவாக 20% வகிபாகத்தினை
இதயம் பெறுகின்றது. பறவைகளினையும், அதன் செயற்பாட்டினையும் பொறுத்து "ஹம்மிங்
பேர்ட்" பறவைகளின் இதயத்துடிப்பு நிமிடமொன்றுக்கு 30 – 1500 தடவைகள் ஆகும். "ஹம்மிங்
பேர்ட்" பறவைகள் 10 நிமிடத்திற்கொரு
தடவை சாப்பிட்டுக்கொண்டே இருக்குமாம். இவை நாளாந்தம் அதனது உடல் நிறையில் மூன்றில்
இரண்டு பங்களவான உணவினை உட்கொள்கின்றதாம்.
"ஹம்மிங்
பேர்ட்" பறவைகள் வட அமெரிக்க,
தென் அமெரிக்க நாடுகளில் காணப்படுகின்றன. "ஹம்மிங் பேர்ட்" பறவைகள்
கியூபா நாட்டின் தேசியப் பறவை ஆகும்.
♫ பறவை இனங்களில், நீச்சல் மூலம் இடம்பெயரும் ஒரே பறவை இனம் "மகலன்
பென்குவின்" ஆகும். ஆர்ஜென்ரீனா மாகாணமான ரியாரா டெல் பியுகோவிலிருந்து,
பிரேசில் கரையினை நோக்கி இவை 5000மைல்கள் தூரம்
நீரில் பயணம் செய்கின்றன.
***
3 comments:
அறியாததும் வியக்க வைக்கும் தகவலும்
பகிர்வுக்கு நன்றி
நன்றிகள் சகோ....
தகவல் எல்லாம் அருமை.
உங்களை தொடருகிறேன்!
பாராட்டுக்கள்!
Post a Comment